Posts

Showing posts from February, 2023

குறுநாவல்கள்

Image
 நண்பனின் தந்தை அசோகமித்திரன் நற்றிணை பதிப்பகம்  111 பக்கங்கள்  இரண்டு குறுநாவல்கள், மூன்று சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நூல் இது.  மிக மிக இயல்பான எளிய வார்த்தைகளைக் கொண்டு பெரும் புனைவை படைத்துவிடும் வல்லமை வாய்க்கப்பெற்றவர் அசோகமித்திரன்.  தயக்கம் நிறைந்த, கோழைத்தனம் கொண்ட கதை மாந்தர்கள் அவரது புனைவுகளில் நிலைபெற்றிருக்கிறார்கள்.  'ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே எப்படி ஒரு மனிதரை விழுங்க முடியும்?'  பிறப்பதற்கு முன்பே அப்பாவை இழந்து விடுகிற குழந்தைக்கு தமிழில் கடுமையான சொற்களில் அளிக்கப்படும் வசை குறித்த கவலை தோய்ந்த வரி மேற்கண்டது.  பணியாளனை கொதிக்கும் சோப்புக்கூழில் தள்ளிக் கொன்றுவிடும் மேற்பார்வையாளன், நள்ளிரவில், மழையில் இல்லம் தேடிவந்த பெண்ணை பத்திரமாக அவளது இருப்பிடத்தில் சேர்த்துவிட்டு வரும் பெண் என 'பம்பாய் 1944' குறுநாவல் மானிடரின் வன்மம் கருணை குறித்து உரையாடுகிறது.  புரிந்து கொள்ளவே இயலாத தொடர் நிகழ்வுகள், நம்ப முடியாத திருப்பங்கள் எனச் செல்லும் தனிநபர் வாழ்வில் இலக்கியவாசிப்பு பெரும் ஆசுவாசமாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் நீடிக்கிறது.  அசோகமித்திரனின் எழுத்து

மொழிபெயர்ப்பு

Image
இருட்டியபின் ஒரு கிராமம்  தமிழில் ஜி குப்புசாமி  வம்சி பதிப்பகம்  360 பக்கங்கள்  உலகின் குறிப்பிடத்தகுந்த 15 எழுத்தாளர்களின் 20 சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது.  தனது கலை வாழ்வின் உச்சத்தை அடைந்த படைப்பாளி,நம்ப முடியாத வீழ்ச்சியையும் அடைந்து, நிசப்தத்தை இசையின் மற்றுமொரு வடிவமாக எடுத்துக்காட்டி வாதிடும் கதை 'நிசப்தம்'. உண்மையை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வெளிப்படுத்தலாம் என்கிறான் அக்கலைஞன்.  சூதாட்டக்காரனாகவும், பெருந்தீனிக்காரனாகவும் அறியப்படும் தெலாகூ, நகராட்சி அறிமுகம் செய்யும் குளியலறை திட்டத்தின் 40 சந்தாதாரர்களில் ஒருவராகிறார். ஒவ்வொருவரும் மரணம் அடைகையில் அவருக்குரிய வட்டித்தொகை உயிருடன் நீடிக்கும் பிற சந்தாதாரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. தெலாகூ பிறர் மரணத்தை விரும்பி எதிர் நோக்குகிறார்.  இளமைப் பருவ தன்னம்பிக்கைக்காரர்கள், வாலிப வயதிலும், தொடர்ந்த முதிய வயதிலும் வாழ்வின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் தளர்ந்து விடுவதை நினைவுபடுத்துகிறார் 'இருட்டியபின் ஒரு கிராமம்' கதையில் வரும் பிளெட்சர்.  அசோகமித்திரன் கதை ஒன்றில் குழுவாக சிறுவயதில் விளையாடியவர்கள்,

கட்டுரைகள்

Image
 பல்வங்கர் பலூ மின்நூல் 112 பக்கங்கள் கிரிக்கெட் தோன்றிய வரலாற்றிலிருந்து ஆரம்பித்து, இந்தியாவில் மத அடிப்படையில் குழுக்கள் தோன்றியமை, ஆங்கிலேயர்களின் மேலாதிக்கம், ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீதான வன்மம் வரை விளக்கிச் செல்லும் நூல் இது. முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று திறமையாகப் பங்களித்த பலூவின் சாதனைகள் குறித்த பதிவுகள் மறைக்கப்பட்டிருப்பது மிகவும் கொடுமை. மூன்று ரூபாய் மாத சம்பளத்திற்கு மைதானத்தைப் பெருக்கி சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் பலூவை கிரிக்கெட் வசீகரித்ததில் ஆச்சரியம் இல்லை.  ஆங்கிலேயர்களுக்குப் பந்து வீசி பயிற்சி தந்து உதவி அவர் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.  இந்து கிரிக்கெட் கிளப்பின் தொடர் தோல்விகள் அவருக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தபோதும் தரையில் அமர வைத்து உணவு அளித்ததும், மைதானத்திற்கு வெளியே மண் குவளையில் தேநீர் அளிக்கப்பட்டதையும் வாசித்த போது மனம் கனத்தது.  பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு அளிக்கும் பிற்போக்கான அன்றைய சமூகக் கட்டமைப்பை நினைக்கையில் கலக்கம் ஏற்படுகிறது.  வினோத் காம்ப்ளி, நடராஜன் போன்ற வீரர்களுக்கு இயல்பான திறமைகள் இரு