Posts

நாவல்

Image
கடைசி புதிர்ப்பாதை  அருண் ஜோஷி  தமிழில் ஜி குப்புசாமி  சாகித்ய அகாடமி வெளியீடு  256 பக்கங்கள்  விலை ரூபாய் 325  பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தும் சோம்பாஸ்கர் இளம் தொழிலதிபராக தீர்க்கமான வணிகச் சிந்தனைகளுடன் வலம் வருகிறான். இளம் வயது தனிமைகள், தாயின் இறப்பு அவன் மனதின் அடுக்குகளில் ஆறாத  ரணங்களாக அமைந்து விடுகின்றன.  அவன் மீதும் அவனது நிறுவனத்தின் மீதும் கேள்விக்கு உட்பட்டிராத உரிமையும் பொறுப்புகளும் நிரம்பியவராக வருகிறார் தாப்பர். உரிமையுடன் பல தருணங்களில் பாஸ்கரை அவர் கண்டிக்கவும் செய்கிறார். துவக்கத்தில் அல்தாஃபின் மனைவியாக அறியப்படும் அனுராதாவால் பாஸ்கர் ஈர்க்கப்படுகிறான். உண்மையில் அவளைப் போன்ற இயல்புடைய பெண்ணை பெரும்பாலான ஆண்கள் விரும்பவே செய்வார்கள். இந்நிதர்சனத்தை முழுமையாக உணர்ந்திருக்கிறான் அல்தாஃப். அல்தாஃபின் நிறுவனத்தை தன்னால் மட்டுமே வெற்றிகரமாக நடத்திச் செல்ல இயலும் என நம்பும் பாஸ்கர், அந்நிறுவனப் பங்குகளை வாங்கிக் குவிக்கிறான்.  சதுரங்க ஆட்டத்தில் திறன் வாய்ந்த அல்தாஃப், பாஸ்கர் தரும் நெருக்கடிகளை சமாளிக்க இயலாமல் தவிக்கிறான். அனு...

நினைவுகள்

Image
  பாரதி நினைவுகள்  ம.கோ யதுகிரி அம்மாள்  சந்தியா பதிப்பகம்  224 பக்கங்கள்  விலை ரூபாய் ₹150  பாரதியின் தீர்க்க தரிசனம் மிகுந்த சிந்தனையையும், வியக்க வைக்கும் மேதைமையையும் அருகில் இருந்த காணக் கிடைக்கும் நல்லூழ் அமையப்பெற்றிருக்கிறார் யதுகிரி.  பாரதியின் இரு மகள்களுடன் மூன்றாம் மகளாகவே செல்லம்மாவால் நடத்தப்பட்டிருக்கிறார் அவர்.  மனைவியிடம் கடிந்து பேசும் பாரதி, யதுகிரியின் சீற்றமான கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாகவே பதில் அளித்திருக்கிறார். ஆற்றாமையில் புலம்பியும் இருக்கிறார்.  இளம் வயதில் மறைந்து விட்ட மேதைகளின் சொற்ப வாழ்நாளில் உடன் இருந்தவர்கள் பொக்கிஷம் போன்றவர்கள் என்பதன் அடிப்படையில் யதுகிரியின் பார்வை முக்கியத்துவம் பெறுகிறது. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு ஏதுமின்றி வாழ்ந்த பாரதி, அந்த அரிய குணத்திற்காகவே அன்றைய சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருப்பதை யதுகிரியின் பார்வையில் காண முடிகிறது.  கணவரின் துல்லியமான, நேர்மையான பேச்சாலும், நடத்தைகளாலும் பெரும் சங்கடங்களை அனுபவிக்கும் செல்லம்மா தியாக வாழ்வு வாழ்ந்திருக்கிறார்...

நாவல்

Image
 தீரமிகு புது உலகம்  ஆல்டஸ் ஹக்ஸ்லி  தமிழில் ஜி குப்புசாமி  காலச்சுவடு பதிப்பகம்  303 பக்கங்கள் 26 ஆம் நூற்றாண்டில் நிகழ்வதாக புனையப்பட்டுள்ள துர்கற்பனை நாவல் இது. எதிர்மறை சிந்தனை நல்லது என்று எண்ணுகிறார் ஆல்டஸ் ஹக்ஸ்லி.  எதிர்காலத்தில் திணிக்கப்படும் கடுமையான சூழல்களை உறுதியுடன் எதிர்கொள்ள அவை உதவும் என்ற அளவில் அது தர்க்க ரீதியாக பொருந்தி விடுகிறது. இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நாவல் செவ்வியல் தன்மையுடன் 100 ஆண்டுகளைக் கடந்து ஹக்ஸ்லியின் சிந்தனை முன்னோடியானது மட்டுமல்ல, சாத்தியக்கூறுகள் நிறைந்ததும்தான் என்று உணர்த்துவது வியப்பானதொரு விஷயம்.  தீரமிகு புது உலகில் மனிதனின் சுய சிந்தனைகளும், இயல்பான நிகழ்வுகளும் முற்றிலுமாக தடுக்கப்படுகின்றன. செயற்கையாக ஒரு கரு, கருவேற்றம் செய்யப்பட்டு போகனாவ்ஸ்கி முறை என்று அழைக்கப்படும் கதிர்வீச்சு முறையில் 96 கருக்களாக பிரிக்கப்பட்டு கருமுட்டைகள் வளர்க்கப்படுகின்றன.  அவை ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, எப்சிலான் என்றவாறு ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவினரும்  எத்தகைய தன்மையுடன் வளர வேண்டும...

கட்டுரைகள்

Image
மதுரை போற்றுதும்  ச. சுப்பாராவ் சந்தியா பதிப்பகம்  200 பக்கங்கள் விலை ரூபாய் 200 மதுரையுடனான தனது நினைவுகளை, வாழ்வை சுப்பாராவ் 23 கட்டுரைகளில் எடுத்துரைக்கிறார். வளமான, பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்திருக்கும் சுப்பாராவ், தனது பிறந்த மண் மீதான பாசத்தை, பிணைப்பை எடுத்துக்காட்டி இருக்கும் விதம் மிகவும் சிறப்பானது. மதுரையில் பாரதியார் தமிழாசிரியராக சில காலம் பணியாற்றி இருக்கிறார் என்ற குறிப்பும், மன்னர் சேதுபதி மேல்நிலைப்பள்ளி பற்றிய தகவல்களும் வியக்க வைத்தன. மன்னர் சேதுபதிக்கு கல்வி மீதான ஆர்வம் எந்த அளவுக்கு இருந்திருந்தால் தனது அரண்மனையை பகுதி பகுதியாக கல்விப் பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியிருப்பார் என்று நினைக்கையில் மெய்சிலிர்க்கிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரையின் படிப்பகங்கள், வாசிப்பில் சாமானியர்கள் மேம்பட எத்தனை வகைகளில பயன்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சுப்பாராவின் நினைவோடைக் குறிப்புகள் நம்மையும் நமது இளமைப் பருவ காலங்களுக்கு அழைத்துச் சென்று விடுகிறது. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற அளவிலேயே ஆண்டாள் மீதான புரிதல் இதுவரை இருந்து வந்த நிலையில், ஆண்டாள்...

கட்டுரைகள்

Image
 தமிழணங்கு என்ன நிறம்? சமூகம் அரசியல் சார்ந்த கட்டுரைகள்  மு ராமநாதன் பாரதி புத்தகாலயம் 176 பக்கங்கள்  விலை ரூபாய் 170  7 தலைப்புகளில் 29 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.கருத்துச் செறிவுமிக்க கட்டுரைகள் வாசிக்க இலகுவான மொழி நடையில் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கின்றன.  நல்ல வாசகன் ஒருவன் சமூக பிரக்ஞையுடன் படைப்பு மொழியும் கைவரப் பெற்றிருந்தால் மட்டுமே இத்தகைய கட்டுரைகள் சாத்தியமாகும். ராமநாதனுக்கு குறிப்பிடத்தகுந்த கல்வி பின்புலமும், வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவமும், தேர்ந்த இலக்கிய வாசகன் என்ற தகுதியும் இருக்கிறது.  இளம் வயது சிவாஜி ரசிகனாக தன்னை அடையாளப்படுத்துபவர்,தமிழணங்கின் நிறம் குறித்தும் முற்போக்கு சிந்தனையுடன் ஆராய்கிறார். சீனர்களின் நம்ப முடியாத ஒழுக்கம் குறித்தும், பொதுவுடைமை தத்துவம்  வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ள நாடு என்ற அளவில் அந்நாட்டினைக் குறித்தும் இக்கட்டுரைகளின் மூலம் அறிய முடிகிறது. இந்திய ரயில்வேயை பொறுத்த அளவில் வடநாட்டினர் மிகுதியாக (முறையற்ற வழிகளிலும்) பயன்படுத்தினாலும், வருவாய் தென்னகத்திலிருந்தே மிகையாகக் கிடைப்பதும், ரயில்வே உ...

கதைகள்

Image
வெல்கம் டு மில்லெனியம் அரவிந்தன் 146 பக்கங்கள் காலச்சுவடு பதிப்பகம் புத்தாயிரத்து காலகட்டத்து கதைகளின் தொகுப்பான இந்நூலில் 10 கதைகள் இடம்பெறுகின்றன. கோபத்தையும், ஏமாற்றங்களையும் தன்னுள்ளேயே அடக்கி சீரிய பிம்பத்தை கட்டமைக்கும் நபர் ரயில் பயணம் ஒன்றில் தூக்கத்தில் உளறி நகைப்புக்கு ஆளாகி விடுகிறார்.  உண்மையில் நற்பெயரும், நாயக பிம்பமும் பிறரது பார்வையிலிருந்து இயல்பாக அமைந்து விடுதல் நன்று. நமக்கான மதிப்பீடுகளை நாமே வலிய முயன்று உருவாக்குதல் விபரீதங்களுக்கு இட்டுச் செல்கின்றது.  பத்மநாபன் போன்ற நபர்கள் பால்கால நண்பர்களின் சந்திப்பு போன்ற பிரத்தியேக தருணங்களில் கொச்சை மொழிகளில் பேசி சமகால அடையாளங்களை மறந்து மகிழ்ந்திருத்தலே பெரும் ஆசுவாசமாக அமைய வாய்ப்பிருக்கிறது.  கதையின் கடைசி வரியில் இருமுறை இடம்பெறும் அந்த ஒற்றைச் சொல் கதை மாந்தர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்துவதோடு கதையின் வேகத்தையும் மட்டுப்படுத்தி கச்சிதமான நிறைவுக்கு இட்டுச் சென்று விடுகிறது.  தொகுப்பின் இரண்டாவது கதை 'விருது'. புத்தாயிர காலகட்டங்களில் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும், எல்லா நிறுவனங்க...

அனுபவப் பதிவுகள்

Image
பின்னகர்ந்த காலம்  வண்ணநிலவன்  காலச்சுவடு பதிப்பகம்  359 பக்கங்கள் விலை ரூபாய் 450 இளம்பருவ வறுமை வாழ்வை, போராட்டங்களை, எதிர்நீச்சல் இட்ட தருணங்களை பாசாங்கற்ற மொழியில் மிகையின்றி சொல்லியிருக்கிறார் வண்ணநிலவன். கலை இலக்கியத்தால் உந்தப்பட்ட மனத்தைக் கொண்டு வாழ்வாதாரம் குறித்த கவலைகளுடன் அவர் நடத்திய போராட்டங்கள் நீண்டவை. தமிழகத்தின் இரட்டை நகரங்களாக அறியப்படும் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் வண்ணநிலவனின் இளமைப் பருவம் கழிந்திருக்கிறது. ஒளிவு மறைவற்ற வெளிப்படுத்துதல்களாக அவரது ஆரம்பகால வாழ்வின் பகுதிகளை நூலில் எடுத்துரைக்கிறார். இளம்பருவத்தில் மார்க்சிய ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். காலவோட்டத்தில் எந்த ஒரு அமைப்பிலும் அவரால் முழுமனதுடன் நீடிக்க இயலவில்லை. வண்ண நிலவனின் ஜீவாதாரப் பயணம் வக்கீல் குமாஸ்தா என்ற அடையாளத்துடன் துவங்கி, பல பத்திரிகைகளில் உதவியாளராக பணியாற்றி, சீரான இடைவெளிகளில் ஒவ்வொரு வேலையையும் தொடர்ச்சியாக இழந்திருக்கிறார்.  வறுமைக் காலங்களில் தன்னை ஆதரித்த நண்பர்களின் பட்டியலை நூல் முழுவதிலும் வெளிப்படையாக தந்திருக்கிறார் வண்ணநிலவன்.  எங்கெல்லாம...