Posts

Showing posts from October, 2021

வரலாறு

Image
 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்  மயிலை சீனி வேங்கடசாமி மின்நூல்  210 பக்கங்கள்  களப்பிரர்கள் ஆட்சியை தமிழகத்தின் இருண்ட காலம் என்றும், வரலாற்று ஆவணங்கள் ஏதுமற்ற காலகட்டம் என்றும் இளம் வயதில் பாடநூல்களின் வாயிலாக அறிந்து வைத்திருந்த தேய்ந்துபோன தட்டையான கருத்துக்களை மாற்றி அமைத்துவிட்ட நூல் இது.  தனது வாழ்வில் உடல்வாதையும், மன அழுத்தமும் மிகுந்த நாட்களில் இந்நூலை படைத்ததாகக் கூறும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள், பின்னுரையில் தரும் குறிப்புதவி  நூல்களின் பெரும் பட்டியல் மலைப்பைத் தருகிறது.  'வடுகர்' எனப்படும் கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்ட களப்பிரர்கள் வைணவ சமயத்தைச் சார்ந்தவர்களாயும், சேர, சோழ ,பாண்டியரை வென்று மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி புரிந்தும் இருக்கிறார்கள்.  இவர்களின் காலம் கிபி 250 முதல் கிபி 575 வரை நீடித்திருக்கும் என்று சான்றுகளுடன் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.  'அச்சுதன்' என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்ட அரசர்களும், அவர்தம் ஆட்சியில் பௌத்த, சமண மதங்கள் சிறந்தும் விளங்கியமை நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.  இலங்கையில் குறுகிய காலப் பகுதிகளில

இந்திய வரலாறு

Image
 இந்திய வரலாறு  இஎம்எஸ் நம்பூதிரிபாத்  தமிழில் பி.ஆர்.பரமேஸ்வரன்  பாரதி புத்தகாலயம்  144 பக்கங்கள்  ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகக் காலங்களில் இருந்து துவங்கி இருபதாம் நூற்றாண்டின் மையம் வரையிலான இந்திய வரலாற்றை மார்க்சிய பார்வையில் பேசும் நூல் இது.  நான்கு வர்ணங்களும், சாதிய முறையும் தோன்றியமை குறித்த கட்டுரைகளும், டெல்லி சுல்தான்கள், மொகலாயர்கள் குறித்த தகவல்களும் இந்நூலின் சிறப்புகள். சுதந்திரத்திற்குப் பிறகான காங்கிரஸின் அணுகுமுறைகள், ஆங்கிலேயர் ஆட்சியுடனான ஒப்பீடு ஆகியன புதிய தகவல்களாக அமைகின்றன.  தென்னிந்தியாவின் தனித்தன்மை கொண்ட செழுமையான பாரம்பரியம் குறித்தும் விளக்குகிறார் தோழர்.  சிந்துவெளி நாகரிகத்திற்கு பெரும் அடிப்படையாக அமைந்த அணைக்கட்டுகளை ஆரியர்கள் தகர்த்ததும், தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியமையும் விரிவாக இந்நூலில் இடம் பெறுகிறது. இச்சிறிய நூல் 4000 ஆண்டுகளின் இந்திய வரலாற்று நிகழ்வுகளை சுருக்கமாக விளக்கி விடுகிறது. அதுவே இந்நூலின் சிறப்புத் தன்மையாகவும் அமைகிறது.

இருவேறு உலகம்

Image
 இருவேறு உலகம் விக்ரமாதித்யன்  மின்நூல்  330 பக்கங்கள்  கவிஞர் விக்ரமாதித்யன் பத்திரிகையாளராக பணியாற்றிய காலங்களில் நிகழ்த்திய நேர்காணல்கள், விமர்சனக் கட்டுரைகள் ஆகியனவற்றின் தொகுப்பு இந்நூல். எண்பதுகளின் மத்தியில் பல பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் இந்நேர்காணல் தொகுப்புகளில், ஆளுமைகளின் எதிர்வினைகள் ஆச்சரியம் அளிப்பவையாக உள்ளன.  வெகுஜன இதழ்களில் கொண்டாடப்படும் ஆளுமை ஒருவரும், தீவிர இலக்கிய இதழ்களில் நிலைபெற்றிருக்கும் ஆளுமை ஒருவரும் என்ற வகையில் இரட்டைத்தன்மையுடன் இக்கட்டுரைகள் அமைந்திருத்தல் மிகவும் சிறப்பு. 'எஸ்தர்' சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்டுள்ள விமர்சனக் கட்டுரையும், கோணங்கியின் முதல் சிறுகதைத் தொகுப்பிற்கான கட்டுரையும் மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளவை.  சமரசம் இல்லாத ஒருவித கறார்த் தன்மையுடன் இருப்பவை விக்ரமாதித்யனின் எழுத்துகள். நல்ல கலைஞனுக்கான அடையாளமாக அதுவே அமைந்துவிடுகிறது.  கவிஞர் கலாப்ரியாவின் படைப்புகள் மற்றும் மூத்த படைப்பாளி வண்ணதாசனின் ஓவியங்கள் குறித்த தகவல்கள் வாசிக்கையில் அலாதியான மகிழ்வு தருபவை.

பசித்த மானிடம்

Image
 பசித்த மானிடம்  கரிச்சான் குஞ்சு  காலச்சுவடு பதிப்பகம்  271 பக்கங்கள்  அழகியல் மற்றும் நோய்மையின் குறியீடுகளாக புனையப்படும் மனித உடல், மிதமிஞ்சியக் காமம், வரையறைகளைத் தகர்த்து நிகழ்ந்துவிடும் அத்துமீறல்கள், பணம் ஒன்றையே பெரும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகையில் நிகழ்ந்துவிட சாத்தியம் உள்ளவை அனைத்தையும் விவரித்துச் செல்கிறார் கரிச்சான் குஞ்சு.  40 ஆண்டுகளுக்கு முன்னரே ஓரினச்சேர்க்கை குறித்து புனைவில் கொண்டுவந்திருப்பதும், தேர்ந்த படைப்பாளி ஒருவரின் ஒற்றை நாவல் படைப்பாக உள்ளதுவும் இந்நாவலின் சிறப்புகள்.  300 க்கும் குறைவான பக்கங்களைக் கொண்ட இந்நாவலை வாசித்து நிறைவு செய்ய 4 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இத்தனைக்கும் ஆண்டுக் கணக்காக இந்நூலுக்காக காத்துக்கொண்டிருந்தேன்.  செல்லும் இடமெல்லாம் எவ்வித பேதமுமின்றி கணேசன் அரவணைக்கப்பட்டு விடுவதும், 'கிட்டா' தனது சிறுசிறு முன்னெடுப்புகளின் விளைவாகவே பெரும் செல்வங்களை அடைந்துவிடுதலும், புனைவின் நேர்மறையான அணுகல்களாகவே தோன்றுகிறது.  கணேசன்மீது பரிதாபப்பட்டு அழைத்துவரும் வாத்தியார், வீடு நிறைய புத்தகங்களை குவித்து வைத்திருப்பதும் அவனது உபந

தத்துவம்

Image
  அன்பு என்னும் கலை  எரிக் ஃபிராம்  தமிழில் ராஜ் கௌதமன்  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்  147 பக்கங்கள்  மனித மனம், சிந்தனைகள், தொடர்புகள், உறவுகள் குறித்த உளவியல் கருத்துக்களின் தொகுப்பு இந்நூல். "ஒன்றைச் செய்யக் கடமைப்பட்டிராதவர்களின் அன்பில் மட்டுமே அன்பு விரிகிறது" என்ற வரி, நேர்மறையான மனித மனங்களின் அன்பிற்கான விழைதலை வெளிக்காட்டுகிறது.  தாயின் நிபந்தனையற்ற அன்பு, தந்தையின் நிபந்தனைகளுடன் கூடிய அன்பு பாராட்டல், நட்பு வட்டங்களின் இயல்புகள் குறித்த தெளிவான புரிதல்களுக்கு இக்கட்டுரைகள் எடுத்துச் செல்கின்றன.  அன்பு காட்டுதல், நண்பர்களை அடைதல் குறித்த வழிமுறைகளை எளிமையாக இந்நூல் விளக்கும் என்று எண்ணி வாசிக்கத் துவங்கினால் பெரும் ஏமாற்றம் மட்டுமே வாசகனுக்குக் கிடைக்கும்.  இந்நூல் தர்க்கவாதங்களுக்கு உட்பட்ட மனித மனங்களின் சிந்தனையோட்டங்களை மட்டுமே அணுகிச் செல்கிறது. "எது வலி தருவதாக இருக்கிறதோ அதுவே நன்மையானதென்று மேற்கத்திய கருத்தாக்கம் ஒழுக்கம் பற்றி கற்பித்துள்ளது".  தனது விருப்பு மற்றும் இயல்புகளுடன் பொருந்திவரும் நடத்தைகள் இங்கே பெரும் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவதே வழ

சேரன்மாதேவி

Image
  சேரன்மாதேவி  குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்  பழ.அதியமான்  காலச்சுவடு பதிப்பகம்  334 பக்கங்கள்  பாரபட்சம் போன்றதொரு வலிதரும் அனுபவம் வேறு எதுவும் இருக்கவியலாது. உணவில், பந்தியில் மேற்கொள்ளப்படும் பாரபட்சங்கள் ஆறாத வடுக்களாக நீடிக்க வல்லவை. பாமாவின் 'கருக்கு', கே.ஏ.குணசேகரனின் 'வடு' போன்ற புனைவுகள் அத்தகைய வலிகளை பொதுவெளிகளில் உணர்ந்தறியச் செய்துவிடுகின்றன.  புரட்சிகரமான தேசபக்தர் வ.வே.சு ஐயர் சாந்தி நிகேதனம் போன்றதொரு ஆசிரமத்தை தமிழ் மண்ணில் நிறுவிவிடும் ஆர்வத்துடன் மிகுந்த பிரயத்தனத்துடன் பிராமணர், பிராமணரல்லாதோரிடம் இருந்து திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு சேரன்மாதேவியில் ஆசிரமம் நிறுவுகிறார்.  ஆசிரமத்தில் ஒன்றாக அமர்ந்து உண்ண மறுக்கும் இரு சிறுவர்களுக்கு சமையல் அறையில் தனியாக உணவு பரிமாறப்படுகிறது. இளவயதில் குழந்தைகளிடையே பிறப்பு சார்ந்து அமையும் ஏற்றத்தாழ்வுகள் என்ற நஞ்சினை விதைப்பதாக அமையும் இச்செயலை வரதராஜுலு நாயுடு அவர்களும், ஈவேரா பெரியாரும் எதிர்க்கிறார்கள். குருகுலப் போராட்டம் வலுப்பெறுகிறது. சமபந்தி போஜனத்தை உறுதி செய்ய வேண்டும் அல்லது திர