Posts

Showing posts from May, 2023

கனவுச்சிறை

Image
 கனவுச்சிறை  தேவகாந்தன்  999 பக்கங்கள்  காலச்சுவடு பதிப்பகம்  பள்ளி நாட்களில் இலங்கைத் தீவு குறித்து ஆசிரியர்கள் மூலம் அறிந்திருந்தோம். இந்திய அமைதிப்படை இலங்கை மண்ணில் இருந்த நாட்கள் அவை.  'அமைதிப்படை' ஏன் சண்டை இடுகிறார்கள்? என்றெல்லாம் எண்ணிய வயது அப்போது.  இயக்கங்கள் குறித்த தகவல்கள், தமிழகத்தில் பத்மநாபா உள்ளிட்ட போராளிகளின் படுகொலைகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தன. ராஜீவின் மரணம் ஆறாத வடு ஒன்றை உருவாக்கியிருந்தது. அத்துன்பியல் நிகழ்வுக்குப் பிறகான ஆண்டுகளில் ஈழத் தமிழர் வாழ்வு குறித்து அடிப்படை புரிதல்கள் ஏற்பட்டன.  மலையகத்தமிழர் எனப்படும் இந்திய வம்சாவளியினர், பூர்வீக இலங்கைத் தமிழர், இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் என்றவாறு புரிதல் நீண்டது.  இலங்கைத் தமிழை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்குமளவு அத்தனை இனிமையாக உணர்ந்திருந்தோம் நாங்கள்.  இறுதிக் கட்டப்போர் நடைபெற்ற தருணங்களில் நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக ஒவ்வொரு நாளும் தமிழர் கட்டுப்பாட்டில் இருந்த ஒவ்வொரு இடமாக வீழும்போது சொல்லொணா துயரமொன்று பரவியதை மறுக்க இயலாது. பெரும் உயிரிழப்புகளும், முள்வேலி முகாம்