Posts

Showing posts from August, 2022

கானகத்தின் குரல்

Image
 கானகத்தின் குரல் ஜாக் லண்டன் பெரியசாமி தூரன் 181 பக்கங்கள்  உரையாடல்களே இடம்பெறாத கதை சொல்லுதல் பாணியிலேயே அமைந்திருக்கும் நாவல் இது.பூமியின் வடதுருவத்திற்கு ஆர்ப்பாட்டமின்றி நம்மை அழைத்துச் சென்றுவிடும் புனைவு.  நீதிபதி ஒருவரின் பங்களாவில் சுகமாக வாழ்ந்து வரும் நாய் 'பக்', வணிகரீதியான பயன்பாட்டிற்காக திருடப்பட்டு பயிற்றுநர்களின் வசம் ஒப்படைக்கப்படுகிறது. 'பக்' போன்றே பல புதிய நாய்களும் அங்கு வண்டி இழுப்பதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றன. தடியால் பலமுறை தாக்கப்பட்டும், பழகிய மற்றொரு நாயினால்  கடிபட்டும் நிதர்சனத்தை உணர்ந்து பணிந்து போகிறது 'பக்'.  புதிய சூழலில் தனது செல்வாக்கினை ஏற்படுத்திக் கொண்டு அனைவரையும் வசீகரிக்கிறது.  ஆடம்பரமான மாளிகை வாசத்திலிருந்து உணவுக்கு பிற நாய்களுடன் போட்டியிட வேண்டிய சூழலுக்கு தன்னை தயார் செய்து கொள்கிறது.  முதலிடத்தில் நீடிக்கும் நாயுடன் பலமாக போட்டியிட்டு வென்று, அவ்விடத்தை கைப்பற்றுகிறது.  பனிப்பாறைகளால் உறைந்துவிட்ட ஆற்றினூடே  பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை இந்நூல்.  'டாஸன்' பகுதியை நோக்கி வண்டிகள் கிளம்புக

பயணம்

Image
 எனது பர்மா வழி நடைப்பயணம் வெ.சாமிநாத சர்மா மின்நூல் 232 பக்கங்கள் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலங்களில் ஜப்பானிய குண்டு வீச்சுக்கு அஞ்சி அகதிகளாக பர்மாவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்து அறிந்திருப்போம்.  எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா தனது புலம்பெயர்வு குறித்து இக்கட்டுரைகளில் விவரிக்கிறார். பர்மா முதல் சென்னை வரையிலான ஒன்றரை ஆண்டுகள் நீண்ட தனது பயணத்தை சாகசப் பயணமாக அவர் கருதிவிடவில்லை.  மன உறுதியுடன் எதிர்கொள்ள நேர்ந்த அசாதாரணமான சவால்களை, உடைந்த மனதுடனும், நுட்பமான அவதானிப்பு அளித்த எழுத்து வன்மை மிகுந்த பார்வையுடனும் பதிவு செய்திருக்கிறார்.  தெளிவான திட்டமிடலுடன் துவங்கப்பட்ட பயணங்களின்போது, இடையில் நேரிட்டுவிடும் தடங்கல்களே நம்மை பெரும் பதற்றத்துக்கு ஆளாக்கிவிடும்போது, நிச்சயமின்மைகளின் தொகுப்புகளாகவே மாறிவிட்ட சாமிநாத சர்மாவின் பயணம் மன தைரியங்களுக்கெல்லாம் சவால் விடக்கூடியது. பெரும் உழைப்பினால் ஈட்டிய பொருட்களை கைவிட நேர்ந்ததையும், கதவுகளைக்கூட  அடைக்காமல் கிளம்பியதையும் உறுதியாகக் கூறுகிறார் சர்மா.  பர்மியர்கள், மணிப்பூரிகள் குறித்த அவரது வியப்புகள் கட்டுரைகளில் வெள