எனது ஆண்கள்

எனது ஆண்கள் நளினி ஜமீலா தமிழில் ப.விமலா காலச்சுவடு பதிப்பகம் 159 பக்கங்கள் பாமர மொழியில் தனது வாழ்வின் அனுபவங்களை, நாகரீக சமூகத்தின் அவலங்களை விளக்கிச் செல்கிறார் நளினி ஜமீலா. சிறிதும் தன்னிரக்கமற்ற பச்சாதாபம் கோராத விவரணைகள் இவை. பகடியாகவே பல நிகழ்வுகளை எழுதிச் செல்கிறார். பாலியல் தொழிலாளியாக சாலையில் நின்று வாடிக்கையாளரை பிடிப்பது முதல், தங்குமிடம் ஏதுமின்றி அலைந்ததுவரை நினைவுகூர்தல் விடுபடலின்றி தொடர்கிறது. பணத்தில் குறியாக இருந்தமை, மொட்டை மாடிகளைக் கைப்பற்றியமை போன்ற சாகசங்களுக்கும் நளினியின் வாழ்வில் குறைவில்லை. பாலியல் உணர்வு குறித்த அவரது புரிதல் கீழ்கண்டது. 'பாலியல் என்பது தேவைக்கு விழிப்பதும் தேவையில்லை என்றால் அணைந்து போவதுமான ஒன்றுதான்' முந்தைய இரவு தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட காவலர், மறுதினம் தகவல் அளித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாக துன்புறுத்தியதையும் சிறிதும் சுயபச்சாதாபமின்றி அவரால் வெளிப்படுத்த முடிகிறது. உடலியல் தேவைக்காகவே அணுகிய ஆண்களில் ஒரு சிலர் தூய காதலைக் கொண்டிருந்ததையும் மகிழ்வுடன் நினைவு கூர்...