Posts

Showing posts from October, 2022

தத்துவம்

Image
 தீர்க்கதரிசி கலீல் ஜிப்ரான்  ஃபிங்கர் பிரிண்ட் 135 பக்கங்கள் தனது நாட்டிற்கு திரும்பிச் செல்லும் பொருட்டு கப்பலுக்கு காத்திருக்கிறார் அவர். கப்பல் வந்துவிட்ட வேளையில் திரும்பிச் செல்லத் தயக்கமும் பிரிவுத் துயரமும் ஏற்படுகிறது. உண்மையில் அன்பு, பிரியும் வேளையில் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. ஒரே ஒரு பெண் மட்டுமே அவருக்கு ஆறுதல் அளித்து திரும்பிச் செல்லுமாறு வேண்டுகிறாள். சூழ்ந்திருக்கும் அனைவரும் அவரது ஞானத்தை சில மணித்துளிகளாவது பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றனர்.  பெரும் விளக்கங்களை கோரும் சிறுசிறு வினாக்களை எழுப்புகின்றனர். ஒவ்வொரு வினாவுக்கும் சில பக்கங்களில் விளக்கங்கள் அமைந்து விடுகின்றது.  11 ஆண்டுகளை இந்நூலுக்கான ஆக்கத்தில் கலீல் ஜிப்ரான்  செலவிட்டதாக நூலின் துவக்கத்தில் குறிப்பு இடம்பெறுகிறது.  இச்சிறு நூலை வாசிக்கையில் ஓஷோவின் எழுத்துக்கள் கூட நினைவுக்கு வந்துவிட்டன. ஓஷோ உள்ளிட்ட கார்ப்பரேட் சாமியார்களுக்கு உந்துதலாக இதுபோன்ற எழுத்துக்களே அமைந்திருக்கவும் கூடும்.  ஜிப்ரானின் ஓவியங்கள் இந்நூலின் சிறப்பம்சங்களுள் ஒன்று. தனக்கு எதுவும் தெரியாது என்பது மட்டுமே தனக்குத் தெரியும் என்

குழந்தை வளர்ப்பு

Image
 உச்சி முகர் விழியன் பாரதி புத்தகாலயம் 63 பக்கங்கள் குழந்தைகளின் உலகம் உண்மையும், தூய்மையும் நிரம்பியது. பெண் குழந்தைகள் நிறைந்திருக்கும் இல்லங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதுடன், மன அழுத்தத்தை நீக்கி விடுவதாகவும் அமைகின்றன.  தனது மகளுடனான உரையாடல்களை, அழகிய தருணங்களை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் விழியன்.  கடந்த காலங்களில் நிறைவேற்றத் தவறிய கடமைகளை நினைவுபடுத்துவதாகவே அமைந்துவிட்டது இந்நூல்.  குழந்தைப்பேறு அரிதாகி விட்ட இக்காலத்தில் பிறக்கும் குழந்தைகளை மிகுந்த பிரியத்துடன் வளர்த்தெடுத்தலே எதிர்கால சமூகத்திற்கு நமது பெரும் பங்களிப்பாக இருக்கமுடியும்.  அறிவை வளர்ப்பதாகவும், காலம் கடத்துவதாகவும் எண்ணியவாறு பெரியவர்கள் சொல்லிச் செல்லும் சிறு சிறு கதைகளே குழந்தைகளின் வண்ணமயமான உலகின் கதவுகளைத் திறந்துவிடுகின்றன.  மிகுந்த ஆர்வத்துடன் செய்யும் பணிகளே அலுப்பு தோன்றாதவையாக அமைந்து விடுகின்றன.  குழந்தை வளர்ப்பும் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டிய செயல்தான் என்பதை சிறப்பாக வலியுறுத்திவிடும் நூல் இது.

நாவல்

Image
 பெத்தவன் இமையம் பாரதி புத்தகாலயம் 40 பக்கங்கள் உயிர்மை இலக்கிய இதழில் இமையத்தின் நெடுங்கதைகளை வாசித்து வியந்திருக்கிறேன். உரையாடல் மொழியில் அமைந்திருக்கும் எழுத்துநடை அவரது தனித்துவம்.  சமூகத்தை சாதியம் தனது கட்டுக்குள் வைத்திருப்பதை மிகையின்றி உணர்த்திவிடும் கதை இது.  ஆணவக் கொலைகளும் அவமானம் நேர்ந்து விட்டதாக கருதி மேற்கொள்ளப்படும் சுய மரணங்களும் அவ மரணங்களாகவே இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தடையின்றி தொடர்ந்து கொண்டிருப்பது நாகரீக சமூகத்திற்கு சவால் அளிப்பவை.  சாதியப் பெருமை பேசி மகிழ்பவர்கள், தாம் சார்ந்திருக்கும் சாதியில் பின்தங்கிய பிரிவினரையே பெரும் ஏளனமாக பரிகசிக்கும் நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.  கல்வி கற்றலும், இருதரப்பு புரிதலுடன் கூடிய சுயமரியாதைக் காதல் திருமணங்களும் ஆனவக் கொலைகளுக்குத் தீர்வாக அமைய முடியும்.  ஒன்றிரண்டு சாதியினர் மட்டும் குடியிருப்பதாக அல்லாமல், எல்லா பகுதிகளும் மதம் மற்றும் சாதி பிரிவினர்கள் மகிழ்வுடன் வாழுமிடங்களாக மாற்றமடையும் நாட்கள் மட்டுமே ஒற்றுமையையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் மனித சமூகத்திற்கு அளிப்பதாக அமையும்.

தேடல்

Image
தேடல் பொன்னீலன் என் சி பி எச்  93 பக்கங்கள் மருத நிலத்து மக்கள் உணர்வுபூர்வமானவர்கள். அவ்விடம் விட்டு நீங்கி நெய்தல் பகுதிகளில் வசிப்பவர்களிடமும் கூட போற்றுதலுக்குரிய ஈகை, துணிவுடன் அநீதியை எதிர்த்தல் போன்ற குணங்களைக் காண இயலும்.  மிகை உணர்ச்சி கொண்டவர்களாகவும், உள்ளத்தில் இருப்பதை வலிந்து மறைத்து பழகாதவர்களாகவுமே அம்மக்கள் நீடிக்கிறார்கள்.  பொன்னீலனின் இந்நாவல் கடலோர மக்களின் நிச்சயமின்மை மிகுந்த வாழ்வு, பண ஆசை, குரோதம், காதல், நட்பு ஆகிய குணங்களை மிகையின்றி  சிடுக்கற்ற மொழியில் விவரித்துச் செல்கிறது.  சிறு சிறு அத்தியாயங்களில் எண்ணற்ற பாத்திரங்களை படைத்து உப்புக்காற்றை சுவாசிக்க செய்து விடுகிறார் அவர்.  இரும்பை போன்ற உறுதியான உடலைக் கொண்ட தாசன், தாயை இழந்தபின் தந்தையின் மறுமணத்தால் அஞ்சி வீட்டை விட்டு வெளியேறி, திறன் மிகுந்த கட்டுமரக்காரனாக வாழ்கிறான்.  காதலும் கைகூடாமல், தொழிலிலும் மேன்மை அடையாமல், கடல் தாண்டவத்தில் பிய்த்தெறியப்படும் கரையோர குடிசைகளைப் போன்ற வாழ்வு நிலை அவனுக்கு விதிக்கப்பட்டு இருக்கிறது.  பொருளாதார வளர்ச்சி நிலைகளில் மனித மனங்களில் ஏற்பட்டுவிடும் நம்ப முடியாத மாற்

கல்வி

Image
 ஒழுகும் குடிசையும் ஒளிரும் கல்வியால் மருத்துவர் திட்டக்குடி செந்தில் கருஞ்சட்டை பதிப்பகம் 86பக்கங்கள் திராவிட இயக்கங்கள், இட ஒதுக்கீட்டின் அவசியம், நீட்தேர்வு ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்த குறைந்தபட்ச புரிதல்களை ஏற்படுத்தி விடுகிறது இச்சிறுநூல்.  1 முதல் 12-ஆம் வகுப்பு வரை கற்று, உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற போதிலும் அவற்றை கருத்தில் கொள்ளாமல் நீட் நுழைவுத்தேர்வை மட்டுமே கவனத்தில் கொண்டு அம்மதிப்பெண்ணின் அடிப்படையில் மருத்துவக் கல்வி அனுமதி அளிக்கப்படுகிறது.  கிராமப்புற பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் குழந்தைகள் இம்முறையினால் பாதிக்கப்படுவதை அறிகையில் இதற்கு பின்னுள்ள அரசியலை எளிதாக விளங்கிக்கொள்ள இயலும்.  திராவிட இயக்கங்களின் எழுச்சியும், இடஒதுக்கீடும் இல்லாமல் போயிருந்தால் இன்றைய கல்வி, சமூக வளர்ச்சிகள் சாத்தியமற்றதாகி இருந்திருக்கும்.  அன்றைய நாட்களில் அரசுப் பள்ளிகள் சிறப்பாக இயங்கியதாக பதிவு செய்திருக்கும் ஆசிரியருக்கு இன்றைய சூழலில் அரசுப்பள்ளிகளின் நெருக்கடியான நிலைகளை குறித்த புரிதல் இருப்பதாக தெரியவில்லை.  கல்வி ஒன்றை மட்டுமே கொண்டு தலைமுறைகளை கட்டமைத்த நிகழ்வுகளை அறிகையில் ம

கவிதைகள்

Image
 மண்டோவின் காதலி  லாவண்யா சுந்தரராஜன் தமிழ்வெளி  104 பக்கங்கள்  லாவண்யா சுந்தரராஜனின் 68 கவிதைகளைக் கொண்ட தொகுப்பு இந்நூல்.  பெண்மைக்கு நிர்ணயிக்கப்பட்டுவிட்ட வரம்புகளை, தன்னிரக்கமின்றி கலை உணர்வுடன் கேள்விக்கு உட்படுத்தும் புனைவுகள் இக்கவிதைகள்.  'இறுதி உணவின் மேசை' தனது இருப்பு, இயலாமை குறித்து பெரிதும் வருந்தி கேவுகிறது. குழந்தைமை நிரம்பிய கவிதை 'கூட்ஸ் வண்டி'. சிறுவயதில் ரயிலை வேடிக்கை பார்க்க அலைந்த தருணங்களில், எதிர்ப்படும் வண்டி கூட்ஸாக அமைகையில் ஏற்படும் கசப்பு அழகாக வெளிப்படுகிறது.  உடலில் அசாதாரண நிலை கொண்டவள் குறித்த கவிதையில், 'எத்தனை கலவி நடந்தாலும் அவள் ரத்தத்தில் இன்னொரு ரத்தம் கலக்காது' என்று கூறி அவளை நித்திய கற்புக்கரசி என அழைக்கிறார்.  பெண்ணின் உடலும் மனமும் அடர்வனம்தான். ஆளுமை மிகுந்தவனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயலும் ஒவ்வொரு ஆணும் அவளிடத்தில் அறிய முடிந்தது சிறுதுளி மட்டுமே.  மிதமிஞ்சிய பாதுகாப்பு குறித்த உணர்வு பெண்ணிற்கு இக்காலத்திலும் தேவையாய் இருப்பதென்பது நமது நாகரிகம் குறித்த மதிப்பீடுதான்.  மகிழ்வையும், ஆசுவாசத்தையும் ஒருங்கே