Posts

Showing posts from October, 2024

கல்வி

Image
 புத்தாக்க வாழ்வியல் கல்வி  சுனேசபுரோ மகிகுச்சி நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு   256 பக்கங்கள்  விலை ரூபாய் 205 ஜப்பானியக் கல்வியாளர் மகிகுச்சியின் கருத்துகளும் ஆலோசனைகளும் ஐந்து தலைப்புகளில் மிக விரிவாக டேல் எம் பெத்தேல் என்பவரால் தொகுக்கப்பட்டுள்ள நூல் இது.  கற்றல் கற்பித்தல் சார்ந்தும், ஆசிரியப் பணி சார்ந்தும் மகிகுச்சி  தெரிவிக்கும் கருத்துகள், வெளியாகி 100 ஆண்டுகள் ஆகிவிட்ட நூல் இது என்று எண்ணவே முடியாத அளவுக்கு செவ்வியல் தன்மையுடன் இந்நூலை எண்ண வைப்பவை.  கல்வியின் நோக்கமாக இன்பத்தை முன்னிறுத்துகையில் ஆசிரியர்களின் பணி சுலபமாவதை உணர்த்துகிறார் மகிகுச்சி. மாணவர்களிடம் வலியுறுத்தப்படும் விழுமியங்கள் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்ற கருத்து இரண்டாவது பகுதியில் இடம்பெறுகிறது.  தீர்க்கமான, சமரசமற்ற சிந்தனைகளுடன் காலம் முழுக்கப் போராடியிருக்கிறார் மகிகுச்சி.  ஜப்பானிய உயர்மட்ட அதிகார பீடங்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டும், பழிவாங்கப்பட்டும், கல்வி கற்பிக்கக் கூடாது என்ற தடைவிதிக்கப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலேயே உயிர் நீத்திருக்கிறார்.  தட்டையான சிந்தனை நிரம்பியவர்களால் மக