ராஜீவ் கொலைவழக்கு
ராஜீவ் கொலைவழக்கு
மர்மம் விலகும் நேரம்
மின்நூல்
339 பக்கங்கள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பாராளுமன்ற தேர்தல்கள் நடந்து கொண்டிருந்த தருணத்தில் 'அடுத்த பிரதமர்' என்ற ஸ்தானத்தை கருத்துக் கணிப்புகளின் வழியே அடைந்துவிட்டவர் படுகொலை செய்யப்படுகிறார்.
களத்தில் (அதிசயமாக) சேதமுறாத காமிராவின் 10 புகைப்படங்கள் புலன் விசாரணையை துவக்கி முன்னெடுத்துச் செல்கிறது. நாளிதழ்களில் அவ்வப்போது வாசித்து அறிந்து கொண்ட தகவல்களை நூல் வடிவில் வாசிக்கையில் 30 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது.
ஆறடி உயரத்தில், மலர்ந்த முகத்துடன் வசீகரத் தலைவராக வலம்வந்த ராஜீவின் மரணம் இந்தியாவையே உலுக்கிவிட்ட நிகழ்வு. தமிழகத்தில் அத்துன்பியல் நிகழ்வு நடைபெற்றமை மிகவும் வருத்தத்திற்குரியது.
பணி ஓய்வு பெற்று, முதன்மையான குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் மறைந்து விட்டதாக அந்நாட்டு நீதிமன்றத்தின் அறிவிப்புக்கு பிறகு புலன் விசாரணையின் முழுமையான அம்சங்கள் குறித்து ரகோத்தமன் அவர்கள் இந்நூலில் விளக்கியிருக்கிறார்.
மே 21, 1991 சம்பவம் மட்டும் தமிழகத்தில் நடைபெறாது இருந்திருந்தால், மே 17, 2009 சம்பவம் நடைபெற்று இருக்காதோ என்ற ஐயம் எழாமல் இல்லை.
அது என்ன மே 17 2009 சம்பவம்?
ReplyDeleteபிரபாகரன் இறப்பு
Delete