Posts

Showing posts from July, 2023

கட்டுரைத்தொகுப்பு

Image
 ஏகே செட்டியார் படைப்புகள் முதல் தொகுதி பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் சந்தியா பதிப்பகம்  ஆயிரம் பக்கங்கள் 'ஒரு பிறவியில் பல பிறவிகளுக்குரிய அனுபவங்களைத் தருவது வாசிப்பின் பயன்' என்று நண்பர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். தினமணி நாளிதழில் நடுப்பக்க கட்டுரையில் இன்று அதே வரியை கிருங்கை சேதுபதி அவர்கள் கூறியிருக்கிறார். வாசிப்புப் பழக்கம் உடையவர் ஊர் சுற்றும் இயல்பினராகவும் இருக்கையில் அனுபவங்களின் அளவு பன்மடங்கு அதிகரித்து விடுகிறது. ஏகே செட்டியார் மிகமிக அரிய மனிதர் அவரது மேம்பட்ட சிந்தனையும், ஊர்சுற்றும் குணமும், காந்தி மீதான காதலும், தன்னை ஒருபோதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாத இயல்பும் நம்பவே முடியாதவை.  இரு தொகுதிகளாக 2000 பக்கங்களுக்கு நீளும் இத்தொகுப்பு பணியில் ஈடுபட்ட கடற்கரய் அவர்களின் மெனக்கெடலை நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியம் ஏற்படவில்லை. ஏனெனில் காந்தியின் மீதான ஏகே செட்டியாரின் காதலைப் போன்றதுதான் செட்டியார் மீதான கடற்கரயின் ஈர்ப்புணர்வு என்றவாறு தெளிந்து கொள்ளலாம். அவரது நீண்ட முன்னுரையே அதற்கு சாட்சி. ஏகே செட்டியார் தயாரித்த மகாத்மாவின் ஆவணப்