நாவல்
கடைசி புதிர்ப்பாதை அருண் ஜோஷி தமிழில் ஜி குப்புசாமி சாகித்ய அகாடமி வெளியீடு 256 பக்கங்கள் விலை ரூபாய் 325 பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தும் சோம்பாஸ்கர் இளம் தொழிலதிபராக தீர்க்கமான வணிகச் சிந்தனைகளுடன் வலம் வருகிறான். இளம் வயது தனிமைகள், தாயின் இறப்பு அவன் மனதின் அடுக்குகளில் ஆறாத ரணங்களாக அமைந்து விடுகின்றன. அவன் மீதும் அவனது நிறுவனத்தின் மீதும் கேள்விக்கு உட்பட்டிராத உரிமையும் பொறுப்புகளும் நிரம்பியவராக வருகிறார் தாப்பர். உரிமையுடன் பல தருணங்களில் பாஸ்கரை அவர் கண்டிக்கவும் செய்கிறார். துவக்கத்தில் அல்தாஃபின் மனைவியாக அறியப்படும் அனுராதாவால் பாஸ்கர் ஈர்க்கப்படுகிறான். உண்மையில் அவளைப் போன்ற இயல்புடைய பெண்ணை பெரும்பாலான ஆண்கள் விரும்பவே செய்வார்கள். இந்நிதர்சனத்தை முழுமையாக உணர்ந்திருக்கிறான் அல்தாஃப். அல்தாஃபின் நிறுவனத்தை தன்னால் மட்டுமே வெற்றிகரமாக நடத்திச் செல்ல இயலும் என நம்பும் பாஸ்கர், அந்நிறுவனப் பங்குகளை வாங்கிக் குவிக்கிறான். சதுரங்க ஆட்டத்தில் திறன் வாய்ந்த அல்தாஃப், பாஸ்கர் தரும் நெருக்கடிகளை சமாளிக்க இயலாமல் தவிக்கிறான். அனு...