இந்திய வரலாறு
இந்திய வரலாறு
இஎம்எஸ் நம்பூதிரிபாத்
தமிழில் பி.ஆர்.பரமேஸ்வரன்
பாரதி புத்தகாலயம்
144 பக்கங்கள்
ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகக் காலங்களில் இருந்து துவங்கி இருபதாம் நூற்றாண்டின் மையம் வரையிலான இந்திய வரலாற்றை மார்க்சிய பார்வையில் பேசும் நூல் இது.
நான்கு வர்ணங்களும், சாதிய முறையும் தோன்றியமை குறித்த கட்டுரைகளும், டெல்லி சுல்தான்கள், மொகலாயர்கள் குறித்த தகவல்களும் இந்நூலின் சிறப்புகள்.
சுதந்திரத்திற்குப் பிறகான காங்கிரஸின் அணுகுமுறைகள், ஆங்கிலேயர் ஆட்சியுடனான ஒப்பீடு ஆகியன புதிய தகவல்களாக அமைகின்றன.
தென்னிந்தியாவின் தனித்தன்மை கொண்ட செழுமையான பாரம்பரியம் குறித்தும் விளக்குகிறார் தோழர்.
சிந்துவெளி நாகரிகத்திற்கு பெரும் அடிப்படையாக அமைந்த அணைக்கட்டுகளை ஆரியர்கள் தகர்த்ததும், தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியமையும் விரிவாக இந்நூலில் இடம் பெறுகிறது.
இச்சிறிய நூல் 4000 ஆண்டுகளின் இந்திய வரலாற்று நிகழ்வுகளை சுருக்கமாக விளக்கி விடுகிறது. அதுவே இந்நூலின் சிறப்புத் தன்மையாகவும் அமைகிறது.
Comments
Post a Comment