கவிதைகள்
நீரில் அலையும் முகம்
அ.வெண்ணிலா
அகநி வெளியீடு
64 பக்கங்கள்
கடந்து செல்லும் இயல்பான தருணங்களின் நிகழ்வுகள் கவிதைகளாய் மலர்கின்றன வெண்ணிலாவின் புனைவில்.
சாலையோர மரத்தின் அழிப்புக்காக ஒரு கவிதை வருந்தினால், மாநிறத்தின் இயல்பை மற்றொரு கவிதை பகடி செய்கிறது.
பெண் குழந்தைகள் மீதான சார்புகளுடன் கூடிய பார்வையை எடுத்தாளும் கவிதைகளும் உண்டு இத்தொகுப்பில்.
குழந்தைகளுக்கு கற்பிக்கும்போதுதான் புதிது புதிதாக நாமும் கற்றுக் கொள்கிறோம் என்பதை உணர்த்திய கவிதை கீழ்கண்டது.
'சூரியன் பார்த்திருக்கிறேன் நட்சத்திரங்களையும்
பூக்களையும்
பனித்துளியையும் கூட
அத்தனையையும்
என் மகளுக்கு அறிமுகப்படுத்தி ரசிக்கையில்தான்
புரிந்தது
இத்தனை நாட்கள்
வெறும் பெயர்களாக மட்டும்
அறிந்து வைத்திருந்தேன் என்று'
சிறப்பான கவிதைகள் இடம்பெற்றிருக்கும் வாசிக்க வேண்டிய நூல் இது.
Comments
Post a Comment