நடைவழி நினைவுகள் II

 நடைவழி நினைவுகள் தொகுதி-2 

சி.மோகன்      

மின்நூல் 

103 பக்கங்கள்


#நகுலன் 


'எப்படி எப்படி எழுதினால் என்னை தெரிந்து கொள்ளலாம் என்றுதான் விதம் விதமாக எழுதிப் பார்க்கிறேன்'


 எட்டு நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட இலக்கிய வகைமைகள் எழுதிக் குவித்திருக்கும் நகுலன் தனிமையில் வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்ற தகவல் அறிந்திருப்போம். அவரது படைப்புகள் அனைத்தும் காவ்யா பதிப்பகம் மூலம் வெளியாகி உள்ளன என்ற தகவல் எனக்கு புதியதாக இருந்தது.


 'தனித்துவம் மிளிரும் எளிமையின் வசீகரம் நகுலன்'


 இதைவிட சுருக்கமாக, அழகாக ஒரு படைப்பாளி குறித்து கூறி விட முடியுமா? சி.மோகன் உணர்வுபூர்வமாக எழுதி இருக்கிறார் என்று தோன்றுகிறது.


#ஜி_நாகராஜன்


 விளிம்புநிலை மக்களை அசாத்தியமாக புனைவுகளில் கொண்டுவந்த ஜி.நாகராஜன், தோற்ற வசீகரமும், எழுத்து வன்மையும் ஒருங்கே கொண்டிருந்த தமிழ் இலக்கியப் பேராளுமை.


 'வாழ்வின் முட்களில்  விழுந்தேன், ரத்தம் சிந்துகிறேன்', 'இக்குளிர் சிதையில் வைத்தால் மட்டுமே அடங்கும்' கண்ணீரை வரவழைத்த வரிகள் இவை. மேதமை மிகுந்த படைப்பாளியான ஜி நாகராஜனின் வாழ்வு இன்னும் சற்று மேம்பட்டதாக அமைந்திருந்திருக்கலாம்.


#சார்வாகன்


 மருத்துவத்துறையில் கடினமான பணிச்சூழலில் நீடித்திருந்த சார்வாகன், படைத்திருக்கும் இலக்கியங்களும், மருத்துவத் துறையில் அவரது புதுமையான அர்ப்பணிப்பான பங்களிப்புகளும் என்றென்றும் மனித குலத்தால் நன்றியுடன் போற்றப்படும்.


 ஒரு நேர்காணலில் 'தொழுநோய் மருத்துவம் உங்களுக்கு இத்தனை பிடித்திருக்க காரணமென்ன? என்ற கேள்விக்கு, 'நோயினை மிகவும் வெறுப்பதால்தான் இத்துறையில் பணியாற்றுகிறேன்' என்ற அவரது பதில் அவரது உழைப்பினைச் சொல்ல வல்லது.


 'காலம் உவந்தளித்த பெருங்கொடை சார்வாகன்' என்ற மோகனின் வரி கட்டுரைக்கு முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது.


#சுந்தரராமசாமி


 இளம் எழுத்தாளர்களை அரவணைத்தல், இலக்கியத்தை முன்னெடுத்தல், கனவுடன் இலக்கிய இதழை துவக்குதல், விமர்சனங்களை பக்குவத்துடன் அணுகி எதிர்வினை ஆற்றுதல் இவைகளில் முன்மாதிரி கூறமுடியாத தனித்த ஆளுமை சுந்தர ராமசாமி.


 'அதுவரை ஆசானாக இருந்தவர், அப்போது அப்பாவாகவும் இருந்தார்'


 தனது திருமண நிகழ்வில் சு.ராவின் ஆர்வமிகு பங்களிப்பை வியந்து மோகன் இவ்வாறு கூறுகிறார்.


 அதனாலேயே சு.ராவை அறிந்தவர் அனைவரும் வேறெவரையும்விட தானே அவருடன் நெருக்கமானவர் என்று நினைத்திருக்கக்கூடும்.


 

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்