கவிதைகள்

எண்ணும் எழுத்தும் 

பிருந்தா சாரதி

டிஸ்கவரி புக் பேலஸ் .

88 பக்கங்கள்



எண்களை மையப்படுத்தி குறிப்பால் உணர்த்திவிடும் கவிதைகள் அமைந்திருக்கும் தொகுப்பு இந்நூல்.


'இரட்டை மாட்டு வண்டி' கவிதையில் இடம்பெறும் கீழ்க்கண்ட வரிகள் அளித்திடும் தரிசனம் நேசத்தை உணர்த்திச் செல்கிறது.


'ஈ மொய்க்கும்

என் கழுத்துப் புண் கண்டு நாவினால் நக்கி

அன்பு செய்தாயே

அது ஒன்று போதும் காயடிக்கப்பட்ட இவ்வாழ்வுக்கு'


 நூலில் இடம்பெற்றிருக்கும் ஆர்.எம் பழனியப்பனின் ஓவியங்கள் ஆழ்ந்த உற்று நோக்கலுக்கு இட்டுச் செல்லும் தன்மையை கொண்டுள்ளவை.


 புரிதலின் இன்பம் கிடைக்கும் சாத்தியங்கள் வாசகனுக்கு கிடைக்க நுட்பமான அவதானிப்பு அவசியமாகிறது.


 கற்கும் பாடங்களின் மீதான ஈர்ப்பும், அடைவுகளும் வெகு இயல்பாக அமைந்து விடுகின்றன. ஒருவருக்கு பெரும் அச்சுறுத்தலை மிரட்சியை தரும் பாடம், மற்றவருக்கு விளங்கிக் கொள்ள இயலாத ஈர்ப்பைத் தந்து விடுகிறது.



'உடைக்குள் நடுங்கியது உடல்'


 கணிதத் தேர்வுக்கு முந்தைய நாளின் கனவாக புனையப்பட்டிருக்கும் கவிதையில் இடம் பெற்றுள்ள வரி மேற்கண்டது.


'எண்ணும் மனிதன்' என்ற நூல் குறித்த அறிமுகத்தை இந்நூலின் வாசிப்பு மூலம் பெற்றேன். இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன்.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கதைகள்