கானகத்தின் குரல்

கானகத்தின் குரல் ஜாக் லண்டன் பெரியசாமி தூரன் 181 பக்கங்கள் உரையாடல்களே இடம்பெறாத கதை சொல்லுதல் பாணியிலேயே அமைந்திருக்கும் நாவல் இது.பூமியின் வடதுருவத்திற்கு ஆர்ப்பாட்டமின்றி நம்மை அழைத்துச் சென்றுவிடும் புனைவு. நீதிபதி ஒருவரின் பங்களாவில் சுகமாக வாழ்ந்து வரும் நாய் 'பக்', வணிகரீதியான பயன்பாட்டிற்காக திருடப்பட்டு பயிற்றுநர்களின் வசம் ஒப்படைக்கப்படுகிறது. 'பக்' போன்றே பல புதிய நாய்களும் அங்கு வண்டி இழுப்பதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றன. தடியால் பலமுறை தாக்கப்பட்டும், பழகிய மற்றொரு நாயினால் கடிபட்டும் நிதர்சனத்தை உணர்ந்து பணிந்து போகிறது 'பக்'. புதிய சூழலில் தனது செல்வாக்கினை ஏற்படுத்திக் கொண்டு அனைவரையும் வசீகரிக்கிறது. ஆடம்பரமான மாளிகை வாசத்திலிருந்து உணவுக்கு பிற நாய்களுடன் போட்டியிட வேண்டிய சூழலுக்கு தன்னை தயார் செய்து கொள்கிறது. முதலிடத்தில் நீடிக்கும் நாயுடன் பலமாக போட்டியிட்டு வென்று, அவ்விடத்தை கைப்பற்றுகிறது. பனிப்பாறைகளால் உறைந்துவிட்ட ஆற்றினூடே பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தத் தவறவில்லை இந்நூல். 'டாஸன்' பகுதியை நோக்கி ...