தெறிகள்

 தெறிகள் 

முன்னுரைகள் மதிப்புரைகள் 

சி.மோகன் 

மின்நூல் 

99 பக்கங்கள் 


நுட்பமான பார்வை மற்றும் தீர்க்கமான சொற்களுடன் வடிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் அடங்கிய நூல் இது.


க.நா.சு அவர்களை 'தமிழ் இலக்கியச் சூழலில் 20 ஆண்டுகளை  (1945-65) நிர்மானித்த மேதை, இலக்கிய வாழ்வை கடும் தவமென மேற்கொண்ட ஞானி' எனக் குறிப்பிடுகிறார்.


 'யூமா வாசுகியின் ஓவிய பயிற்சி, கவிதை வெளியில் அவருடைய படைப்பாக்க பயணம் சிறக்க வழி அமைத்துக் கொடுப்பதாக' கூறுகிறார்.


 மிகுந்த பிரயத்தனத்துடன், விரிவான பார்வையில் அமைந்துள்ள மோகனின் எழுத்துக்கள், படைப்புகள், படைப்பாளிகள் குறித்த தெளிவான புரிதல்களுக்கு வாசகனை இட்டுச்செல்ல வல்லவை.


 'இலக்கியத்தைப் பொறுத்தவரை முன்னோரைவிட சிறப்பாக எழுதுவது என்பது அல்ல படைப்பாளியின் பிரச்சினை. அவர்கள் பார்க்காததை பார்ப்பதும் (குறைந்தபட்சம் அவர்கள் பார்க்காத விதத்திலாவது பார்ப்பது) சொல்லாததை சொல்வதும் (குறைந்தபட்சம் அவர்கள் சொல்லாத விதத்திலாவது சொல்வது) ஒரு படைப்பாளியின் செயல்பாடாக இருக்க முடியும்'.


 மேற்கண்ட வரிகளை பெரிதும் ரசித்து வாசித்தேன்.


 அறியாமையினுள் அழகியல் மறைந்திருப்பதை வெளிப்படுத்துவதாகவும் சில வரிகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.


 'மடத்தனம் அறம் சார்ந்தது. அதிகாரம் சார்ந்தது அல்ல. மடத்தனத்தின் அழிவு என்பது அறங்களின் அழிவன்றி வேறில்லை'.


 ஜெயமோகனின் புனைவுகளில் இடம்பெறும் அழகியலை, ' அறிந்த பரப்புகளில் அறியப்படாத அழகுகளை கைப்பற்ற விழையும் ஜெயமோகனின் படைப்பு மனம்' என்று நெகிழ்ந்து குறிப்பிடும்போதும், 'சில கருதுகோள்கள் வசப்பட்ட உடனேயே சற்றே ஆரவாரமான பதற்றம் அவரை ஆட்கொண்டு, கருதுகோள்களையே முடிவுகளாக முன்னிறுத்த வைத்து விடுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது', என்றவாறு விமர்சிக்கும்போதும் சமநிலை இழக்காத விமர்சகனின் குரல் மேலோங்குகிறது.


 கேளடி கண்மணி திரைப்படத்தின் திரைக்கதை நூல் வெளியீட்டில், 'நெகிழ்ச்சியில் கசிந்துருகி வாழ்வின் மேன்மையை ஸ்பரிசிக்கும் மனங்கள் நம்முடையவை' என்று தமிழ் திரையுலக ரசிகப் பரப்பின் அம்சமாக குறிப்பிடுகிறார்.


 'எதுவுமே அறியாமல் எல்லாமுமான கவிஞன் என விக்கிரமாதித்தனை குறிப்பிடுகையிலும், தமிழச்சி தங்கபாண்டியனின் இலக்கியப் பணிகளை மெச்சும்போதும், மோகனின் கனிந்த விமர்சனங்கள் வாசகனுக்கு தரும் வாசிப்பனுபவம் முற்றிலும் தனித்துவமானது.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்