கவிதை
'ஆண்கள் இல்லாத வீடு' கவிதைத் தொகுப்பு
இமையாள்
தேநீர் பதிப்பகம்
83 பக்கங்கள்
புனைவு வகைமைகளில் சிறுகதை, புதினம் அளவுக்கு கவிதைகளை அதிக அளவில் வாசித்ததில்லை. வாசித்துவிட்ட சொற்ப எண்ணிக்கையிலான கவிதைத் தொகுப்பு நூல்கள் வசீகரிக்கத் தவறியதுமில்லை.
இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை அவசரமின்றி மிகவும் கவனமுடன் வாசித்து மகிழ்ந்தேன். காட்சிப் படிமங்களை உருவாக்கிடத் தவறவில்லை இக்கவிதைகள்.
பேரிடர் காலத்தின் நோயுற்ற தனிமையை நினைவுபடுத்தியது 'நோய்மை', வாழ்வின் தீராத ஏக்கங்களை, ஏமாற்றங்களை 'சுமைதூக்கி' கோடிட்டுச் சென்றது.
'போர்வைகள் விற்பவன்' பணமதிப்பிழப்பு காலத்தை உணர்த்தினான்.
'ஒரு மேகத்துணுக்கில் சிறைப்பட்டிருக்கும்
நீர் துளிக்குள் ஒளிந்திருக்கின்றன, ஒரு மழைக்கால இருளும், சிறிது மண் வாசமும், ஒரு வானவில்லும்'.
'மறைபொருள்' என்ற தலைப்பிலான மேற்கண்ட கவிதை மிகவும் வசீகரித்தது.
நூல் வெளியீட்டு நிகழ்வில் கவிஞர் சுகுமாரன் வாசித்த 'மனைவியின் காதல்' கவிதை இத்தொகுப்பின் சிறப்புகளுள் மற்றுமொன்று.
Comments
Post a Comment