குறுநாவல்கள்
நண்பனின் தந்தை அசோகமித்திரன்
நற்றிணை பதிப்பகம்
111 பக்கங்கள்
இரண்டு குறுநாவல்கள், மூன்று சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நூல் இது.
மிக மிக இயல்பான எளிய வார்த்தைகளைக் கொண்டு பெரும் புனைவை படைத்துவிடும் வல்லமை வாய்க்கப்பெற்றவர் அசோகமித்திரன்.
தயக்கம் நிறைந்த, கோழைத்தனம் கொண்ட கதை மாந்தர்கள் அவரது புனைவுகளில் நிலைபெற்றிருக்கிறார்கள்.
'ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே எப்படி ஒரு மனிதரை விழுங்க முடியும்?'
பிறப்பதற்கு முன்பே அப்பாவை இழந்து விடுகிற குழந்தைக்கு தமிழில் கடுமையான சொற்களில் அளிக்கப்படும் வசை குறித்த கவலை தோய்ந்த வரி மேற்கண்டது.
பணியாளனை கொதிக்கும் சோப்புக்கூழில் தள்ளிக் கொன்றுவிடும் மேற்பார்வையாளன், நள்ளிரவில், மழையில் இல்லம் தேடிவந்த பெண்ணை பத்திரமாக அவளது இருப்பிடத்தில் சேர்த்துவிட்டு வரும் பெண் என 'பம்பாய் 1944' குறுநாவல் மானிடரின் வன்மம் கருணை குறித்து உரையாடுகிறது.
புரிந்து கொள்ளவே இயலாத தொடர் நிகழ்வுகள், நம்ப முடியாத திருப்பங்கள் எனச் செல்லும் தனிநபர் வாழ்வில் இலக்கியவாசிப்பு பெரும் ஆசுவாசமாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் நீடிக்கிறது.
அசோகமித்திரனின் எழுத்துக்கள் அடர் இருளின் ஒளிக்கீற்றுகள்.
Comments
Post a Comment