Posts

Showing posts from November, 2021

கதைகள்

Image
 ஆ மாதவன் கதைகள் முழுத்தொகுப்பு  நற்றிணை பதிப்பகம்  640 பக்கங்கள்  . ஆ மாதவனின் அறுபத்தி ஆறு கதைகளைக் கொண்ட முழுத் தொகுப்பு நூல் இது. நாஞ்சில் நாடனின் முன்னுரை இந்நூலின் மற்றுமொரு சிறப்பு.  தாய்மொழியான தமிழை பள்ளி அளவில்கூட கற்காதவரின் படைப்புகளில் தனித்துவம் பெருமிதத்துடன் மிளிர்கிறது. கிடைத்திருக்க வேண்டிய நியாயமான விருதுகள்கூட அவருக்கு மிக தாமதமாகவே அளிக்கப்பட்டிருக்கின்றன.  விருதுகள் அவருக்கு அளிக்கப்பட்டமையாலேயே தமது மதிப்பினை நிலைநிறுத்திக் கொண்டிருந்திருக்கும். மறுக்காமல் அவற்றை ஏற்றுக் கொண்ட செயல் அக்கலைஞனின் பெருங்குணம்.  தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா, கு. அழகிரிசாமி , தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சார்வாகன் ஆகியோரது முழுத்தொகுப்பு நூல்களை வாசித்து இருந்தபோதும் இத்தொகுப்பில்  அமைந்துள்ள கதைகள் முற்றிலும் தனித்ததொரு வாசிப்பு அனுபவம் அளித்தவை.  சாலைக் கடை  மாந்தரை புனைவில் அழகியலுடன் உலவ விட்டிருக்கிறார் மாதவன். சாலைக் கடையில் உலவித் திரியும் மாடு, நாய் முதற்கொண்டு இரந்து வாழும் மாற்றுத்திறனாளி வரை கதைகளில் வரிசைகட்டி வருகின்றனர்.  கல்லூரி நிகழ்வி

விமர்சனக்கலை

Image
 விமர்சனக்கலை க.நா.சு  மின்நூல்  177 பக்கங்கள்  புத்தக மதிப்புரைகளுக்கும், விமர்சனத்துக்குமான நுட்பமான வேறுபாடுகளை மிகத்துல்லியமான அவதானிப்புடன் அணுகும் முதல் கட்டுரையில் இருந்து துவங்கி, மொழிபெயர்ப்புக் கலை, அயல் இலக்கிய மதிப்பீடுகள் வரை க.நா.சுவின் மேம்பட்ட புரிதலுடனான பார்வையில் அமைந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  எந்த விதிக்கும் கட்டுப்படாத ஆளுமையாக, இலக்கியத்தின் எந்த ஒரு வகைமையிலும் ஈடுபடுபவர் இயங்குதல் வேண்டும் என்ற கருத்து முற்றிலும் சமரசம் அற்றவனாக கலைஞனை காணவேண்டி கூறப்படுகிறது. //எதையும் அனுதாபத்தோடு பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இலக்கியத்தில் அனுதாபம் தேவையே இல்லை. எந்த இலக்கிய ஆசிரியனுக்கும் யாருடைய அனுதாபமும், ஊக்குவித்தலும் தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது//  விமர்சனக் கலையின் மிகப்பெரும் ஆளுமையாக க.நா.சு இன்று வரை கொண்டாடப்படுவதன் காரணத்தை சற்று எடுத்துக்காட்டும் வரிகள் மேற்கண்டவை.  தமிழில் மிகவும் ஆர்வமுடன் வாசிக்கப்படும் எழுத்தாளர்களின் புனைவுகளைக் காட்டிலும், நூல் விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய அபுனைவு படைப்புகளே வாசகர்களை வாசிப்பின் அடுத்த கட்

நாவல்

Image
 கிருஷ்ணப் பருந்து  ஆ.மாதவன்  நற்றிணை பதிப்பகம்  126 பக்கங்கள்  முன்னோர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு வாழும் குருஸ்வாமி, சாமியப்பாவாகவே அறியப்படுகிறார். சுய உழைப்பில் விளையாதவை என்ற அச்சம் தனது சொத்துக்களின் மீது அவருக்கு ஏற்படுகிறது.  குறைவான வாடகைக்கு கடைகளை அனுமதிப்பதில் இருந்து, ரவி, பார்வதி, வேலப்பன்,ராணி  உள்ளிட்டவர்களிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்வதுவரை இதனை அறிய முடியும்.  அம்மு அம்மையின் ஆறுதலளிக்கும் தூயநெருக்கம், தந்தையுடன் அவளைக் காண நேர்கையில், மேகம் போன்று கலைந்து செல்கிறது.  மொட்டை மாடியில் தனியறை வசிப்பு, புத்தக வாசிப்பு என நேர்கோட்டு முறையில் செல்லும் சலனமற்ற வாழ்வு, இயல்பான மன எழுச்சிகளை உள்ளடக்கியதாகவும் புனையப்பட்டு இருப்பது சிறப்பு.  தோப்புவிளையின் மரங்களில் வந்தமரும் கிருஷ்ணப்பருந்தாகவே குருஸ்வாமியின் உள்ளுணர்வுகள் நீடிக்கிறது.  துவக்கத்தில் தனது நண்பனின் மகளை வேலப்பன் மணந்து கொள்ள உறுதியாக மறுத்து விடுபவர், தேவி கோவிலில் இருந்து வெளிப்படுகையில் புன்னகையுடன் அச்செயலை அனுமதிக்கிறார். கோயில் உட்பிரகாரங்களின் ஓவியங்கள் மீதான குருஸ்வாமியின் பெரும் ஆர்வத்தை வேலப்பன் கா