சொன்னால் நம்ப மாட்டீர்கள்

சொன்னால் நம்பமாட்டீர்கள் சின்ன அண்ணாமலை மின் நூல் சிறியதும், பெரிதுமான 60 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்!' என்ற சொற்கள் இடம் பெற்று விடுகின்றன. விடுதலைப் போராட்ட வீரராகவும், காங்கிரஸ் பேரியக்க தொண்டராகவும், தமிழ்ப் பண்ணை பதிப்பாளராகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும் வாழ்ந்து மறைந்திருக்கிறார் சின்ன அண்ணாமலை. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பெரும்பாலான தமிழ்நாட்டு ஆளுமைகளுடன் நல்லதொரு தொடர்பு வாய்க்கப் பெற்றிருக்கிறது இவருக்கு. திருவாடானை சிறையிலிருந்து மக்களால் விடுவிக்கப்பட்டதிலிருந்து, தலைமறைவு வாழ்வு, பதிப்பாளராக செயல்பட்டமை என்றவாறு அவரது அனுபவங்கள் வண்ணமயமானவை. தத்துப் பிள்ளையாக தன்னை வழங்க தந்தையார் முடிவெடுத்ததையும், அம்முடிவை உறுதியாக எதிர்க்கும் அவரது அப்பத்தா, தமது வம்சமே ஆண்வாரிசு அற்றுப்போகும் என்று புலம்பியதையும் குறிப்பிடுபவர், தனது அப்பத்தா அஞ்சியது போன்றே நடந்து விட்டதை எண்ணி வருந்துகிறார். பெரியாரை விமர்சித்து அவரது மேடையிலேயே பேசி பத்து ரூபாய் சன்மானமாக வாங்கியிருக...