Posts

Showing posts from November, 2023

சொன்னால் நம்ப மாட்டீர்கள்

Image
சொன்னால் நம்பமாட்டீர்கள் சின்ன அண்ணாமலை மின் நூல்  சிறியதும், பெரிதுமான 60 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்!' என்ற சொற்கள் இடம் பெற்று விடுகின்றன.  விடுதலைப் போராட்ட வீரராகவும், காங்கிரஸ் பேரியக்க தொண்டராகவும், தமிழ்ப் பண்ணை பதிப்பாளராகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும் வாழ்ந்து மறைந்திருக்கிறார் சின்ன அண்ணாமலை.  இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பெரும்பாலான தமிழ்நாட்டு ஆளுமைகளுடன் நல்லதொரு தொடர்பு வாய்க்கப் பெற்றிருக்கிறது இவருக்கு.  திருவாடானை சிறையிலிருந்து மக்களால் விடுவிக்கப்பட்டதிலிருந்து, தலைமறைவு வாழ்வு, பதிப்பாளராக செயல்பட்டமை என்றவாறு அவரது அனுபவங்கள் வண்ணமயமானவை.  தத்துப் பிள்ளையாக தன்னை வழங்க தந்தையார் முடிவெடுத்ததையும், அம்முடிவை உறுதியாக எதிர்க்கும் அவரது அப்பத்தா, தமது வம்சமே  ஆண்வாரிசு அற்றுப்போகும் என்று புலம்பியதையும் குறிப்பிடுபவர், தனது அப்பத்தா அஞ்சியது போன்றே நடந்து விட்டதை எண்ணி வருந்துகிறார்.  பெரியாரை விமர்சித்து அவரது மேடையிலேயே பேசி பத்து ரூபாய் சன்மானமாக வாங்கியிருக்கிறார். அறிஞர் அண்ணா முதல

கல்வி

Image
 மயிர்தான் பிரச்சினையா? கல்விசார் கட்டுரைகள் பெருமாள் முருகன்  காலச்சுவடு பதிப்பகம்  166 பக்கங்கள்  காலச்சுவடு இதழ்களிலும், அருஞ்சொல் இணைய இதழ்களிலும் பெருமாள் முருகன் கடந்த சில ஆண்டுகளாக எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.  கல்லூரி ஆசிரியராகவும், தேர்ந்த எழுத்தாளராகவும் நிலைபெற்றிருக்கும் பெருமாள் முருகன், கல்வியாளர் நிலையில் தனது  ஆதங்கங்களையும், சிந்தனைகளையும் வியக்கவைக்கும் நடுநிலையுடன் எழுதியுள்ளார்.  கல்வி வியாபாரம் குறித்த கட்டுரைகள் முகத்திலடிக்கும் உண்மைகளை தெளிவாகப் பேசுகின்றன. நஷ்டமில்லா பெருவியாபாரமாகிவிட்ட தனியார் பள்ளிகள் குறித்த தகவல்கள் கல்விப்புலத்தில் பணியாற்றுபவர்கள் அறியாதவை அல்ல.  கலகக் குரல் என்றுமே உரிய தாக்கங்களை ஏற்படுத்துவதுடன், உகந்த சந்தர்ப்பங்களில் கருணையின்றி நடத்தப்படும் அவதூறுகளுக்கும் ஏதுவாகி விடுகிறது. வெறும்  பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் இவ் வணிகர்களிடம் அறத்தை எதிர்பார்ப்பது பேதமையன்றி வேறென்ன?  ஆசிரியர் சமூகம் குறித்த பெருமாள் முருகனின் கட்டுரைகள் பெரும் எதிர்ப்புகளை அவருக்கு அளித்தும், பணியிட மாற்றம் உள்ளிட்ட தொந்தரவுகளுக்கும் ஆ