Posts

Showing posts from February, 2025

கட்டுரைகள்

Image
மதுரை போற்றுதும்  ச. சுப்பாராவ் சந்தியா பதிப்பகம்  200 பக்கங்கள் விலை ரூபாய் 200 மதுரையுடனான தனது நினைவுகளை, வாழ்வை சுப்பாராவ் 23 கட்டுரைகளில் எடுத்துரைக்கிறார். வளமான, பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்திருக்கும் சுப்பாராவ், தனது பிறந்த மண் மீதான பாசத்தை, பிணைப்பை எடுத்துக்காட்டி இருக்கும் விதம் மிகவும் சிறப்பானது. மதுரையில் பாரதியார் தமிழாசிரியராக சில காலம் பணியாற்றி இருக்கிறார் என்ற குறிப்பும், மன்னர் சேதுபதி மேல்நிலைப்பள்ளி பற்றிய தகவல்களும் வியக்க வைத்தன. மன்னர் சேதுபதிக்கு கல்வி மீதான ஆர்வம் எந்த அளவுக்கு இருந்திருந்தால் தனது அரண்மனையை பகுதி பகுதியாக கல்விப் பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியிருப்பார் என்று நினைக்கையில் மெய்சிலிர்க்கிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய மதுரையின் படிப்பகங்கள், வாசிப்பில் சாமானியர்கள் மேம்பட எத்தனை வகைகளில பயன்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. சுப்பாராவின் நினைவோடைக் குறிப்புகள் நம்மையும் நமது இளமைப் பருவ காலங்களுக்கு அழைத்துச் சென்று விடுகிறது. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற அளவிலேயே ஆண்டாள் மீதான புரிதல் இதுவரை இருந்து வந்த நிலையில், ஆண்டாள்...

கட்டுரைகள்

Image
 தமிழணங்கு என்ன நிறம்? சமூகம் அரசியல் சார்ந்த கட்டுரைகள்  மு ராமநாதன் பாரதி புத்தகாலயம் 176 பக்கங்கள்  விலை ரூபாய் 170  7 தலைப்புகளில் 29 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.கருத்துச் செறிவுமிக்க கட்டுரைகள் வாசிக்க இலகுவான மொழி நடையில் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கின்றன.  நல்ல வாசகன் ஒருவன் சமூக பிரக்ஞையுடன் படைப்பு மொழியும் கைவரப் பெற்றிருந்தால் மட்டுமே இத்தகைய கட்டுரைகள் சாத்தியமாகும். ராமநாதனுக்கு குறிப்பிடத்தகுந்த கல்வி பின்புலமும், வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவமும், தேர்ந்த இலக்கிய வாசகன் என்ற தகுதியும் இருக்கிறது.  இளம் வயது சிவாஜி ரசிகனாக தன்னை அடையாளப்படுத்துபவர்,தமிழணங்கின் நிறம் குறித்தும் முற்போக்கு சிந்தனையுடன் ஆராய்கிறார். சீனர்களின் நம்ப முடியாத ஒழுக்கம் குறித்தும், பொதுவுடைமை தத்துவம்  வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ள நாடு என்ற அளவில் அந்நாட்டினைக் குறித்தும் இக்கட்டுரைகளின் மூலம் அறிய முடிகிறது. இந்திய ரயில்வேயை பொறுத்த அளவில் வடநாட்டினர் மிகுதியாக (முறையற்ற வழிகளிலும்) பயன்படுத்தினாலும், வருவாய் தென்னகத்திலிருந்தே மிகையாகக் கிடைப்பதும், ரயில்வே உ...

கதைகள்

Image
வெல்கம் டு மில்லெனியம் அரவிந்தன் 146 பக்கங்கள் காலச்சுவடு பதிப்பகம் புத்தாயிரத்து காலகட்டத்து கதைகளின் தொகுப்பான இந்நூலில் 10 கதைகள் இடம்பெறுகின்றன. கோபத்தையும், ஏமாற்றங்களையும் தன்னுள்ளேயே அடக்கி சீரிய பிம்பத்தை கட்டமைக்கும் நபர் ரயில் பயணம் ஒன்றில் தூக்கத்தில் உளறி நகைப்புக்கு ஆளாகி விடுகிறார்.  உண்மையில் நற்பெயரும், நாயக பிம்பமும் பிறரது பார்வையிலிருந்து இயல்பாக அமைந்து விடுதல் நன்று. நமக்கான மதிப்பீடுகளை நாமே வலிய முயன்று உருவாக்குதல் விபரீதங்களுக்கு இட்டுச் செல்கின்றது.  பத்மநாபன் போன்ற நபர்கள் பால்கால நண்பர்களின் சந்திப்பு போன்ற பிரத்தியேக தருணங்களில் கொச்சை மொழிகளில் பேசி சமகால அடையாளங்களை மறந்து மகிழ்ந்திருத்தலே பெரும் ஆசுவாசமாக அமைய வாய்ப்பிருக்கிறது.  கதையின் கடைசி வரியில் இருமுறை இடம்பெறும் அந்த ஒற்றைச் சொல் கதை மாந்தர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்துவதோடு கதையின் வேகத்தையும் மட்டுப்படுத்தி கச்சிதமான நிறைவுக்கு இட்டுச் சென்று விடுகிறது.  தொகுப்பின் இரண்டாவது கதை 'விருது'. புத்தாயிர காலகட்டங்களில் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும், எல்லா நிறுவனங்க...