Posts

Showing posts from November, 2022

கட்டுரைகள்

Image
இதுவே சனநாயகம் தொ. பரமசிவன் காலச்சுவடு பதிப்பகம் 127 பக்கங்கள் சமூக பண்பாட்டு ஆய்வாளரான தொ.பரமசிவனின்  கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  அரிய தகவல்களை எளிய மொழியில் நேர்த்தியாக எழுதிச் செல்கிறார் தொ.ப  கடவுள் வழிபாட்டின் தொடக்க காலத்தில் பெண்களே பூசாரிகளாக இருந்துள்ளனர் என்ற தகவல் புதிதாகத்தான் இருக்கிறது. மகாராணி, கோமகன் போன்ற வார்த்தைப் பிரயோகங்களும், மதுரை மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகத் திருவிழா பற்றிய குறிப்பும் முதல் கட்டுரையிலேயே இடம்பெறுகின்றன.  சிறுதெய்வ வழிபாடு தொடர்ச்சியாக, உறுதியாக அழிக்கப்பட்டமையை அறிகையில் பெரும் அதிர்ச்சியும், ஆசுவாசமும் ஏற்படுகின்றன.  சிறுவயதில் வீட்டு பெரியவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி 'கோளறு பதிகம்' படித்திருக்கிறேன்.  //கிபி ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் ஆயிரம் சமணர்களை கழுவில் ஏற்றி சம்பந்தர் 'புண்ணியம்' தேடிக்கொண்ட பிறகும் தமிழ்நாட்டின் தென்பகுதியில் சமணம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை உயிரோடு இருந்தது.//  மேற்கண்ட வரிகளை வாசித்து முடித்த போது சம்பந்தர் பற்றிய மென்மையான பிம்பம் விழுந்து நொறுங்கியது.  அழிந்துபோனவையென்று ஏதுமில்லை அவற்ற

கதைகள்

Image
 பிறகொரு இரவு தேவிபாரதி காலச்சுவடு பதிப்பகம் 144 பக்கங்கள்  நுட்பமான வாசிப்பைக் கோரும் நான்கு கதைகளைக் கொண்ட தொகுப்பு இந்நூல்.  சம்பாபதி தெருக்களில் மரவுரி தரித்து இளந்துறவியாக தோழி சுதமதியுடன் அலைந்து திரியும் மேகலை, பெண்மையின் தீராத் துயரம் மற்றும் அடையாளச் சிக்கல்களுக்கான கடந்த காலத்தின் பெரும் அடையாளக் குறியீடு. காம வேட்கையுடன் அவளை அணுகும் உதயகுமாரன்,  அவளது துறவு அடையாளத்தையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. கனிகையர் ஒழுக்கத்தை அவளிடம் வலியுறுத்துகிறான். முதிர்க்கனிகை சித்ராபதி, அலங்காரங்களில் அவலத்தை மறைத்து இந்திரனை வீழ்த்துகிறாள். நட்பு, திருமண உறவின் தார்மீக அறங்களைத் தாண்டி நிகழும்  பாலியல் அத்துமீறல்களை உளவியல் நோக்குடன் அணுகும் இரு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  காலவோட்டத்தின் ஏதோ ஒரு புள்ளியில் தவறவிடப்படும் மணவாழ்வு பிரதிக்னை, தீராத துயரங்களையும், அலைக்கழித்துவிடும் பெரும் போராட்டங்களையும் தருவித்து விடுகிறது.  சிலிர்ப்பூட்டும் துவக்கத் தருணங்கள், நாளடைவில் எளிதில் விலக்கிவிட இயலாத பாரமாக எஞ்சிவிடுகிறது.  பெயரிடப்படாத அந்நபர் சாருவிடமும், தாஸிடமும் நிகழ்த்தும் உரையாடல்

கல்வி

Image
 தமிழ்மொழிக் கல்வி  பதிப்பாசிரியர் சு ராஜாராம்  காலச்சுவடு பதிப்பகம்  215 பக்கங்கள்  முந்தைய 20 ஆண்டுகளில் (1994 -2014) காலச்சுவடு  இலக்கிய இதழ்களில் வெளியான கல்வி சார்ந்த 19 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  உலகத் தொடர்பு மொழியாக ஆங்கிலம் நீடிக்கும்போதும் அம்மொழியை காலணிய மொழி என்றும், தமிழ் உள்ளிட்ட நமது மொழிகளை தாய்நில மொழிகள் என்றும் மிகவும் நயமாக வர்ணிக்கிறது இந்நூல்.  தாய்மொழிவழிக் கற்றலின் மூலமே சுயசிந்தனையும், படைப்பாற்றலும் இயல்பாக மேம்படும் என்று உலக அளவில் சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும் உறுதியாக, தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.  இருப்பினும் ஆங்கில வழிக் கல்வியையே பெற்றோர் பெரிதும் விரும்பி குழந்தைகளிடம் திணித்தல் ஏமாற்றமளிப்பதாகும்.  நமது தமிழகம் போன்றே கேரளமும் ஆங்கில வழிக் கல்வியை நாடுவது வியப்பளிக்கிறது.  அரசு பள்ளிகளையும், ஆசிரியர்களையும் ஒரு கட்டுரை கடுமையாக சாடுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.  பள்ளிக்கல்வி முழுமையும் தனியார் ஆங்கிலவழிக் கல்வியை நாடும் பெற்றோர், உயர்கல்விக்கும், வேலை வாய்ப்பிற்கும் அரசு நிறுவனங்களை நாடுதல் அறமற்றது.  இரு மொழிகளிலும் புலமையற்ற ந

கதைகள்

Image
 எம் வி வெங்கட்ராம் சிறுகதைகள் முழுத்தொகுப்பு  காலச்சுவடு பதிப்பகம்  1175 பக்கங்கள்  தனது படைப்புகள் குறித்த அளவற்ற பெருமிதமும், தனது வாசகர்கள் குறித்த தீர்க்க தரிசனமும் நிரம்பிய பெருங்கலைஞன் எம்.வி வெங்கட்ராம்.  வைக்கம் முகம்மது பஷீர் போன்றே வண்ணமயமான வாழ்வியல் அனுபவங்களால் நிறையப் பெற்றவர் எம்விவி.  106 கதைகளைக் கொண்ட இம்முழுத் தொகுப்பில் மூன்றில் ஒரு பங்குக்கு குறைவான எண்ணிக்கையில் புராணக் கதைகள் இடம் பெற்றுள்ளன.  புராணக் குறிப்புகளாலும், கற்பனைகளாலும் நிரம்பப் பெற்றவையாக அக்கதைகள் உள்ளன.  'குந்தி' அனைவரும் அறிந்த இதிகாசக் குறிப்பு எனினும் படைப்பாளியின் முத்திரையை இக்கதையில் அறிய இயலும். 'இதயங்களுக்கு பேசும் சக்தி ஏன் கொடுக்கப்படவில்லை?' என்ற கர்ணனின் கேள்விக்கு, 'பின்பு வேதனையை எப்படி உண்டாக்குவது?' என்று எதிர் கேள்வியை பதிலாக அளிக்கிறார் குந்தி.  மிகவும் இளைய வயதிலேயே புனைவு தளத்தில் நுழைந்துள்ள எம்விவி, முதிர்ந்த சிந்தனையுடன் வயது மூத்த தம்பதியரின் மன ஓட்டங்களை சித்தரித்துள்ள கதை 160.  85 வயதான கணவரையும், 75 வயதான மனைவியையும் குறித்த கதை இது.  வழமையான கதைக