Posts

Showing posts from January, 2023

கட்டுரைகள்

Image
 எங்கேயும் எப்போதும் எஸ்பிபி நினைவலைகள் தொகுப்பு அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம் 143 பக்கங்கள் 14 எழுத்தாளுமைகளின் கட்டுரைகள், எஸ்பிபி சரணின் நேர்காணல் அடங்கிய நூல் இது.  ஒவ்வொருவரின் எழுத்திலும் எந்த ஒரு தரவும் 'கூறியதுகூறல்' வகையினதாக அமையவில்லை.  அப்பெருங்கலைஞன் மீதான பிரம்மிப்பும், வற்றாத அன்பும் மட்டுமே எல்லா கட்டுரைகளிலும் பொதுவாக அமைந்துவிட்ட அம்சங்கள்.  காலச்சுவடு இதழில் முன்பே இடம்பெற்றுவிட்ட சில கட்டுரைகளைத் திரும்ப வாசித்த போதும் அலுப்பு ஏதும் தோன்றவில்லை.  எழுத்தில் வடிக்கும் திறன் பெற்றிருப்பின் இதுபோன்ற லட்சக்கணக்கான கட்டுரைகள் எஸ்பிபி அபிமானிகளிடமிருந்து குவிந்திருக்கும்.  90களின் துவக்கத்தில் இனம் புரியாத சோகங்களுக்கு பதின் வயதிலேயே ஆட்பட்ட தருணங்களில் 'உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்....' பாடலின் மூலம் தேற்றி அரவணைத்த குரல் அது எனக்கு.  2000 களின் துவக்கத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சிக்கு ஒரேயொரு மதிப்பெண் குறைவாகப் பெற்று, அரசுப் பணியை இழந்த நிலையில், மனமுடைந்து போய் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் பெரும் சோகத்துடன்

நாவல்

Image
 கோவேறு கழுதைகள் இமையம் மின்நூல் 376 பக்கங்கள் உடல் உழைப்பையே வாழ்வாதாரத்திற்கான வழியாகக் கொண்ட விளிம்புநிலை மக்களை அவர்தம் உன்னதப் பணிகளை புதினமாக படைத்திருக்கிறார் இமையம்.  கொத்தடிமைகள் போன்று பணியாற்ற நிர்பந்திக்கப்படும் மனிதர்கள், தமது வாழ்விற்கான மிகமிகக் குறைந்த தேவைகளுக்காக இரப்பவர்கள் போன்று சிறுமைப்படுத்தப்படுவதை சமூகம் கள்ள மௌனத்துடன் அவதானித்துக் கொண்டேதான் இருக்கிறது.  நாவலின் துவக்கத்தில் இழவு வீட்டில் ஓடியாடி பணிகளைக் கவனிக்கும் சவுரி, தொடர்ச்சியாக வீட்டுக்காரனின் வார்த்தைகளால் அவமதிக்கப்படுகிறான். முடிவில் அவனது கூலியும் பேரத்திற்கு உள்ளாகிவிடுகிறது.  பிரசவம் பார்க்கச் செல்லும் 'ஆரோக்கியம்', அப்பெண்ணின் சுடு சொற்களையும், அத்துமீறல்களையும், கனிவுடன், மெல்லிய புன்னகையுடன் பொருட்படுத்தாமல் பணியை நிறைவு செய்கிறாள்.  வட்டார மொழிநடை நாவலுக்கு பெரும்பலமாக அமைந்துவிடுகிறது. எளிய மனிதர்களின் துன்பமிகு வாழ்வியலை இமையம் கலையாக வாசகனிடம் முன் வைக்கிறார். 'உங்க வண்ணாத்தி சாமி' 'உங்களை அண்டி பிழைப்பவ அய்யா' போன்ற வரிகள் பெரும் வலியை ஏற்படுத்துபவை.  துணிகளை வீடு

கதைகள்

Image
 பொன்னுலகம் சுரேஷ் பிரதீப் அழிசி பதிப்பகம் 172 பக்கங்கள் சுரேஷ் பிரதீப்பின் 10  சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இந்நூல்.  'இழந்த பின்னும் இருக்கும் உலகம்' என்றொரு கட்டுரையை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். கவிஞர் சுகுமாரன் எழுதிய கட்டுரை அது. பள்ளி நினைவுகள் குறித்த அக்கட்டுரை மிகவும் ஈர்த்தது.  இத்தொகுப்பின் முதல் கதை 'வேம்பு' அவ்வாசிப்பை நினைவுபடுத்தியது. நண்பர்களுடனான உரையாடல்கள், தூய்மையான ஈர்ப்புகள், ஆசிரியர்கள் மீதான அபிமானங்கள், மோதல்கள் என எத்தனைையோ தருணங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் நிரம்பியுள்ளன.  முழுமையாக அறிந்து உணர இயலாத தரவுகள் அமானுஷ்யங்களாகவே நீடித்து விடுகின்றன. 'கற்றாழைக் கிணறு' அவ்வகையில் அமைந்துவிட்ட நல்ல புனைவு.  பெருந்தினையும், கைக்கிளையும் இல்லாத மனித வாழ்வு ஏது? 'மோகமுள்' யமுனாவை ஓரளவு நினைவுபடுத்தி விடுகிறார் 'பூரணி'.  குளிர்ந்த நிழல் போன்ற பாதுகாப்பு உணர்வை, ஆசுவாசத்தை அளிக்கும் இல்லத்திற்கு மூத்த பெண்கள் தமக்கேயுரிய  மன அழுத்தங்களை பகிர இயலாதவர்களாகவே இருக்கின்றனர். இறுதி அத்தியாயத்திற்கு பிறகு எத்தனையோ விடயங்கள் தெரிய வருக

கட்டுரைகள்

Image
 கண்ணாடிச் சொற்கள் ஜி குப்புசாமி காலச்சுவடு பதிப்பகம் 191 பக்கங்கள் இந்த ஆண்டின் சென்னை புத்தகக் காட்சி என் வாழ்நாள் முழுவதும் நினைவின் அடுக்குகளில் நிலைத்திருக்கும்.  எனது மதிப்புமிகு ஆசிரியர்  ஜி.குப்புசாமி அவர்களின் 'கண்ணாடிச் சொற்கள்' கட்டுரைத் தொகுப்பு நூலினை எழுத்தாளர் மருதன் வெளியிட, அதைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினை அடியேனுக்கு அளித்தமை அவரது பெருந்தன்மை.  குறைந்தது இரண்டு மணி நேரமாவது அவருடன் புத்தகக் காட்சியில் செலவிட்ட நேரம் பெரும் உவகை அளித்தது. 'கண்ணாடிச் சொற்கள்' நூலில் இடம்பெற்றுள்ள பல கட்டுரைகளை முன்பே காலச்சுவடு இதழ்களிலும், முகநூல் பதிவுகளிலும் வாசித்திருந்த போதும் நூல் வடிவில் தற்போது வாசித்தமை சிறப்பானது.  பாப்லோ நெரூடா குறித்தும், சரமாகோ குறித்தும் அறிந்து கொண்ட போது வியப்பு மேலிட்டது.  தனது மண்ணின் மைந்தர் மருத்துவர் ஹரி சீனிவாசன் குறித்த பெருமிதம் முதல் கட்டுரையில் நிரம்பி வழிகிறது.  இலக்கிய ஆளுமை சார்வாகனாக அவர் அளித்திருக்கும் காத்திரமான கதைகளையும் இக்கட்டுரை விளக்கிச் செல்கிறது. தேவிபாரதி நூல்களின் மீது பெரும் ஈர்ப்பு ஏற்படக் காரணம் ஜிகேயின் &

கட்டுரைகள்

Image
 இந்தியாவில் சாதிகள் டாக்டர் அம்பேத்கர் எதிர் வெளியீடு 143 பக்கங்கள் 1936 ஆம் ஆண்டு லாகூரின் ஜாத்-பட்-தோடக் மண்டல் அமைப்பின் வருடாந்திர மாநாட்டிற்காக டாக்டர் பி ஆர் அம்பேத்கர் தயாரித்த உரையின் எழுத்து வடிவம் இந்நூல்.  இந்த உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல என்று மாநாட்டின் வரவேற்புக் குழுவினர் கருதியதால் மாநாடு ரத்து செய்யப்பட்டதாக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மண்டல் அமைப்பினரின் கடிதங்களும், அம்பேத்கரின் காட்டமான எதிர்வினைகளும் நூலில் இடம்பெறுகின்றன.  அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களைக் காட்டிலும் சமூக சீர்திருத்தமே முதன்மையானது என்று வலுவாக குறிப்பிடுபவர், சாதிய அரக்கனை கொன்றழித்தாலன்றி அரசியல், பொருளாதார சீர்த்திருத்தங்களை பெற முடியாது என்கிறார். 'அந்நியக் கலப்பு இல்லாத சாதியோ, வகுப்போ இந்தியாவில் எதுவுமில்லை' என்ற கருத்து சிந்திக்கத் தக்கது. 'சாதி, பொருளாதார மேம்பாட்டிற்கு நன்மை தரக்கூடியதல்ல, இன மேம்பாட்டிற்கும் உதவவில்லை' மேற்கண்ட வரிகள்  தேர்ந்த சிந்தனையாளரின் கருத்துக்கள்.  முகம்மதியரின் வருகைக்கு பிறகு முஸ்லிம் அ