Posts

Showing posts from August, 2021

தாலிபன்

Image
 தாலிபன்   பா ராகவன்  மின்நூல்  325 பக்கங்கள்  சுதந்திரத்தின், ஜனநாயகத்தின் மேன்மைகளை அவற்றைப் பெற முடியாமல் தவற விட்டுவிட்ட நாடுகளே நமக்கு உணர்த்துவதாக அமைந்துவிடுகின்றன. அத்துமீறல்களும், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் ஆப்கனில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை அறிகையில் மனம் மிகுந்த துயரம் அடைகிறது.  பா ராகவனின் 9/11, 'ஓப்பன் டிக்கெட்' உள்ளிட்ட நூல்களை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தது உண்டு. தாலிபன்கள் குறித்த தகவல்களை மிக அழகாக செய்நேர்த்தியுடன் கோர்த்து, அலுப்பு ஏற்படுத்தாத மொழிநடையில் அளித்திருக்கிறார். தீவிர இலக்கிய வாசிப்புகளுக்கு இடையில் முன்பெல்லாம் 'சுஜாதா', 'மதன்' ஆகியோரின் நூல்களை வாசிப்பது போன்று இந்நாட்களில் பாராவின் நூல்களின் வாசிப்புகள் அமைந்துவிடுகின்றன.  மத அடிப்படைவாதம் தலைதூக்குகையில், மக்கள் அடைய நேரிடும் துன்பங்களுக்கு அளவே இல்லாமல் போய்விடுகிறது. கல்வி மறுக்கப்படும் சமூகம், வளர்ச்சி பெறவும் வழியின்றி, மூளைச்சலவை செய்யப்பட்டு, மிக சுலபமாக பலிகடாக்கள் ஆக்கப்பட்டு விடுகின்றனர்.  தீவிரவாதம்  எத்தரப்புக்கும் நன்மை அளிக்கப் போவதில்லை. வளர்ச்சியை

திலக மகரிஷி

Image
 திலக மகரிஷி  வ உ சி  பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி  காலச்சுவடு பதிப்பகம்  184 பக்கங்கள்  பெரிதும் பரிச்சயமான சொல்லாடல்களான 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' போன்றவற்றின் மூலமாக இளம்வயது முதல் தற்போது வரை அறியப்பட்டிருக்கும் வ.உ.சி அவர்கள், தமது அரசியல்குரு லோகமான்ய திலகர் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  வரலாற்று பாடங்களில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 'தீவிரவாதிகள்', 'மிதவாதிகள்' என்ற இருவகையான அணியினர் அவரவர் நம்பிய வழியில் செயல்பட்டு இருந்தமை குறித்து அறிந்திருப்போம்.  சுதந்திரத்திற்குப் பிறகு இன்றுவரை மிதவாதத் தலைவர்களே பெரிதும் மக்களால் நினைவு கூறப்படுகிறார்கள். 'அமிதவாதிகள்' மற்றும் 'தேசியவாதிகள்' என்று தமது அணியினர் குறித்து பெருமிதத்துடன் குறிப்பிடும் வ.உ.சி, திலகரின் பங்களிப்புகளை நெகிழ்வுடன் முன்வைக்கிறார்.  மிதவாதிகளை கோழைகள் என்றும், காங்கிரஸ் கூட்டங்களில் அவர்தம் ஆதிக்கம், திலகரை உரையாற்றவிடாமல் இடையூறு செய்தமை, அன்னிபெசன்ட் அம்மையார் உடன் தனக்கு ஏற்பட்ட பிணக்கு, உள்ளிட்ட நிகழ்வுகளை இலக்கி

கவிதைகள்

Image
பிரபஞ்சப் புயல்  தி.கோவிந்தராசு  156 பக்கங்கள்  கடந்த ஒன்றரை வருடங்களாக புரட்டிப் போடப்பட்ட துயர்மிகு மனித வாழ்வை கவிதைகளில் படைத்திருக்கிறார் கோவிந்தராசு.  90 வயது நிறைவடைந்த முதியவர் கூட இப்படியொரு காலத்தை கடந்து வரவில்லை என்று கூறியது நினைவுக்கு வருகிறது. காண நேரிட்ட அவலங்கள் அனைத்தும் எளிய சொற்களில், சிறுசிறு வரிகளில் புனையப் பட்டிருக்கின்றன.  தம்முயிரை துச்சமெனக் கருதி பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என இப்பேரிடர் காலத்தில் ஓயாது உழைத்து வரும் அனைவரையும் போற்றத் தவறவில்லை இக்கவிதைகள்.  அன்பு கொண்டிருந்தவர்களின் நம்பமுடியாத மரணங்கள் ஏற்படுத்திவிட்ட, பெரும் அச்சம் சூழ்ந்த தருணங்களையும் நினைவுபடுத்திவிட்டன இப்புனைவுகள்.  'பஞ்சம் பிழைக்கப் போனவன்  பாதம் கிழிய நடக்கின்றான்'  இக் கவிதையை வாசித்தபோது தண்டவாளங்களில் சிதறிக்கிடந்த சப்பாத்திகள்தான் நினைவுக்கு வந்தன.

வந்தவாசிப்போர் 250

Image
 வந்தவாசிப் போர் 250  மு.ராஜேந்திரன் அ.வெண்ணிலா  அகநி பதிப்பகம்  168 பக்கங்கள்  'பயணங்களின் தூக்கத்தில் நழுவிவிடும் நிலக்காட்சிகளைப்போல் அவரவர் தம் சொந்த மண்ணின் வரலாற்றை நழுவவிட்டுக் கொண்டிருக்கிறோம்'  வெண்ணிலாவின் மேற்கண்ட கவித்துவமான வரி நூலின் எதிர்பார்ப்புகளை கூட்டிவிடுகிறது. 'வாழ்ந்து கெட்டவன் ஊரோடு ஒட்டமாட்டான்' என்ற மு.ராஜேந்திரன் அவர்களின் வரி, வந்தவாசி நகருக்கு கச்சிதமாகப் பொருந்தி விடுகிறது. விலைவாசி சற்றே குறைந்த, எளிய மனிதர்களின் நகரமான வந்தவாசியின் மீது எனக்கு எப்போதும் ஒரு வாஞ்சையுண்டு.  அரசுப் பணிக்கு வந்த ஆரம்ப நாட்களில், தொகுப்பூதிய காலங்களில், வெறும் 50 ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் பயிற்சிகளுக்காக மதுராந்தகத்தில் இருந்து 40 ரூபாய் பேருந்து கட்டணம் செலவழித்து வந்தவாசியைக் கடந்து அம்மையப்பட்டு வரை சென்று வந்திருக்கிறேன்.  மீதமாகும் பத்து ரூபாய்க்கு வந்தவாசி பேருந்து நிலையத்தில் வாழைப் பழங்கள் வாங்கி வருவது எனது வழக்கம். அன்றைய நாட்களில் 24 பழங்கள்(!!!!) பத்து ரூபாய்க்குத் தருவார்கள்.  அது போன்ற ஒரு பயிற்சி நாளில்தான் வெண்ணிலா அவர்களை சந்தித்து உரையாடிய

நாளை வெகுதூரம்

Image
நாளை வெகுதூரம்  சமகால உலகச் சிறுகதைகள்  தமிழில் ஜி குப்புசாமி உயிர்மை பதிப்பகம்  216 பக்கங்கள்  'எனது இன்மையின் மூலம் மட்டுமே நான் அங்கீகரிக்கப்பட விரும்புகிறேன்' என்ற தொமினிக் விதால்யோவின் கூற்றை வழிமொழியும் மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி அவர்களின் இந்நூலை வாங்குவதற்காகவே மூன்று ஆண்டுகள் பெரும் பிரயத்தனத்துடன் தேடினேன்.  'நாளை வெகு தூரம்' என்ற இந்நூலின் தலைப்பு எனது வாசிப்பிற்கும் மிகக் கச்சிதமாக பொருந்தி விட்டது. ஜூலை 28-ஆம் தேதி வாசிக்க ஆரம்பித்து, ஆகஸ்ட் 21 இல் தான் நிறைவு செய்ய முடிந்தது. இந்நூல் தற்போது எனது கண்களுக்கு அபாயகரமான 'எச்சி எடிகா' பாம்பாகவே காட்சியளிக்கிறது.  கலைஞர்கள் சந்தேகத்திற்கிடமின்றி பெருமகிழ்வுடன் கொண்டாடப்பட வேண்டியவர்கள். லௌகீக சிந்தனைகளில் துயருடன் மூழ்காத அளவுக்கு அவர்களை பாதுகாக்க வேண்டியது, கலையை நேசிப்பவர்கள், கலையால் பயன் அடைபவர்கள் கடமையே ஆகும். ஜூலியன் பார்ன்சின் 'நிசப்தம்' கதை உணர்த்தியது மேற்கண்ட வரிகளை.  'எப்போதும் நினைவில் வைத்திருங்கள். உலகத்தின் எந்த நகரத்திலும் விமர்சகன் எவனுக்கும் சிலை வைத்திருக்கவில்லை'

ஒற்றை வைக்கோல் புரட்சி

Image
  ஒற்றை வைக்கோல் புரட்சி  மசானபு ஃபுகோகா தமிழில் நம்மாழ்வார்தாசன் மின்நூல்  202 பக்கங்கள்  எதுவும் செய்யத் தேவையற்ற வேளாண்மையை முன்னெடுத்த மசானபு புகோகாவின் இயற்கை விவசாயம் குறித்த எளிய, ஆச்சரியமளிக்கும் கருத்துகளைக் கொண்டிருக்கும் நூல் இது.  நிலத்தை உழத் தேவையில்லை, நீரைத் தேக்கிவைக்க வேண்டியதில்லை, ரசாயன உரங்கள் அவசியம் இல்லை என்றவாறு அவரது பரிந்துரைகள் செய்ய வேண்டாதவைகளின் குறிப்புகளாகவே உள்ளது. 'ஒன்றைத் தனதாக்கிக்கொள்ள முயற்சிப்பதன் மூலம் ஒருவன் ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் இழக்கிறான் என்பதை புரிந்து கொண்டுவிட்டால் இயற்கை வேளாண்மையின் அடிப்படை புரிந்துவிடும்'  ஃபுகோகாவின் சிந்தனையில் புரட்சிகரம், எளிமையுடன் கைகோர்த்து வருகிறது. பயிர்களை வளர்ப்பது மட்டும் வேளாண்மை அல்லவென்றும், மனிதர்களை வளர்த்து முழுமை பெறச் செய்வதும் அதன் பணியே என்ற கருத்து தெளிவிற்கு இட்டுச் செல்கிறது.  விதைப்புக்குப்பின் தீவனப்பயிர், வைக்கோல் பரப்புதல் போன்ற நடைமுறைகள் முயன்று பார்க்கும் ஆவலைத் தூண்டுபவை.  நுகர்வு யுகத்தின் அதீத முரண்கள், வேளாண்மையை கடுமையாக பாதித்து இருப்பதை உணரமுடிகிறது.  இயற்கை வேளா