Posts

Showing posts from July, 2022

இசை

Image
 காலத்தை இசைத்த கலைஞன் இளையராஜா80 ஜி குப்புசாமி மின்நூல் காலச்சுவடு பதிப்பகம் 37 பக்கங்கள் மனம் முழுவதும் அன்பும், மகிழ்ச்சியும் நிரம்பி வழிந்த தருணங்களிலும், நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்து வெறுத்துப் போயிருந்த நாட்களிலும் துணையாக இருந்தது ராஜாவின் இசைதான்.  பத்து வயதுகூட பூர்த்தியாகாத நாட்களில் கேட்க நேர்ந்த ராஜாவின் திரையிசைப்பாடல்கள் இவ்வளவு ஆண்டுகள் கழித்து கேட்கும்போதும் விவரிக்க இயலாத ஒருவித பரவச நிலையை உணர்த்திவிடுகிறது.  ராஜாவுடனான சந்திப்பு பற்றிய குறிப்புகள், மின்னம்பலம் கட்டுரை, தி இந்து தீபாவளி மலர் கட்டுரை என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது இச்சிறுநூல். 'ஏகாக்கிரக சிந்தனையோடு, மிக மிகக் கடுமையான உழைப்பில் தன்னைத்தானே வருத்திக்கொண்டு, தொழிலின் மீது அளப்பரிய பக்தியோடு, தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வகையில் இளையராஜா அபூர்வத்திலும் அபூர்வமான கலைஞர்தான்'.  ஜி குப்புசாமி அவர்களின் மேற்கண்ட வரிகளே ராஜாவின் மீதான அவரது பிரம்மிப்பை விளக்கி விடுகிறது.  ஒவ்வொருவரையும் ராஜாவின் ஒவ்வொரு பாடல் முழுமையாக வசீகரித்து, அகத்தில் நீங்காது நிலைபெற்று விடுகிறது.  எனக்கு அவ்வகையில் மனதை ஈர்த

வேள்வித் தீ

Image
 வேள்வித் தீ எம் வி வெங்கட்ராம் காலச்சுவடு பதிப்பகம் 175 பக்கங்கள் கண்கள், கரங்கள், கால்கள் பெரும் ஒருங்கிணைப்போடு தொடர்ச்சியாக இயங்கியாக வேண்டிய பெரும் உடல் உழைப்பைக் கோரும் பணி நெசவாளர்களுடையது.  பள்ளிக்கு சென்ற நாட்களில் தறிகளின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே சென்றதுண்டு. மதிய உணவு அருந்த அருகாமை நெசவாளர்களின் இல்லங்களுக்கு குழுவாகச் செல்வோம்.  அன்பான உபசரிப்புகளுக்கும், அக்கறை மிகுந்த அறிவுரைகளுக்கும் பஞ்சமே இல்லாத அன்பு இல்லங்கள் அவை. காலம் முழுக்க மறக்கவே இயலாத என் ஆதர்ச நாயகன் 'சுப்புராயலு வாத்தியார்' நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். வகுப்பறைக் கற்பித்தல் நேரங்களில் ஒரு நிமிடத்தையும் வீணடித்திடாத அவரது உழைப்பு நெசவுத் தொழிலால் அவர் கைக் கொண்டிருந்ததாக இருக்கலாம்.  பட்டு நெசவு தொழிலில் ஈடுபடும் கண்ணனின் போராட்டம் மிகுந்த வாழ்வினை பேசும் நாவல் இது. நன்றாகப் படித்த போதும் தமையனின் சுயநலத்தால் சிறுவயதிலேயே நெசவுத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறான் அவன்.  மழையில் தொடங்கும் நாவல் மழை பெய்து கொண்டிருக்கும் வேறொரு தருணத்திலேயே நிறைவு பெறுகிறது.  அரசியல் நிகழ்வுகள், கூலி உயர்வு போராட்டங்க

ஒரு சிறு இசை

Image
 ஒரு சிறு இசை வண்ணதாசன்  சந்தியா பதிப்பகம் 160 பக்கங்கள்  வண்ணதாசனின் 15 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். முதுமையின் தளர்வுகளை, நுண்ணிய அவதானிப்புகளை, பக்குவம் எய்திய வார்த்தைப் பிரயோகங்களை 'ஒரு தாமரைப் பூ ஒரு குளம்' கதை பேசுகிறது.  சோமுவின் மரணத்தை அறிய நேரிடும் ஜான்சி, துக்கம் மேலிட நினைவுகளுடன் நிகழ்காலத்தில் பயணிக்கிறாள். மனதிற்கு நெருங்கியவர்களின் மரணங்கள் அளித்திடும் அதிர்வுகளும், நினைவு மீட்டல்களுமாக நகர்கிறது 'எண்கள் தேவையற்ற உரையாடல்கள்' கதை.  ஆசிரியர்- மாணவர் உறவின் நெகிழ்ச்சியூட்டும் தருணங்களும், அக்கம்பக்கம் குடியிருப்பவர்களுடன் மனம் ஒன்றி அமைந்துவிட்ட நம்பவே முடியாத அபூர்வ பிணைப்புகளும் வண்ணதாசனின் கதைகளில் வாசிக்க நேர்கையில் பெருமிதமும், ஏக்கமும் தோன்றி கலங்க வைக்கின்றன. சென்ற தலைமுறையில் கிராமங்களில் சற்று வசதியான வீடுகளில் மிக விசுவாசமான பணியாளர்களை அறிந்திருப்போம். தன்வீட்டு மக்களிடம் அவர்கள் காட்டும் அன்பும், உறுதியான ஆதரவும்  இத்தலைமுறை மனிதர்கள் அறிந்திராதவை.  'சந்தனம்' இதுபோன்ற நினைவுகளை எல்லாம் சுலபமாக கிளறி விட்டு தன் போக்கில் சென்று கொண்டிர

பித்தப்பூ

Image
 பித்தப்பூ க நா சு மின்நூல் 116 பக்கங்கள் மனித வாழ்வில் பொருளீட்டுதலை முதன்மையாக கருதும் அதே வேளையில், மனித நேயத்துடனும் செயல்படுபவர்களை பிழைக்கத் தெரியாதவர்களாய், பித்துப் பிடித்தவர்களாய் கருதுகிறது நம் சமூகம்.  அது போன்ற ஒரு நபராக இருக்கிறார் பத்மநாப ஐயர். மூதாதையர் வைத்துவிட்டுப் போன சொத்துக்களை கணிசமாக குறைத்துவிடுகிறார்.  தாராள மனதுடன் அவர் தரும் விருந்துகளுக்குகூட கிண்டலும், கேலியும் மட்டுமே எதிர்வினைகளாக முதுகுப்புறம் கிடைக்கின்றன. 'ஒரு மனிதனைப் பற்றிய முழு உண்மையும் நெருங்கியிருப்பவர்களுக்குகூட பூரணமாக தெரிவதில்லை. இதில் தவறு ஒன்றும் இல்லை'.  குறிப்பிட்ட புள்ளிகளில் இணையும் மனிதர்கள் முரண்படும் தருணங்களில் சிந்திக்க வேண்டிய வரிகள் மேற்கண்டவை.  நன்கு படித்து நல்ல வேலையில் அமர்ந்து விட்ட தியாகராஜன் விபத்தொன்றில் சிக்கி புத்தி பேதலிப்புக்கு ஆளாகிறான்.  அவனது சிக்கல் அவனை முழுமையாக வீழ்த்தி விடாதபோதும், அவ்வீழ்ச்சியை அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.  பாதுகாப்பான வாழ்வு முறையை புறக்கணித்து கலை, இலக்கியம் என்று மேதமையுடன் இருப்பவர்களையும் பெரும் வியப்புடன் நினைவுகூர வைத்துவிடுக

சே குவேரா

Image
 சே குவேரா மருதன் கிழக்கு பதிப்பகம் 180 பக்கங்கள் 90களில் சேவின் படம் அச்சிடப்பட்ட டி-சர்ட்டுடன் சிலரைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் கருப்பு வண்ணப் பின்னணியில் இருக்கும் அவற்றை அணிந்திருப்பவர்கள் கம்யூனிஸ்டுகளாகவே இருப்பார்கள்.  ஒரு சில வினாடிகள் நமது பார்வையில் விழுந்தாலும் விரைவாக காண்பவரை வசீகரித்து விடும் வகையில் சேவின் முகம் அப்படங்களில் அமைந்திருக்கும்.  பகட்டான உடைகளை அணிய காதலியிடம் மறுத்துவிடும்போதும், அரசாங்க காரினை அவசரத்துக்கு பயன்படுத்திய மனைவியை கடிந்து கொள்ளும் போதும், கமாண்டர் நிலையில் இருந்தாலும் முன் களத்திலேயே பணியாற்றி காயங்களை அடைந்த போதும் சேவின் உண்மையும் மன உறுதியும் வெளிப்படுகின்றன.  லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து மீட்க நினைத்த புரட்சிக்காரனை 40 வயதிலேயே உலகம் இழக்க நேரிட்டது பெரும் துயரம்.  அர்ஜென்டினாவில் பிறந்து கியூபா விடுதலைக்கு உழைத்து, வெற்றியீட்டி, பொலிவியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சேவின் சாகச வரலாறை இந்நூல் பேசுகிறது.  பிடல் காஸ்ட்ரோவின் நம்பிக்கைக்குரிய சகாவாக இருந்தபோதும் கிடைத்த பதவியில் அமர்ந்து கொண்டு க