கவிதைகள்
தி.கோவிந்தராசு
156 பக்கங்கள்
கடந்த ஒன்றரை வருடங்களாக புரட்டிப் போடப்பட்ட துயர்மிகு மனித வாழ்வை கவிதைகளில் படைத்திருக்கிறார் கோவிந்தராசு.
90 வயது நிறைவடைந்த முதியவர் கூட இப்படியொரு காலத்தை கடந்து வரவில்லை என்று கூறியது நினைவுக்கு வருகிறது.
காண நேரிட்ட அவலங்கள் அனைத்தும் எளிய சொற்களில், சிறுசிறு வரிகளில் புனையப் பட்டிருக்கின்றன.
தம்முயிரை துச்சமெனக் கருதி பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என இப்பேரிடர் காலத்தில் ஓயாது உழைத்து வரும் அனைவரையும் போற்றத் தவறவில்லை இக்கவிதைகள்.
அன்பு கொண்டிருந்தவர்களின் நம்பமுடியாத மரணங்கள் ஏற்படுத்திவிட்ட, பெரும் அச்சம் சூழ்ந்த தருணங்களையும் நினைவுபடுத்திவிட்டன இப்புனைவுகள்.
'பஞ்சம் பிழைக்கப் போனவன்
பாதம் கிழிய நடக்கின்றான்'
இக் கவிதையை வாசித்தபோது தண்டவாளங்களில் சிதறிக்கிடந்த சப்பாத்திகள்தான் நினைவுக்கு வந்தன.
Comments
Post a Comment