Posts

Showing posts from January, 2022

இரவு

Image
 இரவு ஜெயமோகன் மின்நூல் 319 பக்கங்கள்  பணி நிமித்தமாக தமிழக ஆடிட்டர் சரவணன், எர்ணாகுளம் செல்கிறார். அண்டை வீட்டின் இரவு நடவடிக்கைகள் அவரை வியப்புக்குள்ளாக்குகிறது. பகலில் ஆளரவமற்று விளங்கும் அவ்வீடு இரவில் விழித்துக் கொள்கிறது.  அவ்வீட்டில்  அட்மிரல் மேனனும், அவரது மனைவி கமலாவும் வசிக்கின்றனர். இரவில் மட்டும் நடமாடும், செயல்படும் குழு ஒன்று அவரது ஒருங்கிணைப்பில் இயங்குகிறது.  இரவுகளுக்கு மிகவும் பரிச்சயம் ஆகிவிடும் அவர்தம் கண்கள் பகலைக் காண கூசுகிறது. தயக்கத்துடன் குழுவில் இணையும் சரவணன் நீலிமாவை சந்திக்கிறான்.  திருமணம் நடைபெற இருந்த கடைசித் தருணத்தில் தனது இணையை இழந்த நீலிமா, சரவணனால் கவரப்படுகிறாள். இரவு நேரங்களில் அவர்கள் இருவரின் கார் பயணங்களும், விவாதங்களும் கூர்மையாக புனையப்பட்டுள்ளன.  முறையற்ற பழக்கம் இந்த இரவு நேர வாழ்க்கை என்று தன் வீட்டுப் பணிப்பெண்ணால் எச்சரிக்கப்படும் சரவணன், சுதாரித்துக் கொண்டு தனது இயல்பான பணிகளுக்குத் திரும்புகிறான்.  சிறு இடைவேளைக்குப் பின் இரவு வாழ்வே அவனை மீண்டும் வசீகரிக்கிறது. முறையற்ற பாலியல் தொடர்பினால் அட்மிரலின் மனைவி கொல்லப்பட, ஏமாற்றத்துடன் வ

கி.மு-கி.பி

Image
 கி.மு-கி.பி மதன் மின்நூல் 217 பக்கங்கள்  பூமியின் இதயப் பகுதியான ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதஇனம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கால்நடையாகவே பிற இடங்களுக்கு பயணித்து இருக்கிறது.  பூமியானது வெப்பநிலை உயர்வுக்கு முந்தைய கடல் எல்லைகளை கொண்டிருந்ததால், மனிதனின் தடையற்ற பயணங்கள் சாத்தியப்பட்டிருக்கிறது.   மின்னல் தோன்றிய போதெல்லாம் காணநேர்ந்த காட்டுத்தீ, நெருப்பை அவனுக்கு அறிமுகம் செய்திருக்கிறது. நெருப்பில் வாட்டிய இறைச்சி புதியதொரு ருசியை அறிமுகப்படுத்த, சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டு மனித இயக்கம் புத்தெழுச்சி பெற்று இருக்கிறது.  உலகின் முதல் மன்னன் ஹமுராபியின் தொலைநோக்கு பார்வையும், துல்லியமான சட்ட வரையறைகளும் அப்போதைய மனித இயல்புக்கு மிகவும் அவசியமாக இருந்திருக்கவேண்டும்.  கிரேக்கர்கள் மனித குலத்திற்கு அளித்துள்ள பங்களிப்புகளை மதன் எளிய மொழியில் தந்திருக்கிறார்.  பாடநூல்களில் காண நேர்ந்த தரவுகளை, மதிப்பெண்கள் குறித்த அழுத்தமின்றி அபுனைவு மொழியில் வாசிப்பது மிகவும் இனிமை அளிக்கிறது.  இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்திய வரலாற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என

தொ.ப

Image
 நீராட்டும் ஆறாட்டும் தொ.பரமசிவன் காலச்சுவடு பதிப்பகம் 159 பக்கங்கள் இச்சிறு நூலில் குறைந்தபட்சம் பக்கத்திற்கு ஒரு புதுத் தகவலையாவது தந்து பெரும் ஆச்சரியமூட்டுகிறார் தொ.ப 'மஞ்சள் மகிமை' என்ற ஒரு பக்க கட்டுரையில் வாசித்த தகவல்கள் கீழ்க்கண்டவை. விறல் என்றால் முகம், விறலி என்றால் முகபாவங்களை காட்டி நடிக்கும், நடனம் ஆடுகிற பெண்ணைக் குறிக்கும். விறலியர் முகம் பொலிவாகத் தெரிய மஞ்சள் பூசியிருக்கின்றனர். நாளடைவில் அனைத்து பெண்களும் மஞ்சளை உபயோகப்படுத்த தொடங்கிவிட்டனர். விறலியரை மதிக்காத சமூகம் விறலி மஞ்சளை மட்டும் கொண்டாடத் தொடங்கியது  என்றும் கூறுகிறார்.  விறலிமலை என்பதுதான் இன்று விராலிமலை ஆகி விட்டது என்பதும் புதுத்தகவல்.  பண்பாடு என்ற சொல்லுக்கான விளக்கத்தை ஆழ்ந்து வாசித்தேன். 'பண்பாடு தனிமனித ஒழுக்கம் சார்ந்ததன்று. பண்பாடு ஒரு சமூகத்தினுடைய வெளிப்பாடு. ஒரு மக்கள்திரள் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற முறை, சொல்லாலே, செயலாலே  தன்னை வெளிப்படுத்திக் கொள்கிற முறைக்கு பண்பாடு என்று பெயர்'.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அனைவரும் சமண மதத்தினராக இருந்தோம். சமண மதம் வலியுறுத்திய ந

வாழ்வியல்

Image
 இக்கிகய் ஹெக்டர் கார்சியா பிரான்செஸ்க் மிராயியஸ் தமிழில் பிஎஸ்வி குமாரசாமி மின்நூல் 216 பக்கங்கள்  நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென்றும், அவ்வாயுள் மகிழ்ச்சிகரமானதாக  இருக்க வேண்டும் என்றும் நினைக்காதவர் யார் இருக்கமுடியும்?  இந்நூல் நேர்மறை சிந்தனைகளுடன் உற்சாகமாக பணிகளை மேற்கொள்ளுதல், உடற்பயிற்சி, அளவான உணவு, நண்பர்கள் வட்டம் உள்ளிட்ட அனைவரும் அறிந்த தலைப்புகளை எளிய விவரணைகளுடன் வாழ்வியலாக அறிவுறுத்துகிறது. 'தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செயல்படுவதால் கிடைக்கும் மகிழ்ச்சியே இக்கிகய்' என்று வாசிக்கும்போது மிகவும் நேசிக்கும் பணிகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் விளங்கும். 'நீங்கள் உங்களுடைய சிறிய வட்டத்தை விட்டு வெளியே வரும்போது உங்களுக்கு பதட்டம் ஏற்பட்டால்கூட நீங்கள் அதைச் செய்யவே முயற்சிக்க வேண்டும்'  மேற்கண்ட வரிகளை நம்மில் பெரும்பாலானோர் வாழ்வில் கடந்து வந்திருப்போம். சௌகரியமான நிலையிலேயே தொடர்ந்து நீடித்தல் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளி விடுவதை உணரமுடியும்.  100 வயதை கடந்தவர்கள் மிக அதிகமாக வாழும் நாடு ஜப்பான் என்று அறிகையில் மிகவும் மகிழ்ச்சி. ஏனெனில் அவர்தம் ஒழுக்கமான வாழ

ராஜீவ் கொலைவழக்கு

Image
ராஜீவ் கொலைவழக்கு மர்மம் விலகும் நேரம்  மின்நூல்  339 பக்கங்கள்  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பாராளுமன்ற தேர்தல்கள் நடந்து கொண்டிருந்த தருணத்தில் 'அடுத்த பிரதமர்' என்ற ஸ்தானத்தை கருத்துக் கணிப்புகளின் வழியே அடைந்துவிட்டவர் படுகொலை செய்யப்படுகிறார். களத்தில் (அதிசயமாக) சேதமுறாத காமிராவின் 10 புகைப்படங்கள் புலன் விசாரணையை துவக்கி முன்னெடுத்துச் செல்கிறது. நாளிதழ்களில் அவ்வப்போது வாசித்து அறிந்து கொண்ட தகவல்களை நூல் வடிவில் வாசிக்கையில் 30 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது.  ஆறடி உயரத்தில், மலர்ந்த முகத்துடன் வசீகரத் தலைவராக வலம்வந்த ராஜீவின் மரணம் இந்தியாவையே உலுக்கிவிட்ட நிகழ்வு. தமிழகத்தில் அத்துன்பியல் நிகழ்வு நடைபெற்றமை மிகவும் வருத்தத்திற்குரியது.  பணி ஓய்வு பெற்று, முதன்மையான குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் மறைந்து விட்டதாக அந்நாட்டு நீதிமன்றத்தின் அறிவிப்புக்கு பிறகு புலன் விசாரணையின் முழுமையான அம்சங்கள் குறித்து ரகோத்தமன் அவர்கள் இந்நூலில் விளக்கியிருக்கிறார்.  மே 21, 1991 சம்பவம் மட்டும் தமிழகத்தில் நடைபெறாது இருந்திருந்தால், மே 17, 2009  சம

நாவல்

Image
நட்ராஜ் மகராஜ் தேவிபாரதி  காலச்சுவடு பதிப்பகம்  319 பக்கங்கள்  'ரா' என்ற எழுத்தை தனது பெயரின் முதல் எழுத்தாகவும், 'தே' என்ற எழுத்தை தனது புனைப் பெயரின் முதல் எழுத்தாகவும் கொண்ட படைப்பாளியின் எழுத்துக்களை மிகவும் விரும்பி வாசிப்பது வழக்கம். இந்நாவல் குறித்து எனது ஆசிரியர் 'கு' என்ற எழுத்தை தனது பெயரின் முதல் எழுத்தாகக் கொண்ட மொழிபெயர்ப்பாளர் 'உலகநாவல்' என்றவாறு வியந்து எழுதியிருந்தார். இது போதாதா எனக்கு? இந்நாவலை வாங்கவும் வாசிக்கும் செய்ய. 'ந' என்ற பெயரையுடைய எளிய மனிதனை மையப்படுத்தி புனையப்பட்டுள்ள நாவல் இது. அரசுப் பள்ளி ஒன்றில் அலுவலகப் பணியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்ற வகையில், பள்ளிச் சூழல் தொடர்பான விவரணைகள் தேவிபாரதியின் தொடர்ச்சியான நேரடி அனுபவங்களின் வாயிலாக 'நிழலின் தனிமை' நாவலைப் போன்றே இந்நாவலிலும் மிக யதார்த்தமாக புனையப்பட்டு இருக்கின்றன.  நாவலில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், இடங்களின் பெயர்கள் அனைத்தும் முதல் எழுத்தினால் மட்டுமே சுட்டப்படுகின்றன. துவக்கத்தில் சலிப்பை ஏற்படுத்துவது போல் தோன்றினாலும், வாசிப்பின் இ

பயணம்

Image
 இந்தியப் பயணம் ஜெயமோகன்  மின்நூல்  191 பக்கங்கள் பெருந்தொற்று வழங்கியுள்ள பொது முடக்க காலத்தில், ஊர்சுற்றல் மிகவும் குறைந்துள்ள நிலையில், பயண நூல்களை வாசித்தல் பெரும் ஆறுதலை வாசகர்களுக்கு அளிக்கக்கூடும்.  தேர்ந்த ரசனையுடன், தேர்வு செய்யப்பட்ட கோயில் நகரங்களுக்கு நண்பர்கள் சூழ ஜெயமோகன் சென்று வந்திருக்கிறார்.  நகரங்களின் பெயர்கள் பற்றிய குறிப்புகளில் இருந்து துவங்கி அவர் அளித்திடும் தகவல்கள் மனதில் காட்சிகளாய் விரிய வல்லவை.  கருவூல பணத்தைக்கொண்டு விதிகளை மீறி வீரபத்திரசாமி கோயிலை நிர்மாணித்தார் விரூபண்ணா. விஜயநகர மன்னருக்கு இத்தகவல் தெரிய வருகையில் விரூபண்ணாவிற்கு கொடியதொரு தண்டனை வழங்கப்படுகிறது.  அவரது கண்களை அவரே குத்தி குருடாக்கிக் கொள்ள கட்டளையிடப்பட்டது அவ்வாறே செய்து கொள்கிறார் விரூபண்ணா. கோயிலின் அமைவிடம் லெபாக்ஷி என்று அறியப்படுகிறது. லோப+ அஷி குருட்டு விழி என்று பொருள் என்றவாறு விளக்குகிறார்ஜெ.  'வரலாறு விசித்திரமான மீறல்களும் குரூரங்களும் தியாகங்களும் நிறைந்தது' என்றவாறு நிறைவடைகிறது அக்கட்டுரை.  பயணத்தின் பெரும் அவசியத்தை விளக்கும் ஜெ.வின் வரிகள் கீழ்க்கண்டவை.  '

நினைவுகள்

Image
 உதிரும் நினைவின் வர்ணங்கள் இளங்கோ அகநாழிகை பதிப்பகம் 144 பக்கங்கள்  திரைப்படங்களை விரும்பி ரசித்துக் காணும் ஆக சரிபாதி நபர்கள் சமகால மன அழுத்தங்களிலிருந்து தளர்த்திக்  கொள்வதற்காகவும், கொண்டாட்ட மனநிலையின் பொருட்டும் அவற்றை அணுகுகிறார்கள். விசிலடிச்சான் குஞ்சுகளின் தோற்றுவாயாக இந்நிலை உருப்பெற்றுவிடுகிறது.  வெகு நுட்பமான அவதானிப்புகள் கலைஞர்களுக்கு மட்டுமே சாத்தியமாகி விடுகிறது. பல நபர்களின் பெரும் முனைப்புடன் தயாராகும் திரைப்படங்களுக்கு அத்தகைய துலங்கல்கள் ஆறுதல் அளிக்கவும் கூடும்.  இந்நூலில் இளங்கோ வடித்திருக்கும் கட்டுரைகள் ரசிக மனதின் மேம்பட்ட நிலைக்கு சான்றுகளாக அமைகின்றன. //உண்மை சொல்கின்றவன் பலமுறை விசாரிக்கும் போது எதையாவது கொஞ்சம் மாற்றியாவது சொல்வான். ஆனால் இவன் ஏற்கெனவே கூறியதை அப்படியே திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக சொல்கின்றான். எனவே இவன் உண்மை பேசவில்லை.//  சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்து ரசித்த தமிழில் எடுக்கப்பட்ட மலையாள மறுஆக்கப் படத்தை நினைவுபடுத்திய வரிகள் மேற்கண்டவை.  உணர்வுபூர்வமாக நமது சுக துக்கங்களின் மௌன சாட்சியங்களாக விளங்கிய கல்விக்கூடங்கள், படிப்புக் காலம்