இருவேறு உலகம்

 இருவேறு உலகம் விக்ரமாதித்யன் 

மின்நூல் 

330 பக்கங்கள் 



கவிஞர் விக்ரமாதித்யன் பத்திரிகையாளராக பணியாற்றிய காலங்களில் நிகழ்த்திய நேர்காணல்கள், விமர்சனக் கட்டுரைகள் ஆகியனவற்றின் தொகுப்பு இந்நூல்.


எண்பதுகளின் மத்தியில் பல பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் இந்நேர்காணல் தொகுப்புகளில், ஆளுமைகளின் எதிர்வினைகள் ஆச்சரியம் அளிப்பவையாக உள்ளன.


 வெகுஜன இதழ்களில் கொண்டாடப்படும் ஆளுமை ஒருவரும், தீவிர இலக்கிய இதழ்களில் நிலைபெற்றிருக்கும் ஆளுமை ஒருவரும் என்ற வகையில் இரட்டைத்தன்மையுடன் இக்கட்டுரைகள் அமைந்திருத்தல் மிகவும் சிறப்பு.


'எஸ்தர்' சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்டுள்ள விமர்சனக் கட்டுரையும், கோணங்கியின் முதல் சிறுகதைத் தொகுப்பிற்கான கட்டுரையும் மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளவை.


 சமரசம் இல்லாத ஒருவித கறார்த் தன்மையுடன் இருப்பவை விக்ரமாதித்யனின் எழுத்துகள். நல்ல கலைஞனுக்கான அடையாளமாக அதுவே அமைந்துவிடுகிறது.


 கவிஞர் கலாப்ரியாவின் படைப்புகள் மற்றும் மூத்த படைப்பாளி வண்ணதாசனின் ஓவியங்கள் குறித்த தகவல்கள் வாசிக்கையில் அலாதியான மகிழ்வு தருபவை.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்