தத்துவம்


 அன்பு என்னும் கலை 

எரிக் ஃபிராம் 

தமிழில் ராஜ் கௌதமன் 

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 

147 பக்கங்கள் 


மனித மனம், சிந்தனைகள், தொடர்புகள், உறவுகள் குறித்த உளவியல் கருத்துக்களின் தொகுப்பு இந்நூல்.


"ஒன்றைச் செய்யக் கடமைப்பட்டிராதவர்களின் அன்பில் மட்டுமே அன்பு விரிகிறது" என்ற வரி, நேர்மறையான மனித மனங்களின் அன்பிற்கான விழைதலை வெளிக்காட்டுகிறது.


 தாயின் நிபந்தனையற்ற அன்பு, தந்தையின் நிபந்தனைகளுடன் கூடிய அன்பு பாராட்டல், நட்பு வட்டங்களின் இயல்புகள் குறித்த தெளிவான புரிதல்களுக்கு இக்கட்டுரைகள் எடுத்துச் செல்கின்றன.


 அன்பு காட்டுதல், நண்பர்களை அடைதல் குறித்த வழிமுறைகளை எளிமையாக இந்நூல் விளக்கும் என்று எண்ணி வாசிக்கத் துவங்கினால் பெரும் ஏமாற்றம் மட்டுமே வாசகனுக்குக் கிடைக்கும்.


 இந்நூல் தர்க்கவாதங்களுக்கு உட்பட்ட மனித மனங்களின் சிந்தனையோட்டங்களை மட்டுமே அணுகிச் செல்கிறது.


"எது வலி தருவதாக இருக்கிறதோ அதுவே நன்மையானதென்று மேற்கத்திய கருத்தாக்கம் ஒழுக்கம் பற்றி கற்பித்துள்ளது".


 தனது விருப்பு மற்றும் இயல்புகளுடன் பொருந்திவரும் நடத்தைகள் இங்கே பெரும் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவதே வழமையாகிவிட்டது.


 மிகுந்த அமைதியான சூழலில், நல்ல மனநிலையுடன், பொறுமையாக வாசித்து மகிழ வேண்டிய நூல் இது.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்