Posts

Showing posts from February, 2024

கட்டுரைத் தொகுதி

Image
மூன்றாவது கண்  ஜி குப்புசாமி  காலச்சுவடு பதிப்பகம்  198 பக்கங்கள் 'அதர்ப்பட யாத்தல்' (மொழிபெயர்ப்பு) கலையின் சிக்கல்கள், நுட்பங்கள், அரசியல் குறித்த பார்வைகள் மற்றும் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்.  பெரும் ஆர்வத்துடன் வாசிப்பின் அடுத்தடுத்த தளங்களுக்கு செல்லும் வாசகர்கள், உலக  இலக்கியத்தை நாடுகையில், மொழிபெயர்ப்பு நூல்களையும், சிரத்தையுடன், தன்னை மறைத்துக் கொண்டு, அசுர உழைப்பை இட்டு மகிழும் மொழிபெயர்ப்பாளர்களையும் கண்டடைகின்றனர். 'எந்தக் காற்றானாலும் பறக்கும் பறவை' என்று தனது முன்னேர் மொழிபெயர்ப்பாளரால் வியக்கப்படும் ஜி குப்புசாமி, தமிழின் சமகால, நம்பகமான மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர்.  இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளையும், நேர்காணல் தொகுப்புகளையும் முன்பே காலச்சுவடு இதழ்களிலும், கனலி தளத்திலும் வாசித்திருந்தபோதிலும் நூல் வடிவில் வாசிக்கையில் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.  தொழில்முறையாக பதிப்பாளர் மொழிபெயர்க்கப் பணித்திடும் நூல்களை எடுத்துக் கொள்ளாமல் தனது பரந்துபட்ட வாசிப்பின் மூலம் தமிழுக்கு கொண்டுவர விரும்பும் நூல்களை அவரே தேர்வு செய்து பணியாற்றுதல் மிகவும் சிறப்பாக

நாவல்

Image
 காலவெளி  விட்டல் ராவ்  ஜெய்ரிகி பதிப்பகம்  214 பக்கங்கள்  விலை ரூ.250  40 ஆண்டுகளுக்குப் பின் மறுபதிப்பு காணும் விட்டல்ராவின் செவ்வியல் தன்மை மிகுந்த நாவல் இது. ஓவியர்களின் வாழ்வை நுண்மையாக அணுகி, மிகையின்றி எழுதியிருக்கிறார் ராவ். நனவோடைக் குறிப்புகளாக, நேர்கோட்டில் அல்லாத கதை சொல்லல் உத்தியுடன் எழுதப்பட்டிருக்கும் சிறப்பான நாவல் இது. சென்னை நகரின் புரசைவாக்கம், வேப்பேரி, திருவொற்றியூர் பகுதிகளில் காண நேர்ந்த ஆங்கிலோ இந்தியக் குடும்பங்களை நினைவுபடுத்திக் கொள்ளவும் முடிகிறது.  சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் பழைய படத்தின் பாடல் ஒன்றில் அதிவேகமாக நடனமாடிய நடிகரை பார்த்த போது, பெரும் வியப்பாக இருந்தது. அந்த நடிகர் 'சந்திரலேகா' ரஞ்சன். அன்றைய நாட்களில் அப்படி ஒரு துள்ளலான இசையும், நடனமும் ஒரு தமிழ்ப்பட பாடலில் இடம்பெற்றது மிகவும் ஆச்சரியமான விஷயம். சமகாலத்தில் இருந்து மிகவும் முற்போக்காக சிந்திப்பவர்களை வெற்றி பெற இங்கு யாரும் அனுமதிப்பதில்லை. நாவலில் நிரஞ்சனாக நடமாடுகிறார் அவர். பெரிய வெற்றிகள் அடையாத மனிதனாக நீடிப்பதற்கு காரணம், தான் ஒரு நடிகன் என்பதால்தான் என்று வருந்து