கட்டுரைகள்

 பல்வங்கர் பலூ

மின்நூல்

112 பக்கங்கள்



கிரிக்கெட் தோன்றிய வரலாற்றிலிருந்து ஆரம்பித்து, இந்தியாவில் மத அடிப்படையில் குழுக்கள் தோன்றியமை, ஆங்கிலேயர்களின் மேலாதிக்கம், ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீதான வன்மம் வரை விளக்கிச் செல்லும் நூல் இது.


முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று திறமையாகப் பங்களித்த பலூவின் சாதனைகள் குறித்த பதிவுகள் மறைக்கப்பட்டிருப்பது மிகவும் கொடுமை.


மூன்று ரூபாய் மாத சம்பளத்திற்கு மைதானத்தைப் பெருக்கி சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் பலூவை கிரிக்கெட் வசீகரித்ததில் ஆச்சரியம் இல்லை.


 ஆங்கிலேயர்களுக்குப் பந்து வீசி பயிற்சி தந்து உதவி அவர் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.


 இந்து கிரிக்கெட் கிளப்பின் தொடர் தோல்விகள் அவருக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தபோதும் தரையில் அமர வைத்து உணவு அளித்ததும், மைதானத்திற்கு வெளியே மண் குவளையில் தேநீர் அளிக்கப்பட்டதையும் வாசித்த போது மனம் கனத்தது.


 பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு அளிக்கும் பிற்போக்கான அன்றைய சமூகக் கட்டமைப்பை நினைக்கையில் கலக்கம் ஏற்படுகிறது.


 வினோத் காம்ப்ளி, நடராஜன் போன்ற வீரர்களுக்கு இயல்பான திறமைகள் இருந்தபோதும் அவர்கள் ஓரம் கட்டப்பட்டதை இங்கு நினைவு கூரலாம்.


 பலூவின் திறமை மற்றும் உழைப்பினால் இந்து கிரிக்கெட் கிளப்பில் அவர் நிரந்தர இடத்தை பெற்றதுடன், அவரது சகோதரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.


 சட்டமேதை அம்பேத்கர்  இந்திய கிரிக்கெட்டின் முதல் சூப்பர் ஸ்டாரான அவரைப் பாராட்டப்படுகிறார்.


 44 வயதில் தனது கடைசி ஆட்டத்தை ஆடிய பலூவிற்கு வெற்றிக்கோப்பையைக் கையிலேந்தும் வாய்ப்பும் கிடைக்கிறது.


 அணியின் சீனியராக இருந்த போதும் தலைவர் பதவி தராததைக் கண்டித்து அவரது சகோதரர்கள் கடிதம் எழுதியது, ஆட்டங்களைப் புறக்கணித்தது  போன்ற சுய மதிப்பைக் காக்கப் போராடிய செயல்கள் ஆறுதல் அளித்தவை.


 இந்தியாவிற்காக விளையாடாமல் இங்கிலாந்துக்காக விளையாடிய ரஞ்சியின் பெயரில் மிகப்பெரிய போட்டித் தொடரை நடத்துவதும், பலூ போன்ற சிறந்த வீரர்களின் சாதனைகளைப் புறக்கணிப்பதும் கோரமான, வன்மம் மிகுந்த சாதிய முகத்தின் கொடுஞ்செயல்கள்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்