கிரிக்கெட்
ஆடுகளம் அரசியல் அழகியல் ஆன்மீகம் தினேஷ் அகிரா வாசகசாலை பதிப்பகம் 156 பக்கங்கள் முகநூலில் தொடர்ச்சியாக தினேஷ் அகிராவின் கிரிக்கெட் குறித்த பதிவுகளை வாசிப்பது வழக்கம். ஆழ்ந்த சொற்களைக் கொண்டு தொழில்நுட்ப நேர்த்தியுடன் அவர் விளக்கிடும் பாணி கிரிக்கெட்டை நேசிக்கும் வாசிப்பு பழக்கம் உடைய நபர்களுக்கு பெரிதும் மகிழ்வு அளிக்கவல்லது. டான் பிராட்மேன் முதல் ஜஸ்பிரித் பும்ரா வரை ஒவ்வொருவரின் ஆளுமையையும் அவர் விவரிக்கும் நேர்த்தியின் அழகியல் அவருக்கே உரியது. பொதுவாக இலக்கிய ஈடுபாடு உடைய நபர்களில் பெரும்பாலானோர் கிரிக்கெட் குறித்து ஈர்ப்பு அற்றவர்களாகவே இருப்பார்கள் என்றே நினைத்திருந்தேன். 2010களின் துவக்க ஆண்டுகளில் ஆர்.அபிலாஷின் கிரிக்கெட் குறித்த கட்டுரைகளை உயிர்மை இதழ்களில் வாசித்தபோது பெரிதும் வியந்தேன். அபிலாஷிற்குப் பின் கிரிக்கெட் குறித்த கட்டுரைகளில் தினேஷ் அகிராவின் பங்களிப்பு தொடர்ச்சியாக மெருகேறிக் கொண்டே வருகிறது. கிரிக்கெட் விளையாட்டு மீதான அதீத ஆர்வம் அதுகுறித்த உட்கூறுகளை நுட்பமாக அறிந்து தெளிய ஒருவருக்கு உதவலாம். வரலாற்று குறிப்பு...