கதைகள்
ஆ மாதவன் கதைகள் முழுத்தொகுப்பு நற்றிணை பதிப்பகம் 640 பக்கங்கள் . ஆ மாதவனின் அறுபத்தி ஆறு கதைகளைக் கொண்ட முழுத் தொகுப்பு நூல் இது. நாஞ்சில் நாடனின் முன்னுரை இந்நூலின் மற்றுமொரு சிறப்பு. தாய்மொழியான தமிழை பள்ளி அளவில்கூட கற்காதவரின் படைப்புகளில் தனித்துவம் பெருமிதத்துடன் மிளிர்கிறது. கிடைத்திருக்க வேண்டிய நியாயமான விருதுகள்கூட அவருக்கு மிக தாமதமாகவே அளிக்கப்பட்டிருக்கின்றன. விருதுகள் அவருக்கு அளிக்கப்பட்டமையாலேயே தமது மதிப்பினை நிலைநிறுத்திக் கொண்டிருந்திருக்கும். மறுக்காமல் அவற்றை ஏற்றுக் கொண்ட செயல் அக்கலைஞனின் பெருங்குணம். தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா, கு. அழகிரிசாமி , தி.ஜானகிராமன், அசோகமித்திரன், சார்வாகன் ஆகியோரது முழுத்தொகுப்பு நூல்களை வாசித்து இருந்தபோதும் இத்தொகுப்பில் அமைந்துள்ள கதைகள் முற்றிலும் தனித்ததொரு வாசிப்பு அனுபவம் அளித்தவை. சாலைக் கடை மாந்தரை புனைவில் அழகியலுடன் உலவ விட்டிருக்கிறார் மாதவன். சாலைக் கடையில் உலவித் திரியும் மாடு, நாய் முதற்கொண்டு இரந்து வாழும் மாற்றுத்திறனாளி வரை ...