Posts

Showing posts from December, 2025

நாவல்

Image
 தீரமிகு புது உலகம்  ஆல்டஸ் ஹக்ஸ்லி  தமிழில் ஜி குப்புசாமி  காலச்சுவடு பதிப்பகம்  303 பக்கங்கள் 26 ஆம் நூற்றாண்டில் நிகழ்வதாக புனையப்பட்டுள்ள துர்கற்பனை நாவல் இது. எதிர்மறை சிந்தனை நல்லது என்று எண்ணுகிறார் ஆல்டஸ் ஹக்ஸ்லி.  எதிர்காலத்தில் திணிக்கப்படும் கடுமையான சூழல்களை உறுதியுடன் எதிர்கொள்ள அவை உதவும் என்ற அளவில் அது தர்க்க ரீதியாக பொருந்தி விடுகிறது. இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நாவல் செவ்வியல் தன்மையுடன் 100 ஆண்டுகளைக் கடந்து ஹக்ஸ்லியின் சிந்தனை முன்னோடியானது மட்டுமல்ல, சாத்தியக்கூறுகள் நிறைந்ததும்தான் என்று உணர்த்துவது வியப்பானதொரு விஷயம்.  தீரமிகு புது உலகில் மனிதனின் சுய சிந்தனைகளும், இயல்பான நிகழ்வுகளும் முற்றிலுமாக தடுக்கப்படுகின்றன. செயற்கையாக ஒரு கரு, கருவேற்றம் செய்யப்பட்டு போகனாவ்ஸ்கி முறை என்று அழைக்கப்படும் கதிர்வீச்சு முறையில் 96 கருக்களாக பிரிக்கப்பட்டு கருமுட்டைகள் வளர்க்கப்படுகின்றன.  அவை ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, எப்சிலான் என்றவாறு ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவினரும்  எத்தகைய தன்மையுடன் வளர வேண்டும...