Posts

Showing posts from April, 2022

எனது ஆண்கள்

Image
 எனது ஆண்கள் நளினி ஜமீலா தமிழில் ப.விமலா காலச்சுவடு பதிப்பகம் 159 பக்கங்கள்  பாமர மொழியில் தனது வாழ்வின் அனுபவங்களை, நாகரீக சமூகத்தின் அவலங்களை விளக்கிச் செல்கிறார் நளினி ஜமீலா. சிறிதும் தன்னிரக்கமற்ற பச்சாதாபம் கோராத விவரணைகள் இவை. பகடியாகவே பல நிகழ்வுகளை எழுதிச் செல்கிறார்.  பாலியல் தொழிலாளியாக சாலையில் நின்று வாடிக்கையாளரை பிடிப்பது முதல், தங்குமிடம் ஏதுமின்றி அலைந்ததுவரை நினைவுகூர்தல் விடுபடலின்றி தொடர்கிறது.  பணத்தில் குறியாக இருந்தமை, மொட்டை மாடிகளைக் கைப்பற்றியமை போன்ற சாகசங்களுக்கும் நளினியின் வாழ்வில் குறைவில்லை.  பாலியல் உணர்வு குறித்த அவரது புரிதல் கீழ்கண்டது. 'பாலியல் என்பது தேவைக்கு விழிப்பதும் தேவையில்லை என்றால் அணைந்து போவதுமான ஒன்றுதான்'  முந்தைய இரவு தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட காவலர், மறுதினம் தகவல் அளித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாக துன்புறுத்தியதையும் சிறிதும் சுயபச்சாதாபமின்றி அவரால் வெளிப்படுத்த முடிகிறது.  உடலியல் தேவைக்காகவே அணுகிய ஆண்களில் ஒரு சிலர் தூய காதலைக் கொண்டிருந்ததையும் மகிழ்வுடன் நினைவு கூர்கிறார்.  பொதுவாகவே ஒரு பெண

ஆஸாதி

Image
 ஆஸாதி அருந்ததிராய் தமிழில் ஜி குப்புசாமி காலச்சுவடு பதிப்பகம் 224 பக்கங்கள் ஒரு அமர்வில் 10 பக்கங்களுக்கு மேல் நகர முடியாத கனமான வரிகள் கொண்ட நூல் இது.  சாட்டையடியாக விளாசும் சொற்கள் எத்தரப்பையும் விட்டுவைப்பதில்லை.  1998ஆம் ஆண்டில் இந்திய அரசு அணுகுண்டு வெடிப்பு சோதனை நிகழ்த்தியபோது அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் கண்டனங்களை பெற்ற அதே வேளையில், தேசமெங்கும் கொண்டாட்ட மனநிலை பரவியது.  போரினால் ஏற்படும் பேரழிவுகள் குறித்து யோசிக்கையில் இது போன்ற நிகழ்வுகள் அவசியம்தானா என்று தோன்றியது. எனினும் மந்தை மனப்பான்மை எவரையும் விட்டுவிடவில்லை.  தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த கட்டுரையில் இடம்பெறும் கவிதை, சகிப்பின்மையின் கொடூர முகத்தை விளக்கவல்லது. 'அம்மா என்னை உனக்கு திரும்பத் திரும்ப அறிமுகம் செய்து சலித்துப் போயிருக்கிறேன்'  இக்கவிதையை எழுதியவர் உயிருக்கு அஞ்சி தலைமறைவானது சுடும் நிதர்சனம்.  மகாத்மாவுக்கு நிகரான ஆளுமை அம்பேத்கரை 'காந்தி' திரைப்படம் முற்றாக புறக்கணித்தமை தற்செயலானதல்ல.  'பெருமகிழ்வின் பேரவை' நாவல் குறித்த கட்டுரைகள் நாவலை வாசித்த நாட்களை நினைவுபடு

விருந்து

Image
 விருந்து கே.என் செந்தில் காலச்சுவடு பதிப்பகம் 191 பக்கங்கள்  நீண்ட கதைகளுக்காகவே பெயர் பெற்றுவிட்ட கே என் செந்திலின் குறுங்கதைகளின் தொகுப்பு இந்நூல்.  பக்கங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், கதைகளின் வீச்சுக்கு சற்றும் குறைவில்லை. மூன்றே பக்கங்களில் சில பத்தாண்டு நிகழ்வுகளை சிறப்பாக காட்சிப்படுத்தும் லாவகம் வாய்க்கப் பெற்றிருக்கிறார்.  ஒருசில கதைகளை அவரது முகநூல் பக்கத்தில் வாசித்திருக்கிறேன். இருப்பினும் நூல்வடிவில் பெரிதும் வசீகரித்துவிட்டன இக்கதைகள்.  ஒன்றுடன் ஒன்று எவ்வகையிலும் பொருந்தாத கதைக்களன்கள் கொண்ட கதைகள் இவை.  சூதாட்ட மோகம், குத்தலான பேச்சுக்கள், நம்பமுடியாத குரூரம், காவலில் இருந்து தப்பிவிட நினைக்கும் முதியவர், பேருந்துக்கான காத்திருப்பின் போது பெண்களின் மீதான மையல், தந்தையின் இறுதி நாட்களை வாசகனுக்கு கடத்திவிடும் கதை, என்றவாறு மனித மனங்களின் அடித்தளங்களை தொட்டு சென்றிடும் கதைக்களன்கள்.  இருவரிடம் ஈர்ப்பு கொள்பவள் அவர்களில் ஒருவரை விலக்கிவிட இயலாமல் தவிக்கிறாள். லாட்டரி, குடிப் பழக்கங்களை துல்லியமாக எடுத்துக் காட்டும் மூன்றே பக்கக் கதை, கனமான தரவுகள், குறைவான பக்கங்களில், கச

நாவல்

Image
கில்காமெஷ்  தமிழில் க நா சு மின்நூல் 109 பக்கங்கள் உலகின் மிகப்பழமையான இலக்கியமாக அறியப்படும் கில்காமெஷ் நாவல், பல அறிஞர்களின் கடினமான உழைப்பை மூலதனமாகக் கொண்டு முழு வடிவம் அடைந்து உருப்பெற்றுள்ளது.  அரசன் கில்காமெஷின் வீரம், எங்கிடு உடனான அவனது பலமான நட்பு, சாகசப் பயணங்கள் நிறைந்துள்ள நாவல் இது.  'உலகில் மக்கள் செய்கிற அநியாயங்களும், அக்கிரமங்களும், அவர்கள் போடுகிற கூச்சலும் சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது'  மேற்கண்ட வரி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளமை வியப்பை ஏற்படுத்துகிறது.  இயற்கை மனிதனால் வென்றுவிட முடியாத அளப்பரிய சக்தி என்பதை மீண்டும் நிரூபிக்கும் அம்சங்களை கொண்டுள்ளது இந்நாவலின் பகுதிகள்.  பயணமாகவே அறியப்படும் மனித வாழ்வு, அவரவருக்கான இறுதிக் காலங்களில் தருவித்துவிடும் ஆற்றாமைகள், கில்காமெஷின் வாழ்வு, மரணத்திலிருந்து இப்புனைவு எடுத்துக் காட்டுபவை.  வாசித்துவிட்ட உலக இலக்கியங்களை மிகுந்த ஆர்வத்துடன் தமிழுக்கு கொண்டு சேர்த்திருக்கும்  க நா சுவின் இலக்கிய பணிகள் வணக்கத்திற்குரியவை.