வரலாறு

இந்தியாவின் சுருக்கமான வரலாறு ஜான் ஜுபர்ஸிக்கி தமிழில் அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம் 296 பக்கங்கள் விலை ரூபாய் 190 துணைக்கண்டத்தின் 5000 ஆண்டு கால நெடிய வரலாற்றை 300 பக்கங்களுக்குள் மிகவும் சுருக்கமாக தொகுத்து அளித்திருக்கிறார் ஜான் ஜூபர்ஸிக்கி. வரலாற்றை வாசித்தல் மிகவும் மகிழ்வு தரக்கூடியது. மேம்பட்ட எழுத்தில் இந்திய வரலாற்றை வாசித்தது பெருமகிழ்வு அளித்தது. 200 ஆண்டுகால காலணிய ஆட்சி குறித்து பள்ளி பாடப் புத்தகங்களில் வாசித்தது என்றபோதும், ஆர்வமிகுதியில் தேர்வு நோக்கிலன்றி வரலாற்று நூல்களை வைத்திருந்தபோது நண்பர்களின் ஏளனத்திற்கு ஆளாகியது நினைவுக்கு வருகிறது. இந்நூல் ஐயாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்று இந்திய வரலாற்றை ஜோடனையின்றி விளக்கிச் செல்கிறது. ஈர மண்ணில் எழுதி வைத்த குறிப்புகள் வரலாற்று ஆவணங்களாக மாறியது வியப்பை ஏற்படுத்திவிடுகின்றன. பாரபட்சமற்ற சமூகமாக, நகர அமைப்பில் வாழ்ந்த மக்களைக் குறித்து அறிகையில் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்காவுக்கு அடுத்து துணைக் கண்டமே மனிதர்கள் நெடு நாட்களாக வசித்த பகுதி என்பதை அறிகையில் நமது பா...