Posts

Showing posts from July, 2021

கயிறு

Image
  'கயிறு' - 'மண்மீது மனிதனுக்கிருந்த நேசம்'  தகழி சிவசங்கரப் பிள்ளை  தமிழில் சி ஏ பாலன்  சாகித்ய அகாடமி வெளியீடு 1504 பக்கங்கள் மனிதனின் லெளகீக விருப்புகளில் மண் மீதான அவனது மோகத்திற்கு முக்கிய இடமுண்டு. தனக்கென சிறு இடமொன்று தேடுவதில் துவங்கி, நீளத்துவங்கும் எல்லையற்ற பிரயாசைகள் அவனைப் பெரும் சங்கடங்களுக்கு இட்டுச்செல்லும் சாத்தியங்களும் உண்டு.  மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் கேரளத்தின் குட்டநாடு பகுதிக்கு 'கிளாசிப்பேர்' என்றழைக்கப்படும் 'Classifier' கொச்சுப்பிள்ளை மன்னரின் சார்பாக 'கண்டெழுத்து' பணிக்கு நியமிக்கப்படுகிறார்.  கண்டு எழுதுவதால் அப்பணி 'கண்டெழுத்து' என அழைக்கப்படுகிறது. நிலப்பகுதிகளை அடையாளமிட்டு அப்பகுதியில் குறிப்பிடத்தகுந்த பிரதிநிதிகளாக விளங்கும் கோந்நோத்து, கோடாந்திர, சீரட்ட உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கண்டெழுத்து தரப்படுகிறது.  'எருமத்ர மடம்' கிளாசிப்பேரும் அவரது மனைவி குஞ்சு லட்சுமியம்மாவும் தங்குவதற்கு ஆரம்ப எதிர்ப்புகளை மீறி வழங்கப்படுகிறது.  மக்களுக்கு ராஜாங்க  செய்திகளை அறிவிக்கும் பணியில் 'முல்லக்கா

நேர்காணல் நூல்

 அங்கீகரிக்கப்படாத கனவின் வலி சி.மோகன்  மின்நூல்  73 பக்கங்கள்  'உரையாடல் என்பது மிகவும் சௌகரியமான வெளியீட்டு சாதனம்' என்று கூறும் மோகனின் 4 நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல்.  பல சந்தர்ப்பங்களில் தோல்விகள் மகிழ்ச்சி தரக்கூடியது என்றும், மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வதற்கான மனோபாவம் இலக்கியப் படைப்பில் இருந்து தனக்கு உருவாகியிருக்கும் என்றும் தோன்றுவதாக கூறுகிறார் மோகன்.  நற்றிணை வெளியீடான 'சி.மோகன் கட்டுரைகள்' -முழுத்தொகுப்பு நூலினை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாசித்திருந்தேன். அப்பெரும் நூலின் சிறுசிறு பகுதிகளான பத்துக்கும் மேற்பட்ட மின்நூல்களை இம்மாதம் முழுவதும் வாசித்தபோதும், அலுப்பே ஏற்படுத்தாத எழுத்துக்கள் இவை.  'அமெரிக்கா நினைவுகளற்ற நாடு. குடியேறிகளால் உருவாக்கப்பட்டது. இறந்த காலத்தின் பாரம்பரியத்தின் மரபின் தொன்மையான நினைவுகள் எதுவும் அதற்கு இல்லை'. 'இன்றைய படைப்பாளியின் பொறுப்பு தீர்மானிக்கப்பட்ட வாழ்வின் வெற்றி உருவாக்கும் நெருக்கடியை எதிர்கொள்வது என்று நினைக்கிறேன்'.  மோகனின் நுட்பமான எதிர்வினைகளில் ஒருசில வரிகள் மேற்கண்டவை.  படைப்பிலக்கியம் என்பத

நீராட இருக்கிறது நதி

 நீராட இருக்கிறது நதி  சி.மோகன்  மின்நூல்  83 பக்கங்கள்  மனித வாழ்வின் தலைசிறந்த ஊடகமாக இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய சினிமாவே இருக்க முடியும் என்று தோன்றுகிறது. இரண்டரை மணி நேரத்திற்கு வேறெந்த சிந்தனையுமின்றி, பெரும் கவனக்குவிப்புடன் நமது நேரம் செலவாவதிலிருந்தே இதை உணர முடியும்.  திரைப்படங்கள் காண்பதும், அது சார்ந்த கட்டுரைகளை தேர்ந்த எழுத்து ஆளுமைகளின் படைப்புகளிலிருந்து வாசிப்பதுவும், எப்போதும் சமகாலத்  துயர்களில் இருந்து தற்காலிகமாக நம்மை விடுவிப்பவை.  'நினைவு நதியில் நீராடி களிக்கும் பரவசமே இக்கட்டுரைகளின் ஆதாரம்' என்று குறிப்பிடும் மோகன், தனது எழுத்துக்களின் மூலம் திரைக்கலையின் மீதான பார்வையை மாற்றி அமைக்கவும் யத்தனிக்கிறார்.  தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னியான டி ஆர் ராஜகுமாரி பற்றிய கட்டுரை நிலையாமையை பெரிதும் உணர்த்தி வருந்தச் செய்கிறது. காந்தக் கண்களால் பெரிதும் வசீகரித்தவர், அந்திமக் காலத்தில் தொழுநோயுடன் போராடி இறந்திருக்கிறார் என்ற தகவல் பெரும் கலக்கம் அடையச் செய்கிறது.  ஆரூடங்களை முற்றிலும் உண்மையாக்கி, ஒளிவீசி மறைந்த மதுபாலாவின் வாழ்வு, விதியின்

நடைவழி நினைவுகள் 4

 நடைவழி நினைவுகள் 4 சி மோகன்  மின்நூல்  88 பக்கங்கள்  #தருமு_சிவராம்  'உத்வேகத்தின் எக்காளம்' என்று மோகனால் குறிப்பிடப்படும் பிரமிளை, சுயமதிப்பை நிலைநிறுத்திக் கொண்ட, பெருமிதத்துடன் படைப்பியக்கத்தில் முன்னின்ற கலைஞனாகக் கொள்ளலாம்.  படைப்பின், படைப்பாளனின் மேதமையை அறிந்து கொள்ளாத சமூகத்தின் மீது வருத்தம் கொள்வது ஒரு நிலை. அத்தகைய உணர்வின்றி, தன் சுயத்தை அறிந்துணர்ந்து, மிடுக்குடன் படைப்பு மன நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுதல் மற்றொரு நிலை. இரண்டாம் நிலையின் பெரும் அடையாளமாக அறியப்பட்டிருக்கிறார் 'நட்சத்திரவாசி'. #சம்பத்   'இடைவெளி' நாவல் குறித்து பேசும் மோகன், 'இன்றும்கூட மேலதிகமான புரிதலுடன் இந்நாவல் மேலும் மேலும் கிளர்ச்சியை அளித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வாசிப்பின் போதும் திகைப்பூட்டுவதாகவும், ஒரு ரகசிய இதழை விரிப்பதாகவும் இருந்துகொண்டிருக்கிறது'. என்றவாறு பதிவு செய்யும் சொற்கள் நாவல் குறித்த புரிதல்களுக்கு இட்டுச் செல்பவை.  மரணம், 'இடைவெளி' எனில், நாம் அறிந்த வாழ்வு முதல்பாகம் ஆகவும், மரணத்துக்கு பிந்தையநிலை, புதிர்மிகுந்த, அவரவர் ந

நாவல் கலை

 நாவல் கலை  சி.மோகன்  மின்நூல்  107 பக்கங்கள்  நல்லதொரு நாவலின் கட்டமைப்பு, உட்கூறுகள், வாசித்தே ஆகவேண்டிய நாவல்களின் பட்டியல், தவிர்க்கப்பட வேண்டியவை குறித்த தகவல்கள் அடங்கிய நல்லதொரு நூல் இது.  'நவீன யுகத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு நாவல்கலை என்ற எண்ணம் இன்றளவும் என்னிடம் தீர்க்கமாக இருந்துகொண்டிருக்கிறது'  மோகனின் மேற்கண்ட வரி வாசிப்பில் நாவல் என்ற வகைமையின் முக்கியத்துவத்தை உணர்த்தி விடுகிறது.  'நாவலாசிரியன் ஒரு புனைவாளன் மட்டுமல்ல, அவன் தன்னளவில் ஒரு தத்துவவாதி, சிந்தனையாளன், கண்டுபிடிப்பாளன் எனத் தீர்க்கமாகச் சொல்லும் கட்டுரைகள்' என்று முன்னுரையில் குறிப்பிடப்படும் வரிகள் படைப்பாளியின் மேதமையை உயர்த்திப் பிடிக்கின்றன.  இந்நூல் தரும் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் வாசித்துவிட்ட நாவல்கள் பெரும் நிறைவையும், புதிய தரிசனங்களையும் அளிக்கின்றன.  எவ்வாறு வாசிக்க வேண்டும் என்ற விழிப்பு எப்போதும் நிறைந்திருத்தல்  மிகவும் அவசியமென்று தோன்றுகிறது.  கரமாஸவ் சகோதரர்கள், இடைவெளி, புயலிலே ஒரு தோணி, மோகமுள் நாவல்கள் குறித்து மோகன் எழுதியிருக்கும் கட்டுரைகள் வாசிக்கையில் பெரும்

நடைவழி நினைவுகள் 3

 நடைவழி நினைவுகள் 3  சி.மோகன்  மின்நூல்  87 பக்கங்கள்  எண்பதுகளின் மத்தியில் தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பான தினமணி கதிரில் கிரிக்கெட்டை மையப்படுத்திய கதைகளும், தேசப் பிரிவினையின்போது ஹைதராபாத் இணைப்பின் நெருக்கடியான காலகட்டங்களை பின்னணியாகக் கொண்ட எளியமொழியில் அமைந்த கதைகளையும் வாசித்திருக்கிறேன்.  அசோகமித்திரன் என்ற பெருங்கலைஞன் எவ்வித பிரயத்தனமும் இன்றி வெகு இயல்பாகவே மனதில் வந்தமர்ந்த அழகிய தருணங்கள் அவை.  272 சிறுகதைகள், 9 நாவல்கள், எண்ணற்ற கட்டுரைகள் எழுதிக் குவித்திருக்கும் அப்படைப்பாளியின் இறப்புச்செய்தி அதே நாளிதழில் சிறிய அளவிலேயே சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்தது ஏற்கவே முடியாத பெரும் சோகத்தை அளித்தது.  மோகனின் நான்கு கட்டுரைகளையும் வாசித்து முடித்தபோது அசோகமித்திரனின் நினைவுகளில் நம்மை சற்றுநேரம் பிணைத்துக் கொள்ள இயலுகிறது.  சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தகக் காட்சியில் நற்றிணை பதிப்பக ஸ்டாலில் பச்சை வண்ணத்தில் செம்பதிப்பாக வெளியிடப்பட்டிருந்த அழகியதொரு முழுத்தொகுப்பு நூலை கையில் ஏந்தியபோது பூரிப்பாக இருந்தது. அன்று அந்நூலை வாங்க இயலவில்லை.  இணையம் மூலமாக பின்

மஞ்சள் மோகினி

  மஞ்சள் மோகினி சிறுகதைகள்  சி.மோகன்  மின்நூல்  185 பக்கங்கள்  எளிதாக வாசித்து கடந்துவிட இயலாத மிக நுட்பமான வாசிப்பைக் கோரும் கதைகளின் தொகுப்பு நூல் இது.  ஜி நாகராஜனின் கடைசி இரு நாட்களை புனைவாக கொண்டு வந்து மனதை கனக்கச் செய்துவிட்டார் மோகன்.  பெரும் கலைஞர்களின் சாகச மனநிலையும் எதிர்பார்த்தே இராத உடனடி பெருவீழ்ச்சியையும் அடைந்துவிட்ட ஜி நாகராஜன் பற்றிய குறிப்புகள் மோகனின் எழுத்துக்களில் முற்றிலும் புதிய தரிசனங்களை அளித்துவிடுகின்றன.  'மரணம் அவருடைய முகத்துக்கு ஒளியூட்டி இருந்தது. நிறைவும் சாந்தமும் அந்த ஒளியில் புலப்பட்டன' என்றவாறு அக்கதை நிறைவடைகிறது.  விடுமுறை நாட்களில், கிராமத்து பூர்வீக வீடுகளில் கிடைக்கப்பெறும் சிறுசிறு அனுபவங்களும் மறுக்கவியலா இனிய தருணங்களாக நிலைத்து விடுவதை வேறொரு கதை பேசுகிறது.  பொருளாதாரமே முதன்மையாக அறியப்பட்டுவிட்ட சூழலில் தனிமையில் புறம் ஒதுக்கப்பட்டுவிடும் பிஞ்சுகளின் உலகை நினைவுபடுத்தும் கதையொன்றும் இத்தொகுப்பில் உண்டு.  விளையாட்டு பொம்மைகள், தாத்தா, பாட்டிகளே குழந்தைமையில் பெரும் ஆறுதல் அளிப்பவர்களாக இருந்து விடுகிறார்கள். பிஞ்சுவயதில் அனுபவிக்க

கருப்புப் புத்தகம்

Image
  கருப்புப் புத்தகம்  ஓரான் பாமுக்  தமிழில் எத்திராஜ் அகிலன்  காலச்சுவடு பதிப்பகம்  623 பக்கங்கள்  இயல்பான நடத்தைகளையும், உணர்வுகளையும் புறந்தள்ளி யாரோ ஒருவரை போலிசெய்து வாழ்வதே நாகரீகம் என்றும், புத்திசாலித்தனம் என்றும் கற்பிக்கப்பட்டு, நிலைபெற்றுவிட்ட காலத்தில், 'கருப்புப் புத்தகம்' போன்ற நூல்கள் தனிமனித குணாதிசயங்களை ஆய்வு செய்வதில் அளித்திடும் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. பாமுக்கின் முந்தைய நான்கு நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து 'தமிழ் பாமுக்'காகவே நிலைத்துவிட்ட ஜி.குப்புசாமி அவர்கள், செய்திருக்க வேண்டிய இந்நூலின் மொழிபெயர்ப்புப் பணியை தயக்கத்துடன் ஒப்புக் கொண்டதாக பின்னுரையில் குறிப்பிடும் எத்திராஜ் அகிலன் அவர்கள், பெரும் உழைப்பை சிரமம் பாராமல் அளித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.  பௌதிக இருப்பாகவன்றி, நினைவு கூர்தல்களிலும், சிறுசிறு உரையாடல்களிலும் மட்டுமே அறியப்படும் பத்தி எழுத்தாளன் ஜெலால், நாவலின் 90% நிறைவிற்குப்பின்  பிரேதமாகவே அறிமுகமாகிறான். 'நினைவெனும் தோட்டம் வறண்டு போகும் போது, அந்தத் தோட்டத்தில் இருக்கும் கடைசி மரங்களையும் வாடத் தயங்கிநிற்கும்

வீடில்லாப் புத்தகங்கள்

 வீடில்லாப் புத்தகங்கள்  எஸ் ராமகிருஷ்ணன்  தேசாந்திரி பதிப்பகம்  232 பக்கங்கள்  எஸ்ராவை வாசித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்ற குற்ற உணர்வு உறுத்திக்கொண்டே இருந்தது.  ஆகையால் இந்நூல் கைக்கு கிடைத்த இரண்டே நாட்களில் வாசித்தாகிவிட்டது. எஸ்ராவின் எந்த ஒரு நூலுக்கும் இதுவரை வாசிப்பு பதிவு நான் எழுதியதில்லை.  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2018 சென்னை புத்தகத் திருவிழாவில், தேசாந்திரி பதிப்பகம் துவங்கிய புதிதில், 2 சுற்றுகளாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவந்து வாசித்திருந்தேன். அதற்கு முன்னர் உயிர்மை பதிப்பகம்,  உள்ளூர் நூலகத்தில் இருந்து வாசித்த நூல்கள் 30க்கும் மேல் இருக்கும்.  ஆரம்பநிலை வாசகனுக்கு அடுத்தடுத்து வாசிக்கவேண்டிய படைப்புகளையும், படைப்பாளிகளையும் எஸ்ராவைவிட எந்த தமிழ் எழுத்தாளர் அறிமுகப்படுத்திவிட முடியும்?  'வாசகபர்வம்' நூலினை வாசித்ததால்தான் ப.சிங்காரம், வண்ணநிலவன், கோபிகிருஷ்ணன் போன்றவர்களை அறிந்து கொள்ள முடிந்தது.  'நம் காலத்து நாவல்கள்' உலக இலக்கியத்தையும், எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்தது.  ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போதும் எஸ்ராவின் பரிந்த

தெறிகள்

 தெறிகள்  முன்னுரைகள் மதிப்புரைகள்  சி.மோகன்  மின்நூல்  99 பக்கங்கள்  நுட்பமான பார்வை மற்றும் தீர்க்கமான சொற்களுடன் வடிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் அடங்கிய நூல் இது. க.நா.சு அவர்களை 'தமிழ் இலக்கியச் சூழலில் 20 ஆண்டுகளை  (1945-65) நிர்மானித்த மேதை, இலக்கிய வாழ்வை கடும் தவமென மேற்கொண்ட ஞானி' எனக் குறிப்பிடுகிறார்.  'யூமா வாசுகியின் ஓவிய பயிற்சி, கவிதை வெளியில் அவருடைய படைப்பாக்க பயணம் சிறக்க வழி அமைத்துக் கொடுப்பதாக' கூறுகிறார்.  மிகுந்த பிரயத்தனத்துடன், விரிவான பார்வையில் அமைந்துள்ள மோகனின் எழுத்துக்கள், படைப்புகள், படைப்பாளிகள் குறித்த தெளிவான புரிதல்களுக்கு வாசகனை இட்டுச்செல்ல வல்லவை.  'இலக்கியத்தைப் பொறுத்தவரை முன்னோரைவிட சிறப்பாக எழுதுவது என்பது அல்ல படைப்பாளியின் பிரச்சினை. அவர்கள் பார்க்காததை பார்ப்பதும் (குறைந்தபட்சம் அவர்கள் பார்க்காத விதத்திலாவது பார்ப்பது) சொல்லாததை சொல்வதும் (குறைந்தபட்சம் அவர்கள் சொல்லாத விதத்திலாவது சொல்வது) ஒரு படைப்பாளியின் செயல்பாடாக இருக்க முடியும்'.  மேற்கண்ட வரிகளை பெரிதும் ரசித்து வாசித்தேன்.  அறியாமையினுள் அழகியல் மறைந்திருப்பதை

நடைவழி நினைவுகள் II

  நடைவழி நினைவுகள் தொகுதி-2  சி.மோகன்       மின்நூல்  103 பக்கங்கள் #நகுலன்  'எப்படி எப்படி எழுதினால் என்னை தெரிந்து கொள்ளலாம் என்றுதான் விதம் விதமாக எழுதிப் பார்க்கிறேன்'  எட்டு நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட இலக்கிய வகைமைகள் எழுதிக் குவித்திருக்கும் நகுலன் தனிமையில் வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்ற தகவல் அறிந்திருப்போம். அவரது படைப்புகள் அனைத்தும் காவ்யா பதிப்பகம் மூலம் வெளியாகி உள்ளன என்ற தகவல் எனக்கு புதியதாக இருந்தது.  'தனித்துவம் மிளிரும் எளிமையின் வசீகரம் நகுலன்'  இதைவிட சுருக்கமாக, அழகாக ஒரு படைப்பாளி குறித்து கூறி விட முடியுமா? சி.மோகன் உணர்வுபூர்வமாக எழுதி இருக்கிறார் என்று தோன்றுகிறது. #ஜி_நாகராஜன்  விளிம்புநிலை மக்களை அசாத்தியமாக புனைவுகளில் கொண்டுவந்த ஜி.நாகராஜன், தோற்ற வசீகரமும், எழுத்து வன்மையும் ஒருங்கே கொண்டிருந்த தமிழ் இலக்கியப் பேராளுமை.  'வாழ்வின் முட்களில்  விழுந்தேன், ரத்தம் சிந்துகிறேன்', 'இக்குளிர் சிதையில் வைத்தால் மட்டுமே அடங்கும்' கண்ணீரை வரவழைத்த வரிகள் இவை. மேதமை மிகுந்த படைப்பாளியான ஜி நாகராஜனின் வாழ்வு இ

இதய ஒலி

Image
 இதய ஒலி  ரசிகமணி டிகேசி கட்டுரைகள்  மின்நூல்  179 பக்கங்கள்  'பிறமொழிகளின் வாயிலாக கவியின் உயர்நிலையை அடைய எண்ணுவது காதலியின் புன்னகையைக் காண வக்கீலுக்கு வக்காலத்து அளிப்பது போன்றது' என்ற டி கே சி யின் கூற்று தமிழுக்கு மிகவும் பொருத்தமானதுதான்.  ஜப்பான் கொரியாவை கைப்பற்றிய போது கொரிய மொழியை அழிக்க ஜப்பானியர்கள் முயன்றது பெரிதும் அதிர்ச்சி அளிப்பதுடன், தாய்மொழியின் மேன்மையையும் உணர்த்துகிறது.  முன்னுரையில் இந்நூலினை பெரும் ஆர்வமுடன் களவாடி வந்தமை குறித்து சின்ன அண்ணாமலை சுவைபட எழுதியுள்ளார்.  காலச்சுவடு இதழில் தீப.நடராஜனின் மறைவுக்கு அஞ்சலி கட்டுரை வெளியாகி இருந்தது. கட்டுரையை வாசித்தபோது டி கே சியின் இதய ஒலி நூல் குறித்த தகவல் அறிந்தேன்.  எப்போதோ கிண்டிலில் விலையின்றி தரவிறக்கம் செய்து வைத்த இந்நூலின் நினைவுவந்து வாசிக்கத் துவங்கினேன்.  போதுமான அளவு குறிப்புகளையும் எடுத்துவிட்டு, வாசிப்பை நிறைவு செய்ததும் கைதவறி நூல் டெலிட் ஆகிவிட்டது.  ஏற்பட்ட கவலைக்கு அளவே இல்லை. நம்பிக்கையின்றி செயலியை அணுகிக் கொண்டிருந்தபோது உதவி வாய்ப்பின் மூலம் சில நிமிடங்களில் நூல் திரும்ப கைக்கு கிடைத்

மொழிபெயர்ப்பு பார்வைகள்

 மொழிபெயர்ப்பு நூல்கள் 2000 - 2020 'மொழிபெயர்ப்பு வெவ்வேறு மொழிகளுக்கிடையே அமைந்திருக்கும் உறவின் வெளிப்பாடு' - வால்டர் பெஞ்சமின். 'இருவேறு மொழிகள் சந்திக்கும் ஓர் இடமாக மொழியாக்கங்கள் இருக்கின்றன' - பிரபஞ்சன் சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் காணொளி ஒன்று வெளியாகியிருந்தது படைப்பாளி ஒருவர் தீவிரமான முகபாவத்துடன் குறிப்பிட்ட நூல் ஒன்றின் மொழிபெயர்ப்புப் பணியை நிறைவு செய்யும் காட்சி அது. உணர்ச்சிப் பிழம்பாக மாறிவிட்டவர் நூலினை நிறைவு செய்த விநாடியில் எழுதுபலகையுடன் கூடிய தாள்களை தனது நெற்றியில் வைத்து முழுமையின் நிறைவில் லயித்தது மெய்சிலிர்க்க வைத்தது. எழுதுகையில் அவரது முகத்திலும் கண்களிலும் துல்லியமான அதிர்வுகளை காணமுடிந்தது. அவரது அனுமதியின்றி அக் காணொளி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது. அந்த மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி. அவர் நிறைவு செய்த படைப்பு அருந்ததி ராயின்  இரண்டாவது நாவல் 'பெருமகிழ்வின் பேரவை'(Ministry of atmost happiness). ஜனவரி 2020 புத்தகக் காட்சியில் காலச்சுவடு வெளியீடாக அந்நூல் வெளிவராமல் தாமதமாகியது மொழிபெயர்ப்புப் படைப்