Posts

Showing posts from June, 2024

கட்டுரைகள்

Image
 இதுதான் உங்கள் அடையாளமா? தமிழ் சினிமா, நுண்கலைகள் குறித்த பார்வைகள் அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம்  127 பக்கங்கள் விலை ரூபாய் 140 தமிழ் சினிமா குறித்த 20 கட்டுரைகள் மற்றும் நுண்கலைகள் தொடர்பான மூன்று கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  கூர்ந்த அவதானிப்புகளின் வழியே எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் அவசியம் பார்த்தேயாக வேண்டிய தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலை நமக்குத் தர வல்லவை.  பிரம்மிப்பூட்டும் அதியற்புதமான காட்சி ஊடகமான சினிமா, வணிக எதிர்பார்ப்புகளின் ஊடே சீரழிக்கப்படுவதையும், நம்பிக்கையளிக்கும் இளம் படைப்பாளிகள் ஓரிரண்டு படங்களுக்குப் பின் காணாமல் போய்விடுவதையும் இக்கட்டுரைகள் நடுநிலையுடன் விவாதிக்கின்றன.  விஷால் பரத்வாஜின் 'ஹைதர்', பிரம்மாவின் 'குற்றம் கடிதல், சார்லஸின் 'அழகு குட்டி செல்லம்' போன்ற படங்களை தவறவிட்டமை குறித்த குற்ற உணர்வை ஏற்படுத்திவிட்டன இப்படங்களைக் குறித்த கட்டுரைகள்.  பொதுவாக எம்ஜிஆர் குறித்த பார்வைகள் இருவிதமாக அமைந்திருக்கும். தெய்வ நிலைக்கு அவரை உயர்த்திவிடும் செயற்கையான பார்வை அவற்றுள் ஒன்று. குண்டடிபட்ட அவரது குரலைக் கிண்டல் செய்யும்  பார்வ

கட்டுரைகள்

Image
 நொறுங்கிய குடியரசு அருந்ததிராய் தமிழில் க.பூரணச் சந்திரன் காலச்சுவடு பதிப்பகம் 191 பக்கங்கள் விலை ரூபாய் 225 பழங்குடியினரின் நலன் சார்ந்த மூன்று கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. "தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு மாவோயிஸ்டுகள்தான் பெரும் அச்சுறுத்தல்" என்று அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பணியாற்றிய ப.சிதம்பரமும் மாவோயிஸ்டுகள் மீது அதே போன்ற பார்வையைக் கொண்டிருந்தவர். நாகரிகமான மனித வாழ்வில், ஜனநாயக தேசத்தில் பழங்குடியினர் மீதான வலுக்கட்டாயமான இடப்பெயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மிகவும் வருத்தம் அளிப்பவை. சமகால சகிப்பின்மை, மதவாதம் கோலோச்சும் சூழலிலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இக்கட்டுரைகள் பெரும் அதிர்ச்சியை அளித்தும், சாமானிய மனசாட்சியை தட்டியெழுப்புவதாகவும் அமைகின்றன.  பழங்குடியினரால் கடும் உழைப்புடன் வனத்திலிருந்து சேகரிக்கப்படும் 'தேந்து' இலைகள் கட்டு ஒன்றுக்கு மூன்று பைசாவுக்கு அந்நாட்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் செய்தபின் ஆறு பைசாவாக விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ப