Posts

Showing posts from December, 2021

1984

Image
 1984 ஜார்ஜ் ஆர்வெல்  தமிழில் க.நா.சு  மின்நூல்  288 பக்கங்கள்  அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிகையில் அல்லது ஒற்றை சித்தாந்தம் பரவலாக வலியுறுத்தப்படுகையில் விளைவுகள் எவ்வாறெல்லாம் அமையும்? பொய்கள் அனைத்தும் மெய்யென வலியுறுத்தப்படுவதுடன் நிற்பதில்லை.  நடமாடிக் கொண்டிருப்பவர்கள் காணாமல் போகிறார்கள். வெகு சுலபமாக மறைக்கப்பட்டும் விடுகிறார்கள். 'டெலி ஸ்கிரீன்' அச்சுறுத்தும் வகையில் மக்களைத் தொடர்ச்சியாக கண்காணிக்கிறது.  ரஷ்யாவில் ஆயிரக்கணக்கானோர் கூடிய நிகழ்வு ஒன்றில் அப்போதைய ஆட்சித் தலைவரின் உரையை தொடர்ந்து, பெரும் கரவொலி எழும்பியது. 10 விநாடிகள், 20 விநாடிகள், ஒரு நிமிடம் என்று கரவொலி தொடர்ந்து நீண்டுகொண்டே இருந்ததாம்.  யார் முதலில் கரவொலியை நிறுத்துகிறார் என்பதை கண்காணிப்பதாக அங்கு இருப்பவர்கள் அனைவரும் சந்தேகித்ததால் ஒருவரும் கரவொலியை குறைத்துக் கொள்ளவும், நிறுத்திவிடவும் தயாராக இல்லாத நிலை அது.  அதே ஆட்சியாளரின் மரணத்தருவாயில் அவரது உதவியாளர் முழு வெறுப்புடன் அவரது முகத்தில் காறி உமிழ்ந்ததாகவும், எதேச்சையாக விழித்துக்கொண்ட தலைவரின் கோபத்திற்கு அஞ்சி அவரது கரங்களை முத்தமிட்டு, ப

ராமானுஜன்

Image
 அனந்தத்தை அறிந்தவன் மாமேதை ராமானுஜனின் வாழ்க்கை ராபர்ட் கனிகல்  தமிழில் வாஞ்சிநாதன் நேஷனல் புக் டிரஸ்ட்  511 பக்கங்கள்  1987ஆம் ஆண்டு (ராமானுஜம் நூற்றாண்டு) தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பான தினமணி கதிரில் 'ரகமி' என்றழைக்கப்பட்ட ரங்கசாமி, 'கணிதமேதை ராமானுஜன் வரலாறு' என்னும் தலைப்பில் தொடர் ஒன்றை எழுதினார்.  சிறுவயதில் அத்தொடரை தொடர்ச்சியாக விடுபடல் இன்றி வாசித்தது நினைவுக்கு வருகிறது. என்பதுகளில்,  தினமணி நாளிதழும், அதன் சனி, ஞாயிறு இணைப்புகளான 'தினமணிச் சுடர்', 'தினமணி கதிர்' ஆகியன எங்களுக்கு பெரும் வியப்பை அளிப்பதாக அமைந்திருந்தன.  'முகுந்தன்', 'ஷா' உள்ளிட்ட கதை மாந்தர்களைக் கொண்ட, கிரிக்கெட்டை மையப்படுத்திய தொடர்கதை, அசோகமித்திரனின் எழுத்துகள் உள்ளிட்டவை மற்ற பிரம்மிப்புகள். ராமானுஜனின் நினைவுகளோடு விடிந்த ஞாயிற்றுக்கிழமைகள் அவை.  ரகமியின் 'கணிதமேதை ராமானுஜன்' என்ற நூலை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். ராமானுஜன் குறித்த அறிமுகத்திற்கும், அடிப்படையான புரிதலுக்கும் இட்டுச் செல்லக் கூடிய எளிய நூல் அது. 'The Man Who Knew Inf

மிச்சக் கதைகள்

Image
 மிச்சக் கதைகள்  கி ராஜநாராயணன் அன்னம் பதிப்பகம்  104 பக்கங்கள்  ஏமாற்றிவிடக்கூடிய எளிமை கைவரப்பெற்ற மேதை கிராவின் கதை சொல்லலில் எப்போதும் தனித்துவமான அழகு மிளிரும்.  புதுவை இளவேனில் படம் பிடித்திருக்கும் கி.ராவின் ஒளி ஓவியங்கள் இந்நூலிற்கு மேலும் அழகு சேர்க்கிறது.  பழகும் மனிதர்கள் என்ன சாதியை சேர்ந்தவர்கள் என்பதனை ஒரு சில கேள்விகள் கொண்டே மறைமுகமாக அறிந்து கொண்டுவிடும் மனிதர்கள் எப்போதும் ஆச்சரியம் அளிக்கிறார்கள்.  முன்முடிவுகள் நெருங்கிப் பழகும் எல்லைகளையும் தீர்மானம் செய்து விடுகின்றன.  துணைவியாரின் மறைவின் பிறகான நாட்கள் கி.ராவை எவ்வளவு வருத்தி இருக்கும் என்பதனை 'மூலை' கட்டுரை வாசிக்கையில் உணரமுடிகிறது.  விருந்தின்போது முதல் பந்தியில் ஆண்கள் அமர்த்து உண்கிறார்கள். உண்டு முடித்தபின் இலைகள் அகற்றப்படவில்லை.  அவரவர் மனைவிமார் அதே இலைகளில் விருந்துண்ண தயாராகையில், அதை அறிந்த ரசிகமணி அடையாளம் தெரியாத அளவு இலைகளை மாற்றி மாற்றி வைக்கிறார்.  அவ்வகையில் புதிய இலைகளைக் கொண்டு மனைவிமார்களுக்கு அங்கு விருந்து நடைபெறுகிறது.  'மலையிலிருந்து தரையைப் பார்ப்பதும், தரையில் நின்றவாறே மலை

கட்டுரைத் தொகுப்பு

Image
 கரையும் தார்மீக எல்லைகள்  சிவானந்தம் நீலகண்டன் அகநாழிகை பதிப்பகம்  140 பக்கங்கள் வாசித்துவிட்ட நூல்கள் குறித்து இது போன்று தெளிவாக, மனநிறைவு தரும் வகையில் சில பக்கங்கள் எழுதிவிட முடியும் எனில் அதைவிட ஒரு வாசகனுக்கு திருப்தி அளிப்பது வேறு என்ன இருக்க இயலும்?  இக்கட்டுரைகளில் சிவானந்தம் குறிப்பிடும் நூல்கள் தேடியலைந்து வாசித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும் தரம் உடையதாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.  காந்தியின் பன்முக ஆளுமையை, மாசற்ற சிந்தனையை முதல் கட்டுரை விளக்குகிறது.  சந்தைப் பொருளாதாரத்தின் கருணையற்ற, கோரமுகத்தை அறிகையில் நம்ப முடியாத உணர்வு ஏற்படுகிறது.  மகாகவி பாரதி குறித்த கட்டுரை பாரதியை மேலோட்டமான புரிதலுடன் அணுகுபவரை தெளிவை நோக்கிச் செலுத்தவல்லது.  எட்டயபுரம் ஜமீன்தார் அளித்த 500 ரூபாயில் 485 ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கியும், 15 ரூபாயை செல்லம்மாவுக்கு வீட்டு செலவுக்கு அளித்தும், 'அழியும் செல்வம் கொண்டு அழியா பொக்கிஷங்களை பெற்று வந்தேன்' என பெருமிதம் கொள்ள பாரதியால் மட்டுமே இயலும்.  சமையல் குறிப்பு நூல்கள் அதிக அளவில் விற்பனையாவதன் காரணமாக அசோகமித்த