கடிதங்கள்
கனவிருந்த கூடு அ.வெண்ணிலா
அன்புநிலா பதிப்பகம்
64 பக்கங்கள்
தேர்ந்த இரு படைப்பாளிகளின் (அ.வெண்ணிலா -மு.முருகேஷ்) திருமணத்திற்கு முன்பான காதலும், நட்புணர்வும் மிகுந்திருந்த நாட்கள் குறித்த பதிவுகள் இவை. வெண்ணிலா முருகேஷிற்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல்.
'ஒரு கன்னி மனசில் காதல் அரும்பி அது கல்யாணத்தில் முடிகிற வரைக்கும் உள்ள கடிதங்கள்' என்றவாறு முன்னுரையில் கி.ரா வாழ்த்துகிறார்.
'கனவிருந்த கூடாயினும், நனவிருக்கும் வீடாயினும் வாழ்வுதான் ஒரே உண்மை. வாழ்க்கையில் எதையும் நிரூபிக்க அவசியமில்லை. முக்கியமாக மேலான உறவுகளை'
கல்யாண்ஜியின் வாழ்த்து வரிகள் மேற்கண்டவை.
சந்திப்பு ,புரிதல், விரும்புதல், திருமணம் என்றவாறு நளினமான கூறுகளை உள்ளடக்கி உள்ளன இக்கடிதங்கள்.
சுயமரியாதைத் திருமணம், வாசிப்பு, எழுதுதல் என்றவாறு செல்லும் கடிதங்களில் மெல்லிய உணர்வுகளுக்கும், பொங்கி வழியும் அன்பிற்கும் குறைவில்லை.
இரு நபர்களுக்கு இடையிலான கடிதங்கள் என்ற எல்லைகளைக் கடந்து காத்திரமான இலக்கியமாக உருப்பெற்று விடுகிறது இந்நூல்.
Comments
Post a Comment