நாவல்
கில்காமெஷ்
தமிழில் க நா சு
மின்நூல்
109 பக்கங்கள்
உலகின் மிகப்பழமையான இலக்கியமாக அறியப்படும் கில்காமெஷ் நாவல், பல அறிஞர்களின் கடினமான உழைப்பை மூலதனமாகக் கொண்டு முழு வடிவம் அடைந்து உருப்பெற்றுள்ளது.
அரசன் கில்காமெஷின் வீரம், எங்கிடு உடனான அவனது பலமான நட்பு, சாகசப் பயணங்கள் நிறைந்துள்ள நாவல் இது.
'உலகில் மக்கள் செய்கிற அநியாயங்களும், அக்கிரமங்களும், அவர்கள் போடுகிற கூச்சலும் சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது'
மேற்கண்ட வரி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளமை வியப்பை ஏற்படுத்துகிறது.
இயற்கை மனிதனால் வென்றுவிட முடியாத அளப்பரிய சக்தி என்பதை மீண்டும் நிரூபிக்கும் அம்சங்களை கொண்டுள்ளது இந்நாவலின் பகுதிகள்.
பயணமாகவே அறியப்படும் மனித வாழ்வு, அவரவருக்கான இறுதிக் காலங்களில் தருவித்துவிடும் ஆற்றாமைகள், கில்காமெஷின் வாழ்வு, மரணத்திலிருந்து இப்புனைவு எடுத்துக் காட்டுபவை.
வாசித்துவிட்ட உலக இலக்கியங்களை மிகுந்த ஆர்வத்துடன் தமிழுக்கு கொண்டு சேர்த்திருக்கும்
க நா சுவின் இலக்கிய பணிகள் வணக்கத்திற்குரியவை.
Comments
Post a Comment