1984
1984 ஜார்ஜ் ஆர்வெல் தமிழில் க.நா.சு மின்நூல் 288 பக்கங்கள் அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிகையில் அல்லது ஒற்றை சித்தாந்தம் பரவலாக வலியுறுத்தப்படுகையில் விளைவுகள் எவ்வாறெல்லாம் அமையும்? பொய்கள் அனைத்தும் மெய்யென வலியுறுத்தப்படுவதுடன் நிற்பதில்லை. நடமாடிக் கொண்டிருப்பவர்கள் காணாமல் போகிறார்கள். வெகு சுலபமாக மறைக்கப்பட்டும் விடுகிறார்கள். 'டெலி ஸ்கிரீன்' அச்சுறுத்தும் வகையில் மக்களைத் தொடர்ச்சியாக கண்காணிக்கிறது. ரஷ்யாவில் ஆயிரக்கணக்கானோர் கூடிய நிகழ்வு ஒன்றில் அப்போதைய ஆட்சித் தலைவரின் உரையை தொடர்ந்து, பெரும் கரவொலி எழும்பியது. 10 விநாடிகள், 20 விநாடிகள், ஒரு நிமிடம் என்று கரவொலி தொடர்ந்து நீண்டுகொண்டே இருந்ததாம். யார் முதலில் கரவொலியை நிறுத்துகிறார் என்பதை கண்காணிப்பதாக அங்கு இருப்பவர்கள் அனைவரும் சந்தேகித்ததால் ஒருவரும் கரவொலியை குறைத்துக் கொள்ளவும், நிறுத்திவிடவும் தயாராக இல்லாத நிலை அது. அதே ஆட்சியாளரின் மரணத்தருவாயில் அவரது உதவியாளர் முழு வெறுப்புடன் அவரது முகத்தில் காறி உமிழ்ந்ததாகவும், எதேச்சையாக விழித்துக்கொண்ட தலைவரின் கோபத்திற்க...