மிச்சக் கதைகள்
மிச்சக் கதைகள்
கி ராஜநாராயணன்
அன்னம் பதிப்பகம்
104 பக்கங்கள்
ஏமாற்றிவிடக்கூடிய எளிமை கைவரப்பெற்ற மேதை கிராவின் கதை சொல்லலில் எப்போதும் தனித்துவமான அழகு மிளிரும்.
புதுவை இளவேனில் படம் பிடித்திருக்கும் கி.ராவின் ஒளி ஓவியங்கள் இந்நூலிற்கு மேலும் அழகு சேர்க்கிறது.
பழகும் மனிதர்கள் என்ன சாதியை சேர்ந்தவர்கள் என்பதனை ஒரு சில கேள்விகள் கொண்டே மறைமுகமாக அறிந்து கொண்டுவிடும் மனிதர்கள் எப்போதும் ஆச்சரியம் அளிக்கிறார்கள்.
முன்முடிவுகள் நெருங்கிப் பழகும் எல்லைகளையும் தீர்மானம் செய்து விடுகின்றன.
துணைவியாரின் மறைவின் பிறகான நாட்கள் கி.ராவை எவ்வளவு வருத்தி இருக்கும் என்பதனை 'மூலை' கட்டுரை வாசிக்கையில் உணரமுடிகிறது.
விருந்தின்போது முதல் பந்தியில் ஆண்கள் அமர்த்து உண்கிறார்கள். உண்டு முடித்தபின் இலைகள் அகற்றப்படவில்லை.
அவரவர் மனைவிமார் அதே இலைகளில் விருந்துண்ண தயாராகையில், அதை அறிந்த ரசிகமணி அடையாளம் தெரியாத அளவு இலைகளை மாற்றி மாற்றி வைக்கிறார்.
அவ்வகையில் புதிய இலைகளைக் கொண்டு மனைவிமார்களுக்கு அங்கு விருந்து நடைபெறுகிறது.
'மலையிலிருந்து தரையைப் பார்ப்பதும், தரையில் நின்றவாறே மலையை பார்ப்பதும் இருவேறு அழகு நிலைகள்' என்ற கி.ராவின் வரிகள் மலைக்காற்றின் வாசத்தையும் உணர்த்திச் செல்கின்றன.
பிடித்தமானவர்களின் இறந்த உடல்களை காணவியலாத தனது குணத்தை எண்ணி பெரிதும் வருந்துகிறார் கி.ரா
இரசிகமணியின் வேண்டுகோளை ஏற்று மலைகளில் சாலை அமைக்கும் தனது அரசின் முடிவை கைவிடுகிறார் ராஜாஜி.
நேரில் பேசுகையில்கூட பரிமாறிக்கொள்ள கூச்சப்படும் விடயங்களை வார்த்தைகளில் வடித்துவிடும் லாவகம் மிகவும் வியக்க வைக்கிறது.
"ஒரு நரையை ஒழிக்கனும்னு நினைச்சா 9 நரை உண்டாகிவிடும்" நரையைப் பற்றிய பழமொழி மாற்றங்களை உறுதியுடன் ஏற்றுக்கொண்டுவிடும் மனநிலையின் தேவையை விளக்குவதாக அமைகிறது.
பெரும் பொக்கிஷம் போன்ற இந்நூல் வாசிப்பு போட்டிக்கான பரிசாக இல்லம் தேடி வந்தது எனது நல்லூழ்.
வாசித்து முடித்த பின்பும் பக்கத்துக்கு பக்கம் நிறைந்திருக்கும் கிராவின் படங்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் சற்றும் அலுப்பு தட்டவில்லை.
Comments
Post a Comment