Posts

Showing posts from February, 2022

கிரிக்கெட்

Image
ஆடுகளம்  அரசியல் அழகியல் ஆன்மீகம் தினேஷ் அகிரா வாசகசாலை பதிப்பகம்  156 பக்கங்கள்  முகநூலில் தொடர்ச்சியாக தினேஷ் அகிராவின் கிரிக்கெட் குறித்த பதிவுகளை வாசிப்பது வழக்கம்.  ஆழ்ந்த சொற்களைக் கொண்டு தொழில்நுட்ப நேர்த்தியுடன் அவர் விளக்கிடும் பாணி கிரிக்கெட்டை நேசிக்கும் வாசிப்பு பழக்கம் உடைய நபர்களுக்கு பெரிதும் மகிழ்வு அளிக்கவல்லது.  டான் பிராட்மேன் முதல் ஜஸ்பிரித் பும்ரா வரை ஒவ்வொருவரின் ஆளுமையையும் அவர் விவரிக்கும் நேர்த்தியின் அழகியல் அவருக்கே உரியது.  பொதுவாக இலக்கிய ஈடுபாடு உடைய நபர்களில் பெரும்பாலானோர் கிரிக்கெட் குறித்து ஈர்ப்பு அற்றவர்களாகவே இருப்பார்கள் என்றே நினைத்திருந்தேன்.  2010களின் துவக்க ஆண்டுகளில் ஆர்.அபிலாஷின் கிரிக்கெட் குறித்த கட்டுரைகளை உயிர்மை இதழ்களில் வாசித்தபோது பெரிதும் வியந்தேன்.  அபிலாஷிற்குப் பின் கிரிக்கெட் குறித்த கட்டுரைகளில் தினேஷ் அகிராவின் பங்களிப்பு தொடர்ச்சியாக மெருகேறிக் கொண்டே வருகிறது.  கிரிக்கெட் விளையாட்டு மீதான அதீத ஆர்வம் அதுகுறித்த உட்கூறுகளை நுட்பமாக அறிந்து தெளிய ஒருவருக்கு உதவலாம். வரலாற்று குறிப்புகளை இணையத்தின் உதவியுடன் பெற்றும் விடலாம்.  

நாவல்

Image
 நித்ய கன்னி  எம் வி வெங்கட்ராம் காலச்சுவடு பதிப்பகம்  182 பக்கங்கள்  விஸ்வாமித்திரருக்கு குருதட்சிணை அளித்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறார் சீடர் காலவ முனிவர்.  அமைதியாக மறுத்துக் கொண்டே இருக்கும் அவர் ஒரு கணத்தில் கோபமுற்று (வழக்கம்போல்) 800 புரவிகள் - உடல் முழுவதும் வெண்ணிறமாகவும், ஒரு காது மட்டும் கருப்பு நிறமுடனும் - அளிக்குமாறு உத்தரவிடுகிறார்.  அதிர்ச்சி அடையும் காலவர், யயாதி மன்னரிடம் உதவி கோருகிறார். தனது தெய்வீக வரம்பெற்ற மகள் மாதவியை காணிக்கையாக அளிக்கிறார் அவர்.  ஒரு குழந்தை பெற்றவுடன் மீண்டும் கன்னித் தன்மையை அடைந்துவிடும் வரம்பெற்றவள் மாதவி. அவ்வரமே அவளுக்கு சாபமாய் அமைந்துவிடுகிறது.  மனதார காலவரை வரிக்கும் அவள், நடைபெறவிருக்கும் கேலிக்கூத்துகளுக்கு ஒப்புக்கொள்கிறாள்.  விசுவாமித்திரரின் யோசனைப்படி (!) மூன்று மன்னர்களை ஒருவர்பின் ஒருவராக திருமணம் செய்து, ஒவ்வொருவரிடமும் தலா 200 புரவிகளை பெறுகின்றனர்.  மீதமுள்ள 200 புரவிகளுக்காக விசுவாமித்திரரே மாதவியை மணந்து கொள்கிறார். குழந்தை பிறப்பிற்குப் பின் வழமைபோல் கன்னித்தன்மையை மீளவும் பெறும் அவளுக்கு, யயாதி மன்னர் சுயம்வரம் ஏற்

சின்னஞ்சிறு பழக்கங்கள்

Image
 சின்னஞ்சிறு பழக்கங்கள் ஜேம்ஸ் கிளியர் நாகலட்சுமி சண்முகம் மின்நூல்  378 பக்கங்கள்  மனதிற்குப் பிடித்த மற்றும் பயன்தரும் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், நம்மையறியாமல் நம்மிடம் ஒன்றிவிட்ட விரும்பத்தகாத பழக்கங்களை விலக்கி விடவும் பயனுள்ள குறிப்புகளை தந்திடும் நூல் இது.  எளிய குறிப்புகளாகவே இருப்பினும் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வடிவம் கொள்கையில் ஆச்சரியமளிக்கும் மாற்றங்களை வாழ்வில் ஏற்படுத்திவிடக் கூடிய தகவல்கள் இவை.  அமேசானில் பொருட்களை வாங்குகையில் தொடர்புடைய பொருட்கள் என்ற வகையில் ஒரு துணைப்பட்டியல் வெளிவரும். நமது பட்ஜெட்டை பதம் பார்க்கவல்ல இவ்வணிக உத்திக்கு  'டிடெராட் விளைவு' என்று பெயரிட்டிருக்கின்றனர்.  எல்இடி டிவி வாங்குகையில் அதன் ஒலியமைப்பை மிகவும் குறைவாக அமைத்துவிட்டு அதற்கு துணையாக ஸ்பீக்கர்கள் வாங்கிட வைத்திடும் தந்திரம் இதற்கு உதாரணம்.  தினமும் செய்கின்ற தொடர்ச்சியானதொரு பழக்கத்துடன், ஏற்படுத்திக்கொள்ள விரும்பும் புதியதொரு செயலினை ஏற்றிக்கொண்டு அதன்மூலம் செயல்படும் முறையை இத்துடன் ஒப்பிடுகிறார் ஜேம்ஸ் கிளியர். 'பழக்கங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்குதல்' என்ற