Posts

Showing posts from December, 2022

நாவல்

Image
 கர்ணன் காலத்தை வென்றவன் சிவாஜி சாவந்த் தமிழில் நாகலட்சுமி சண்முகம் 1339 பக்கங்கள் மின்நூல் மகாபாரதம் போன்ற வண்ணமயமான இதிகாசம் ஒன்று உலகின் வேறெந்த நாட்டிலும் இருக்குமா? தெரியவில்லை.  மகாபாரதத்தை மையப்படுத்தி பீமனின் பார்வையில் எம்டி வாசுதேவன் நாயரின் 'இரண்டாமிடம்', திரௌபதியின் பார்வையில் பிரதீபா ராயின் 'திரௌபதியின் கதை', பிரபஞ்சனின் 'மகாபாரதம்', எஸ் எல் பைரப்பாவின் 'பருவம்' நூல்களைத் தொடர்ந்து வாசிக்க கிடைத்த நூல் சிவாஜி சாவந்தின் 'கர்ணன்'.  மேற்கண்ட நூல்களைப் போன்று 'கர்ணன்' பெரிதாக ஒன்றும் ஈர்த்து விடவில்லை. மிகமிக சாதாரணமான மொழிநடை, தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை அமைத்தது போன்றுள்ளது.  கர்ணனின் தம்பி 'ஷோன்' கர்ணனது ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் போன்ற தகவல்களே புதியவையாக இருந்தன.  வியத்தகு ஆற்றல் கொண்டிருந்த போதிலும் 'சூதபுத்திரன்' என்றவாறு வாழ்வு முழுமையும் ஏளனப்படுத்தப்படுகிறான் கர்ணன்.  கர்ணனின் வளர்ப்பு தந்தை தேரோட்டி அதிரதன், அரச குலத்தை சேர்ந்தவராக தன்னை சொல்லிக் கொள்வது மற்றுமொரு புதிய தகவல்.  அணுகல்- விலகல் போரா

நேர்காணல்கள்

Image
 தொ. பரமசிவன் நேர்காணல்கள் காலச்சுவடு பதிப்பகம்  159 பக்கங்கள்  கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தபோதும், தனது கள ஆய்வுகளையும், பண்பாட்டு ஆராய்ச்சிகளையும் தமிழகக் கோயில்களைச் சார்ந்து அமைத்துக் கொண்ட தொ.பவின் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்.  சென்ற ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் தொ.பவின் நூல்களை மக்கள்  பதிப்புகளாக மிகமிகக் குறைவான விலையில் வெளியிட்டது. அவற்றுள் கடைசியாக வாசித்து முடித்த நூல் இது.  காஞ்சி காமாட்சியம்மன் கோயில், பௌத்தர்களின் சாரதா தேவி கோயிலாக இருந்தமை போன்ற தகவல்கள் முற்றிலும் புதியதாகவும், வியப்பளிப்பதாகவும் இருப்பவை.  திராவிட இயக்கங்கள் எழுச்சி பெற்ற 60களில் மாணவராக இருந்த தொ.ப, பகுத்தறிவு நிரம்பிய, முற்போக்கு சிந்தனை கொண்ட ஆராய்ச்சியாளராக பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார். 'பொதுநலம் பேசுகிறவர்கள் தன்னுடைய கோப உணர்ச்சி கைவிட்டு விடக்கூடாது. அது போல மான அவமானம் பார்க்கக் கூடாது'.  'அப்படி எந்த எதிர்ப்பையும் மீறி செயல்பட்டவர் பெரியார்' என்று குறிப்பிடுகிறார்.  எளிய மனிதர்கள் வணங்கி மகிழும் நாட்டார் தெய்வங்களை குறித்து பெரும் ஈடுபாட்டுடன் ஆராய்ந்து, வியக்க வைக்க

குறுநாவல்கள்

Image
 கறுப்பு வெள்ளைக் கடவுள்  தேவிபாரதி காலச்சுவடு பதிப்பகம்  191 பக்கங்கள்  தேவிபாரதியின் நான்கு குறு நாவல்களின் தொகுப்பு இந்நூல். துயரார்ந்த புனைவுகளுக்காகவே அறியப்படும் தேவிபாரதி சமகால எழுத்தாளுமைகளை புனைவில் நுழைத்து பகடியாக வடித்திருக்கும் கதை 'அ.ராமசாமியின் விலகல் தத்துவம்'.  'பலி' என்ற சிறுகதையின் நாடக வடிவம் மேடையேற்றப்படுவதற்கான முன்னெடுப்புகளாகவே நகரும் இக்கதை இறுதிவரை மேடையேற்றப்படவில்லை.  தான் வாழ்ந்த காலங்களில் மட்டுமின்றி, மரணத்திற்குப் பின் கடந்த 50 ஆண்டுகளாகவே கடவுளாக நீடிக்கும் பெருந்தலைவர் இரண்டாம் கதையில் குறியீடாகவே வருகிறார்.  27 வயது பெண் ஆசிரியை அனுபவிக்க நேரிடும் துன்பங்கள், இன்ஸ்பெக்டரின் வக்கிர எண்ணங்கள், பரதேசி, மாஸ்டரின் துயர்மிகு தருணங்கள், ஜேசிபி இயந்திரத்தைக் கையாளும் சிறுவன்வரை மிகையற்ற புனைவாகவே எண்ண முடிகிறது.  இத்தொகுப்பில் பெரிதும் பாதித்துவிட்ட கதை 'பரமனின் பட்டுப்பாவாடை உடுத்திய நான்காவது மகள்' தான். செல்வச்செழிப்பு இல்லாவிட்டாலும், அளவற்ற துறுதுறுப்புடன் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் சாதக அம்சங்களுடன், பிள்ளைப் பிராயத்தைக் கடக