Posts

Showing posts from March, 2022

கவிதைகள்

Image
எண்ணும் எழுத்தும்  பிருந்தா சாரதி டிஸ்கவரி புக் பேலஸ் . 88 பக்கங்கள் எண்களை மையப்படுத்தி குறிப்பால் உணர்த்திவிடும் கவிதைகள் அமைந்திருக்கும் தொகுப்பு இந்நூல். 'இரட்டை மாட்டு வண்டி' கவிதையில் இடம்பெறும் கீழ்க்கண்ட வரிகள் அளித்திடும் தரிசனம் நேசத்தை உணர்த்திச் செல்கிறது. 'ஈ மொய்க்கும் என் கழுத்துப் புண் கண்டு நாவினால் நக்கி அன்பு செய்தாயே அது ஒன்று போதும் காயடிக்கப்பட்ட இவ்வாழ்வுக்கு'  நூலில் இடம்பெற்றிருக்கும் ஆர்.எம் பழனியப்பனின் ஓவியங்கள் ஆழ்ந்த உற்று நோக்கலுக்கு இட்டுச் செல்லும் தன்மையை கொண்டுள்ளவை.  புரிதலின் இன்பம் கிடைக்கும் சாத்தியங்கள் வாசகனுக்கு கிடைக்க நுட்பமான அவதானிப்பு அவசியமாகிறது.  கற்கும் பாடங்களின் மீதான ஈர்ப்பும், அடைவுகளும் வெகு இயல்பாக அமைந்து விடுகின்றன. ஒருவருக்கு பெரும் அச்சுறுத்தலை மிரட்சியை தரும் பாடம், மற்றவருக்கு விளங்கிக் கொள்ள இயலாத ஈர்ப்பைத் தந்து விடுகிறது. 'உடைக்குள் நடுங்கியது உடல்'  கணிதத் தேர்வுக்கு முந்தைய நாளின் கனவாக புனையப்பட்டிருக்கும் கவிதையில் இடம் பெற்றுள்ள வரி மேற்கண்டது. 'எண்ணும் மனிதன்' என்ற நூல் குறித்த அறிமுக

நாவல்

Image
 காயாம்பூ லாவண்யா சுந்தரராஜன் காலச்சுவடு பதிப்பகம்  383 பக்கங்கள்  தொடர்ச்சியாக விரைந்து வாசித்து எளிதில் கடந்து சென்றுவிட இயலாத துயரார்ந்த எழுத்துக்களை கொண்டிருக்கும் பக்கங்கள். அளவுகடந்த தெய்வ நம்பிக்கைகளை எழுதி செல்கையிலும், மூடநம்பிக்கைகளை, அதன் வணிக யுக்திகளை கண்டிக்கத் தவறவில்லை லாவண்யா.  வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களில் சமூகம், தனி மனிதனுக்கு கருணையின்றி அளித்திடும் அழுத்தங்களும், அதைத் தொடர்ந்த வாதைகளும் பெரும் துயரளிப்பவை.  எனது மாணவி ஒருத்தி, பதின்பருவத்தின் இறுதியிலேயே திருமணம் செய்விக்கப்பட்டு, ஓராண்டு முடிவதற்கு முன்பே பேறு காலத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.  சுகப்பிரசவமே நடைபெறும் என்று எல்லோராலும் கணிக்கப்பட்ட நிலையில் அவளது குழந்தை இறந்தே பிறந்தது என்றும், அவள் உயிர் மீண்டதே பெரும் அதிசயம் என்றும் கேள்விப்பட்டு வருந்தினோம்.  பிரசவ அறைக்குள் நுழைந்த ஆண் மருத்துவரைக் கண்டு அதிர்ந்துபோன அவள் கோபமான சொற்களை வீச, பின்பு ஏற்பட்ட களேபரத்தில் இவ்வளவும் நடந்து முடிந்தது.  இயல்பாக கிடைத்துவிட வேண்டிய பேறுக்காக நந்தினி ஆண்டுக்கணக்கில் மருத்துவம், ஆன்மீகம், ஜோதி

கட்டுரை

 நின்றசொல்  கவிதைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு விக்ரமாதித்யன்  மின்நூல் 177 பக்கங்கள்  கவிதைகளை நுட்பமாக வாசித்து உணர, தேர்ந்த வாசகரும், பெரும் கவிஞருமான விக்ரமாதித்யன் அளிக்கும் வெளிச்சமே இக்கட்டுரைத் தொகுப்பு.  படைப்புகள் குறித்த முன்முடிவுகள் ஏற்படுவது போன்று தோன்றினாலும், வாசகனுக்கு இவ்வெளிச்சம் அவசியமானது என்றே தோன்றுகிறது. "வேலை செய்து முரடேரிய உங்கள் விரல்களில் இதம்தரும் மென்மையை நான் அனுபவித்த வேளைகளை எண்ணி ஏங்குகிறேன் இன்று"  கண்டிப்பான தனது தாய் குறித்த மகளின் கூற்று மேற்கண்டது.  வலி தரும் வாழ்வை மேற்கொள்ளவும், கடக்கவும் இலக்கியம் எப்போதும் பெருந்துணையாக வந்து கொண்டே இருக்கிறது வாசகனுக்கு.  இலக்கிய வகைமைகளில் மிகக் குறைவான சொற்களைக் கொண்டு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவிடும் வல்லமை கவிதைகளுக்கே வாய்க்கப் பெற்றிருக்கிறது.  ராஜ சுந்தரராஜனின் 'அறிவுஜீவி' கவிதை கீழ்க்கண்டது. "இவர்களில் ஒருவனாய் நானும் இருந்தேன் சிறுவயதில், காலம் இடைவந்து எதை எதையோ கற்றுத்தந்தது. ஆள்மாறிப் போனேன் போலும். இன்று தெருவில் ஒரு முகமும் என்னைத் தெரிந்ததாய் இல்லை  வா என்று அழைக்க ஒர

கவிதை

Image
 'ஆண்கள் இல்லாத வீடு' கவிதைத் தொகுப்பு இமையாள் தேநீர் பதிப்பகம்  83 பக்கங்கள் புனைவு வகைமைகளில் சிறுகதை, புதினம் அளவுக்கு கவிதைகளை அதிக அளவில் வாசித்ததில்லை. வாசித்துவிட்ட சொற்ப எண்ணிக்கையிலான கவிதைத் தொகுப்பு நூல்கள் வசீகரிக்கத் தவறியதுமில்லை.  இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை அவசரமின்றி மிகவும் கவனமுடன் வாசித்து மகிழ்ந்தேன். காட்சிப் படிமங்களை உருவாக்கிடத் தவறவில்லை இக்கவிதைகள்.  பேரிடர் காலத்தின் நோயுற்ற தனிமையை நினைவுபடுத்தியது 'நோய்மை', வாழ்வின் தீராத ஏக்கங்களை, ஏமாற்றங்களை 'சுமைதூக்கி' கோடிட்டுச் சென்றது. 'போர்வைகள் விற்பவன்' பணமதிப்பிழப்பு காலத்தை உணர்த்தினான். 'ஒரு மேகத்துணுக்கில் சிறைப்பட்டிருக்கும்  நீர் துளிக்குள் ஒளிந்திருக்கின்றன, ஒரு மழைக்கால இருளும், சிறிது மண் வாசமும், ஒரு வானவில்லும்'. 'மறைபொருள்' என்ற தலைப்பிலான மேற்கண்ட கவிதை மிகவும் வசீகரித்தது.  நூல் வெளியீட்டு நிகழ்வில் கவிஞர் சுகுமாரன் வாசித்த 'மனைவியின் காதல்' கவிதை இத்தொகுப்பின் சிறப்புகளுள் மற்றுமொன்று.