நிதி
சிக்கனம் சேமிப்பு முதலீடு சோம வள்ளியப்பன் கிழக்கு பதிப்பகம்
118 பக்கங்கள்
ஈட்டிய வருவாயை முறையாக, அவசியம் உள்ள வகைகளில் செலவழித்தல், குறிப்பிட்ட சதவீதம் சேமித்தல், சாதுரியமாக முதலீடு செய்தல் குறித்து சோம. வள்ளியப்பன் இந்நூலில் இருபத்தி மூன்று கட்டுரைகளில் விளக்குகிறார்.
தீவிர இலக்கிய வாசிப்புகள் தந்திடும் மனச்சோர்வினை, இலகுவான வாசிப்புகளின் வழியே குறைத்துக் கொள்ள இது போன்ற நூல்கள் துணைபுரிகின்றன.
நேர்வழியில் உழைத்து படித்து, தகுதிக்குரிய வேலை வாய்ப்பினையும் பெற்றுவிட்ட நபர்கள், அவர்களின் நிதிநிர்வாகம் குறித்த புரிதல்கள் இன்றி, சிக்கல்களை, தமக்கும், தம்மைச் சார்ந்தவர்களுக்கும் தோற்றுவித்துவிடும் விந்தைகளை நாம் காண நேரிடுகிறது.
தாம் ஈட்டிய செல்வத்துடன் சேர்த்து, தமது பெற்றோரின் வாழ்நாள் சேமிப்பு மற்றும் சொத்துக்களையும் சில ஆண்டுகளில் இழந்து விடுகின்றனர்.
இச் சிறுநூல் அத்தகைய இளம் தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கக் கூடியது.
தினமணியில் சோம. வள்ளியப்பனின் நடுப்பக்க கட்டுரைகளை விரும்பி வாசித்தது உண்டு.
ஆரம்பநிலை வாசகருக்கு இந்நூல் இனியதொரு வாசிப்பு இன்பமும் அளிக்க வல்லது.
Comments
Post a Comment