அனுபவப் பதிவுகள்
பின்னகர்ந்த காலம் வண்ணநிலவன் காலச்சுவடு பதிப்பகம் 359 பக்கங்கள் விலை ரூபாய் 450 இளம்பருவ வறுமை வாழ்வை, போராட்டங்களை, எதிர்நீச்சல் இட்ட தருணங்களை பாசாங்கற்ற மொழியில் மிகையின்றி சொல்லியிருக்கிறார் வண்ணநிலவன். கலை இலக்கியத்தால் உந்தப்பட்ட மனத்தைக் கொண்டு வாழ்வாதாரம் குறித்த கவலைகளுடன் அவர் நடத்திய போராட்டங்கள் நீண்டவை. தமிழகத்தின் இரட்டை நகரங்களாக அறியப்படும் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் வண்ணநிலவனின் இளமைப் பருவம் கழிந்திருக்கிறது. ஒளிவு மறைவற்ற வெளிப்படுத்துதல்களாக அவரது ஆரம்பகால வாழ்வின் பகுதிகளை நூலில் எடுத்துரைக்கிறார். இளம்பருவத்தில் மார்க்சிய ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். காலவோட்டத்தில் எந்த ஒரு அமைப்பிலும் அவரால் முழுமனதுடன் நீடிக்க இயலவில்லை. வண்ண நிலவனின் ஜீவாதாரப் பயணம் வக்கீல் குமாஸ்தா என்ற அடையாளத்துடன் துவங்கி, பல பத்திரிகைகளில் உதவியாளராக பணியாற்றி, சீரான இடைவெளிகளில் ஒவ்வொரு வேலையையும் தொடர்ச்சியாக இழந்திருக்கிறார். வறுமைக் காலங்களில் தன்னை ஆதரித்த நண்பர்களின் பட்டியலை நூல் முழுவதிலும் வெளிப்படையாக தந்திருக்கிறார் வண்ணநிலவன். எங்கெல்லாம...